ஜெயலலிதா அம்மையாரின் ஜாதகம்.

மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நாம் பார்க்கவிருக்கும் ஜாதகம் நம்முடை தமிழக முதல்வர் மரியாதைக்குரிய ஜெயலலிதா அம்மையார் அவர்களுடையது. தற்போது அம்மையாரின் நிலை என்ன? இவர் குணமடைவாரா? மாட்டாரா? இவரது உடம்பில் எந்த உறுப்பு முக்கியமாக பாதிக்கப்பட்டுள்ளது? என்பதையெல்லாம் தெளிவாக பார்க்கவிருக்கிறோம்.


24-ம் தேதி பிஃப்ரவரி மாதம் 1948-ம் வருடம் செவ்வாக்கிழமை பகல் 02 மணி 33 நிமிடம் 49 நொடிக்கு, பௌர்ணமி திதியில், மகம்-3ம் பாதம் நச்சத்திரத்தில், கேது தசா இருப்பு 03 வருடம் 05 மாதம் 27 நாள் இருக்க மைசூரில் பிறந்துள்ளார். 
முதலில் அம்மையாரின் 12 பாவக வலிமைகளை ஆராய வேண்டும்:
வலிமை பெற்ற பாவகம்: 

2,4,8,10,11 ஆகிய பாவகங்கள் நல்ல வலிமை பெற்ற பாவகங்களாகும். அம்மையாருக்கு நடக்கும் திசா, புத்திகள் இந்த பாவகத்தின் பலனை செய்யும் போது மிகப் பெரிய வெற்றி வாய்ப்புகளையும் நல்ல முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

வலிமை பெற்று உடல் நலனிற்கு மட்டும் பாதகம் விளைவிக்கும் பாவகம்: 

1,3,5,6,9 ஆகிய பாவகங்கள் அனைத்து விதமான நன்மைகளையும் வழங்கினாலும் உடல்நலத்தில் வயது ஆக ஆக மிகப்பெரிய பிரச்சனைகளை வாரிவழங்கி கொண்டே இருக்கும் இறுதியில் அதுவே உயிருக்கும் உலைவைக்கும்.

அம்மையாருக்கு நடக்கும் திசா, புத்திகள் இந்த பாவகத்தின் பலனை செய்யும் போது நல்ல ஆதரவு நிலை, எதிரிகளை எதிர்கொள்ளும் வழிமுறை, தேர்தல் வெற்றி,  வழக்குகளில் வெற்றி, நல்ல நிர்வாகம் செய்யும் மனநிலை என நன்மைகளை செய்யும் அதே வேளையில் உடல் நிலையிலும் பாதகத்தை ஏற்படுத்தும்.


வலிமை இழந்த பாவகம் : 

12-ம் பாவகம் ஆகும். அம்மையாருக்கு நடக்கும் திசா, புத்திகள் இந்த பாவகத்தின் பலனை செய்யும் போது முழுமையான தீமையை மட்டுமே சந்திபார்.

பாதக ஸ்தானத்துடன் தொடர்பை பெற்று மிகவும் வலிமை இழந்த பாவகம்: 

களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் பாவகம் ஆகும். அம்மையாருக்கு நடக்கும் திசா, புத்திகள் இந்த பாவகத்தின் பலனை செய்யும் போது யாருடைய ஆதரவும் இருக்காது, இவர் யாரையும் மதிக்க மாட்டார், களத்திர வழியாக இவரே பாதகத்தை ஏற்படுத்திக் கொள்வார். எதிரிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும்.

ஜெயலலிதா அம்மையாரின் 12 பாவக வலிமைகளை நன்கு கணிதம் செய்து அறிந்து கொண்டோம். இனி இவருக்கு நடந்த திசை மற்றும் நடந்து கொண்டிருக்கும் திசா புத்திகள் வழங்கிய பலன், வழங்கி கொண்டிருக்கும் பலன்களை கணிதம் செய்ய வேண்டும்.

