எந்த கிரகத்தின் தசா, புத்தி காலம் எனக்கு நன்மையை செய்யும்.


 மீண்டும் மற்றொரு பதில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே. இந்த பதிவில் ஒரு நண்பருடைய ஜாதகத்தை விளக்கவிருக்கிறோம். 

அந்த நண்பர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சல் இதுவே. ஐயா வணக்கம் தங்களுடைய பதிவுகள் அனைத்தும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. நான் பல ஜோதிடர்களிடம் ஜாதகம் பார்த்தும் எனக்கு தெளிவு கிடைக்கவில்லை. தங்களிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய கேள்வி இதுவே என்னுடைய ஜாதகத்தில் நன்மை செய்யும் கிரகங்கள் எவை எவை? தீமை செய்யும் கிரகங்கள் எவை எவை?  எந்த கிரகத்தின் தசா, புத்தி காலம் எனக்கு நன்மையை செய்யும்? எந்த கிரகத்தின் தசா, புத்தி காலம் எனக்கு தீமையை செய்யும்? நான் சுயமாக தொழில் செய்யலாமா இல்லை ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரியலாமா? என்னுடைய கேள்விகளுக்கு தெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம். 

ஜோதிடம் என்பது முற்றிலும் உண்மை அதில் எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அதை தெளிவாக கணிதம் செய்து சொல்வதில் தான் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப் படுகிறார்கள். இறையருளின் கருணையால் எனக்கு கிடைத்த இந்த ஜோதிட அறிவை வைத்து தங்களுடைய கேள்விகளுக்கு தெளிவான, துல்லியமான பதிலை அளிக்க முடியும் என்று நம்புகிறேன். 

சரி நண்பர்களே இனி இந்த நண்பரின் ஜாதகத்தை பார்க்கலாம் வாருங்கள். 

லக்கினம்: மிதுனம்; இராசி: துலாம்; திதி: தேய்பிறை சஷ்டி; நட்சத்திரம்: சித்திரை-4ம் பாதம். 

பலம் பெற்ற மற்றும் பலம் இழந்த பாவகங்களின் விவரம்: 

தங்களது ஜாதகத்தில் 1,2,4,5,6,7,9,10,11 ஆகிய பாவகங்கள் நன்மை செய்யும் அமைப்பில் இருக்கிறது. எனவே தங்களுக்கு நடக்கும் திசா, புத்திகள் இந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் போது நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
தங்களது ஜாதகத்தில் 3,8,12 ஆகிய பாவகங்கள் தீமை செய்யும் அமைப்பில் இருக்கிறது. எனவே தங்களுக்கு நடக்கும் திசா, புத்திகள் இந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்தும் போது தீமையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
பலம் பெற்ற பாவகங்கள் தங்களுக்கு செய்யும் நன்மைகள் என்ன: 
 
லக்கினம்:
தங்களது ஜாதகத்தில் லக்கினம் என்னும் முதல் பாவகம் 100% பலம் பெற்று இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது மதிப்பிற்குரிய செயல்கள், புகழ்மிக்க பொறுப்புகள், வெகுமதி, கௌரவம், சமூக மற்றும் தொழில் துறையில் வளர்ச்சி, அரசியல், வியாபாரம் என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள்.
 
மேலும் தைரியம், தர்ம சிந்தனை, கவனம், பிரயாண விருப்பம், உறுதியான மனநிலை, எடுத்த காரியத்தை முடித்தல், நல்ல பரிவு பாசம் மிக்கவராகவும் செயல்பட வைக்கும்.

இரண்டாம் பாவகம்:
தங்களது ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் 100% பலம் பெற்று இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது படிப்பில் வெற்றி, உத்யோகம் கிடைத்தல், வியாபாரத் தொடக்கம், கௌரவம், புகழ், பரிசு, அனைத்திலும் வெற்றி என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் அதிக வருமானம், திடீர் அதிர்ஷ்டம், தர்ம சிந்தனை, பரிவு பாசம் மிக்க பேச்சு, நல்ல ஞானம், நல்ல பார்வை திறன் மிக்கவராகவும் செயல்பட வைக்கும். 
 
நான்காம் பாவகம்:
தங்களது ஜாதகத்தில் நான்காம் பாவகம் 100% பலம் பெற்று இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது மண், மனை, வாகன யோகம், சொந்த ஊரிலேயே இருக்க விரும்புதல், பள்ளிகளை நடத்துதல், கல்வியில் வெற்றி, கண்டிப்பானவர் என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 

மேலும் கல்வி மூலம் முன்னேற்றம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவராகவும் செயல்பட வைக்கும். 
 
