ஏன் எனக்கு திருமணம் தாமதம் ஆகிறது ? நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? என்னுடைய ஜாதகம் எப்படி இருக்கிறது ?

மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. ஒரு நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல். அய்யா வணக்கம் நான் புதுக்கோட்டை மாவட்டம் மனமேல்குடியில் வசித்து வருகிறேன். எனக்கு பெண் பார்க்கிறார்கள் ஒன்றும் அமையவில்லை ஏன் எனக்கு திருமணம் தாமதம் ஆகிறது ? நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ? என்னுடைய ஜாதகம் எப்படி இருக்கிறது ?

பிறந்த தேதி         : xxxxxxxxx                       
பிறந்த கிழமை   : செவ்வாய்
பிறந்த இடம்       : மனமேல்குடி                    
நட்ச்சத்திரம்        : உத்திரட்டாதி-4
பிறந்த நேரம்       : xxxxxxxxxx                     
லக்கினம்               : ரிஷபம்
இராசி                     : மீனம்
திதி                           : xxxxxxxxxx; யோகம்: சூலம்; கரணம்: பத்திரை             
சுக்கிர தசா இருப்பு   : 01 வரு; 05 மா; 00 நாபலம் பெற்ற மற்றும் பலம் இழந்த பாவகங்கள்: 

 திசா விவரம்:


தற்போது நடக்கும் சுக்கிர திசையில் நன்மை மற்றும் தீமைகள் செய்யும் புத்திகள்:

என்னுடைய ஜாதகம் எப்படி இருக்கிறது ?

       தங்களது ஜாதகத்தில் 1,3,4,5,6,8,9,10,11 ஆகிய பாவகங்கள் நன்மை செய்யும் அமைப்பில் இருக்கிறது. எனவே தங்களுக்கு நடக்கும் தசா, புத்திகள் இந்த பாவகத்தின் பலனை செய்யும் போது நன்மையான பலனை அனுபவிப்பீர்கள்.

தங்களது ஜாதகத்தில் 2,7,12 ஆகிய பாவகங்கள் தீமை செய்யும் அமைப்பில் இருக்கிறது. எனவே தங்களுக்கு நடக்கும் தசா, புத்திகள் இந்த பாவகத்தின் பலனை செய்யும் போது தீமையான பலனை அனுபவிப்பீர்கள்.

தற்போது நடக்கும் சுக்கிர திசை

தற்போது தங்களுக்கு சுக்கிர திசை நடக்கிறது இந்த சுக்கிர திசையில் சுக்கிரன் 1,4 ஆகிய பாவகத்தின் பலனை செய்கிறது. இந்த இரண்டு பாவகமும் பலம் பெற்று 60% நல்ல நிலையில் இருக்கிறது.

எனவே 1-ம் பாவகத்தின் வழியாக வாழ்க்கை நடைமுறையை உணர்ந்து நடத்தல், திட்டமிட்டு செயல்படுதல், முன்னெச்சரிக்கையோடு இருத்தல், நிலையான உயர்நிலையை அடைதல், சாமர்த்தியம், மதிநுட்பம், தைரியமாக இருத்தல், தனது நிலையை மேம்படுத்திக் கொள்வது பற்றியே சிந்தித்தல்.

4-ம் பாவக வழியாக பழமையை விரும்புதல், குடும்ப முன்னேற்றத்திற்காக முழு பொறுப்பையும் ஏற்று கொள்ளுதல்,  எளிமையான ஒழுங்கு முறையான குடும்ப வாழ்க்கையை விரும்புதல், அமைதியான, இயல்பான சுற்று சூழலை விரும்புதல், நிலம் மற்றும் அந்நியர்


மூலம் வருமான அடைதல், நிலைத்த சொத்துக்கள் மூலம் சீரான, நிலையான வருமானம் மற்றும் முன்னேற்றம் அடைதல். என்றவாறு நன்மையான பலனை சுக்கிர திசை மற்றும் சுக்கிர புத்தி வழங்கும்.

அடுத்து வரக்கூடிய சூரிய புத்தி என்ன செய்யும்

சூரிய திசா, புத்தி தங்களுக்கு 2,7 ஆகிய பாவகத்தின் பலனை செய்கிறது. இந்த இரண்டு பாவகங்களும் பலம் இழந்த நிலையில் இருக்கிறது.

எனவே 2-ம் பாவகத்தின் வழியாக பண விஷயத்தில் பற்றாக்குறை இருத்தல், திருப்தியற்ற மனநிலை, பேச்சில் தடுமாற்றம், தேவையற்ற வழியில் நேரத்தை வீனடித்தல், சந்தேக எண்ணம் தோன்றுதல்.

7-ம் பாவகத்தின் வழியாக இலாப நோக்கத்துடன் பழகுதல், குடும்ப வாழ்க்கையில் விருப்பம் இல்லாமை, முயோசனை இல்லாமல் ஒப்பந்தம், பத்திரம் வழியில் பிரச்சனையை சந்தித்தல், இடுப்பு வழி, தோழ் வியாதி, சிறுநீரகம் சார்ந்த நோய்கள், உடல் நலம் குறைந்த, நிதானம் குறைந்த, பொறாமை நிறைந்த துணைவர் அமைதல். என்றவாறு தீமையான பலனை சூரிய திசை மற்றும் சூரிய புத்தி வழங்கும்.

ஏன் எனக்கு திருமணம் தாமதம் ஆகிறது ?

       தங்களது ஜாதகத்தில் குடும்ப ஸ்தானத்தை குறிக்கும் இரண்டாம் பாவகம் களத்திர ஸ்தானத்தை குறிக்கும் ஏழாம் பாவகம் இவை இரண்டும் பலம் இழந்த நிலையில் இருப்பது. திருமண தாமதத்தை குறிக்கும். எனவே தங்களுக்கு நடக்கும் நல்ல தசா, புத்தி காலத்தில் திருமண முயற்ச்சிகள் செய்வது நல்ல பலனை கொடுக்கும். அந்த வகையில் தற்போது தங்களுக்கு நடக்கு சுக்கிர திசா மற்றும் சுக்கிர புத்தி நல்ல பலனையே செய்வதால் சுக்கிர புத்தி முடியும் காலம் 01.06.2017 க்குள் திருமண முயற்ச்சிக்ளை தீவிரப் படுத்துவது நல்ல பலனை கொடுக்கும்.

தீமை செய்யும் கிரகத்தின் திசா, புத்திகள்: 

சூரியன் மற்றும் ராகு திசா, புத்திகள் காலத்தில் அமைதியாக இருப்பது, கடன் வாங்குதல், கொடுத்தல் இருக்க கூடாது, உணவில் கவனம் தேவை, வாக்கு வாதம் செய்தல் கூடாது, அனைத்தையும், அனைவரையும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் ?

சந்திரன் கோச்சார ரீதியில் ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்கு வரும் பொது தனியாக அருகில் உள்ள கோவிலுக்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விரதம் இருந்து சென்று வருவது மிகவும் நல்லது. இதை தங்களுக்கு நடக்கும் சுக்கிர திசை முடியும் வரை கடைபிடிக்க வேண்டும்.

தொழில்: மருந்து பொருட்கள், அசைவ உணவு பொருட்கள் (ராகு-அசைவ உணவை குறிக்கும்), மன்சார்ந்த தொழில்கள், கணினி, மின்சார உபகரணம் ஆகியவற்றில் தன்னுடைய அறிவாற்றலை வைத்து சம்பாதிபீர். அறிவு சார்ந்த தொழில் உகந்தது.

ஜோதிட ஆலோசனைக்கு,