வயது வாரிய நடந்த, தற்போது நடக்கும் திசைகளின் விவரம்:

03 - வயது வரை கேது திசை:

கேது திசையில் 2,4,8,10 ஆகிய பாவகத்தின் பலனும் 07 மற்றும் 3,6 ஆகிய பாவகங்களின் பலனும் நடந்திருக்கிறது. இதில் 2,4,8,10 ஆகிய பாவகங்கள் நல்ல நிலையில் பலம் பெற்று இருப்பதால் நன்மையான பலனை செய்திருக்கும். 3,6,7 ஆகிய பாவகங்கள் பலம் இழந்த நிலையில் இருப்பதால் தீமையான பலனையும் அனுபவித்து இருப்பார். எனவே கேது நன்மை தீமையென இருவிதமான பலனை செய்திருக்கிறது.

(குறிப்பு: அனைத்து திசைகளிலும் என்ன நன்மை அனுபவித்தார், என்ன தீமை அனுபவித்தார் என்பதையும் தெளிவாக சொல்ல முடியும் இருப்பினும் கட்டுரையின் அளவு நீண்டு கொண்டே போகும் என்பதால் நன்மை தீமை என்ற வார்த்தையுடன் முடிக்கிறேன்.)‌

23 - வயது வரை சுக்கிர திசை:

சுக்கிர திசையில் 2,4,8,10 ஆகிய பாவகங்களின் பலன் நடந்திருக்கிறது. இந்த பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் சுக்கிர திசை முழுவதும் நன்மையான பலனை சந்தித்திருப்பார்.

29 - வயது வரை சூரிய திசை:

சூரிய திசையில் 1,5 ஆகிய பாவகங்களின் பலன் நடந்திருக்கிறது. இது நன்மையை செய்யும் அதே வேளையில் நரம்பு மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி இருக்கும்.

39 - வயது வரை சந்திர திசை:

சந்திர திசையில் 2,4,8,10 ஆகிய பாவகத்தின் பலனையும் 1,5 ஆகிய பாவகத்தின் பலனையும் நடத்திருக்கிறது. நல்ல நன்மைகளையும் அனுபவித்த அதே வேளையில் உடல் நலனில் அக்கறை செலுதாமல் இருந்திருப்பார்.

(குறிப்பு: நன்மை என்றால் சினிமா மற்றும் அரசியல் துறையில் நன்மை என்று அர்த்தம். தீமை என்றால் உடல் நிலை, மற்றும் எதிரிகள், வழக்கு என்று அர்த்தம்.)

46 - வயது வரை செவ்வாய் திசை:

செவ்வாய் திசையில் 3,6 ஆகிய பாவகத்தின் பலனை சந்தித்துள்ளார். இந்த பாவகம் இளைய சகோதரம் என்ற போர்வையில் இருப்போறாள் வம்பு வழக்கை கொடுத்து வெற்றியையும் கொடுக்கும். இருப்பினும் இந்த பாவகங்கள் நீர் ராசியுடன் சம்மந்தம் பெருவதாலும், அதனை புதன் வழி நடத்துவதாலும் சல்லி நரம்பு மண்டலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உடல் நிலையை கவனத்தில் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறது.

64 - வயது வரை ராகு திசை:

ராகு திசையில் முழுமையாக இலாப ஸ்தானத்தின் (11) பலனை சந்தித்துள்ளார். இந்த 11ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பதாலும் மேலும் மேஷ ராசியில் இருப்பதாலும் வெற்றி மேல் வெற்றியை சந்தித்திருப்பார், உடல் நலம் சீராக இருக்கும், அதிகார தோரணையின் உச்சத்தை அடைய வைத்திருக்கும். ராகு ஒரு அரசியல் கிரகம் என்பதால் இந்த கால கட்டத்தில் இவரின் செயல்பாட்டை கண்டு அனைவரும் வியப்படையும் சூலலையும் உருவாகும்.

80 - வயது வரை குரு திசை:

குரு திசையில் 1,5 ஆகிய பாவகத்தின் பலன் நடந்து கொண்டிருக்கிறது. 1,5 ஆகிய பாவகங்கள் முறையே விருச்சிக ராசியுடன் சம்மந்தம் பெற்றுள்ளது. இந்த விருச்சக ராசி கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியாக வருவதால் எதிர்பாராத வெற்றியையும் கொடுக்கும் அதே சமயம் எதிர்பாராத உடல் நிலையில் பெரிய ஆபத்தையும் கொடுக்கும் என்பது தெளிவாக் தெரிகிறது.

தற்போது அம்மையாருக்கு குரு திசை சனி புத்தி நடக்கிறது:

குரு திசை – சனி புத்தி – புதன் புத்தி:

குரு திசை அரசியலில் வெற்றியையும் உடல் நிலையில் தோல்வியையும் கொடுக்கும். இவருக்கு இரண்டு கிட்னியும் செயலிளக்க அதிகப் படியான வாய்ப்புகளை குரு திசை வாயிலாக புதன் செய்வார். இதில் பெரிய கவலை தரக்கூடிய விஷயம் என்னவென்றால். தற்போது நடக்கும் சனி புத்தி 20.04.2017 வரை கோச்சார ரீதியிலும் தீமையையே செய்கிறார்.

20.04.2017 முதல் 27.07.2019 வரை நடக்கும் புதன் புத்தியும் 1,5 மற்றும் 12 ஆகிய பாவகங்களின் பலனை செய்கிறது. 12ம் பாவகம் ரிஷபத்தில் இருக்கிறது 1,5 ஆகிய பாவகங்கள் விருச்சக ராசியுடம் சம்மந்தம் பெற்று இருக்கிறது. ரிஷபம் மண் ராசி, விருச்சகம் ரீர் ராசி இரண்டுமே திர ராசிகள் ஆகும். எனவே அம்மையாரின் உடல்நிலை 27.07.2019குள் மிக மிக மோசமான நிலையை ஏற்படுத்தும்.

உடல் நிலையை பாதிப்புக்குள்ளாக்கும் கிரகங்கள்:

புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் ஆகும். புதன் நரம்பு மண்டலத்தையும், சுக்கிரன் கிட்னியையும், சனி உடல் உறுப்புகளின் செயல்பாட்டை இயங்க விடாமல் தடுக்கும்.

04.10.2016 வரை தற்போதைய வயது: குரு திசையில் 68 வயது நடந்து கொண்டிருக்கிறது.

முடிவு:

நடக்கும் குரு திசை உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும். சனி புத்தி இந்த பாதிப்பை 20.04.2017 வரை அதிகாரிக்கும். அடுத்து வரும் புதன் புத்தி 27.07.2019 குள் பெரிய அளவிலான தீமையை கொடுக்கும். அம்மையாரின் இந்த நிலை மாற வழிவிடாமல் நடக்கும் புத்திகள் திரதன்மையான பலனை வழங்குவதால். கடவுளிடம் வேண்டுவதை தவிர வேறுவலியில்லை.


முக்கிய குறிப்பு:

அம்மையாரின் ஜாதகம் இணையதளத்தில் இருந்து எடுக்கப் பட்டது. எனவே இந்த ஜாதகம் 100% உண்மை என்றால் நான் எழுதிய பலன்களில் எந்த மாற்றமும் இருக்காது. ஒருவேளை அம்மையார் பிறந்த நேரம் தவறாக இருந்தால் நான் எழுதிய பலன்கள் அனைத்தும் தவராகவே இருக்கும். என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒருவரது பிறந்த இடம், நேரம், தேதி ஆகியவைகள் சரியாக இருக்கும் பச்சத்தில் 12 பாவக நிலையை கணிதம் செய்து தற்போது நடக்கும் திசா புத்திகளை ஆராய்ந்தோமேயானால் 100% துல்லியமான பலனை சொல்லிவிடலாம்.

மிக முக்கியமாக அவரின் ஜீவனம் அவருடைய அறிவையும் துணிவையும் வைத்தா? தொழில் செய்தா? ஒரு இடத்தில் அல்லது நிறுவனத்தில் பணி செய்தா? இல்லை கூலி வேலை செய்தா?  என்பதையும் துல்லியமாக சொல்லிவிடலாம். 

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை நன்றி.................