ஐந்தாம் பாவகம்:
தங்களது ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் 30% பலம் பெற்று இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது கலைகளில் தேர்ச்சி, புத்திசாலி, தீர்ப்பளித்தல், வாதத்திறமை, செல்வம், நல்ல குழந்தைகள், குடும்பம், விளையாட்டு வீரர், காதல் வெற்றி, தர்ம சிந்தனை என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் கூட்டுறவை விரும்புதல், சிறந்த நண்பனாக இருத்தல், உல்லாசம், உற்சாகம் மிக்கவராக செயல்பட வைக்கும். 
 
ஆறாம் பாவகம்:
தங்களது ஜாதகத்தில் ஆறாம் பாவகம் 60% பலம் பெற்று இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது பயணங்களால் இலாபம், சமாதான முறையில் வெற்றி, மதசம்மந்தமான வெற்றி என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் புனிதமானவர், நல்ல உடல் நலம் மிக்கவர், நம்பிக்கை உடையவர், கண்ணியம் மிக்கவராக செயல்பட வைக்கும். 
 
ஏழாம் பாவகம்:
தங்களது ஜாதகத்தில் ஆறாம் பாவகம் 100% பலம் பெற்று இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது திருமண தாமதம், நல்ல அந்தஸ்துள்ள மனைவு, அரசியல் வெற்றி, வியாபாரத்தில் வெற்றி, சமூக அந்தஸ்து என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் சிறந்த ஆலோசகர், வாய்மையே வெல்லும் என்ற எண்ணம், வேகம் நிறைந்த மனைவி, கூட்டாளியுடன் நல்லுறவு மிக்கவராகவும் செயல்பட வைக்கும். 
 
ஒன்பதாம் பாவகம்:
தங்களது ஜாதகத்தில் ஒன்பதாம் பாவகம் 60% பலம் பெற்று இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது அறிவாளி, பயண விரும்பி, தெய்வ ஞானி, இடமாற்றம், சூல்நிலை மாற்றத்தில் விருப்பம் என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் அதிர்ஷ்டசாலி, அறிவு கூர்மை, பயணங்களில் விருப்பம், உயரிய சிந்தனை மிக்கவராக செயல்பட வைக்கும். 
 
பத்தாம் பாவகம்:
தங்களது ஜாதகத்தில் பத்தாம் பாவகம் 100% பலம் பெற்று இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது உத்யோகம், வியாபாரம், தொழில் முதலியவற்றில் வெற்றி, கம்பீரம் தீர்க்கமான வாதம் என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் தைரியம், சீக்கிரம் முடிவு எடுத்தல், தனிமையில் விருப்பம், பரிவு, பாசம் மிக்கவராக செயல்பட வைக்கும். 
 
பதினோராம் பாவகம்:
தங்களது ஜாதகத்தில் பதினோராம் பாவகம் 30% பலம் பெற்று இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது நல்ல குழந்தைகள், எப்போதும் மகிழ்ச்சி, கலை, இசை, சினிமா மூலம் இலாபம், மனைவி சொத்துக்கள், காதலில் வெற்றி, பங்குமார்கெட், லாட்டரி, சூது இவற்றில் இலாபம் என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள்.
 
மேலும் பெண் மூலம் இலாபம், நல்ல நண்பர்கள், துணிச்சல் மிக்கவராக செயல்பட வைக்கும். 
 
பலம் இழந்த பாவகங்கள் தங்களுக்கு செய்யும் தீமைகள் என்ன:
 
மூன்றாம் பாவகம்:
தங்களது ஜாதகத்தில் மூன்றாம் பாவகம் 60% பலம் இழந்து நன்மை தீமை செய்யும் அமைப்பில் இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது விட்டுக்கொடுத்தல், அயலார் மூலம் இலாபம், நீண்ட பயணம், இரகசிய காதல், சட்டம் மூலம் இலாபம், புதிய கண்டுபிடிப்பு, தர்ம சிந்தனை, சத்தியத்தை மதித்தல் என்ற வகையில் நன்மை தீமையென இருவித பலங்களையும் அனுபவிப்பீர்கள். 
 
மேலும் பொறுமையை இழத்தல், நுண்ணறிவு செயல்படாமல் போதல், சோம்பேறித்தனம், கடும் சிந்தனை மிக்கவராகவும் செயல்பட வைக்கும். 
 
எட்டாம் பாவகம்:
தங்களது ஜாதகத்தில் எட்டாம் பாவகம் 30% பலம் இழந்து இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது நல்ல ஆயுள், வாழ்க்கையில் ஏமாற்றம், துயரம், விபத்து, வியாதி, திருப்தியில்லை என்ற வகையில் தீமையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் தன விரையம், இனம் புரியாத வியாதி, முயச்சிகள் தோல்வி, முன்கோவம், பிடிவாதம், கௌரவம் அற்றவராக செயல்பட வைக்கும். 
 
பனிரெண்டாம் பாவகம்:
தங்களது ஜாதகத்தில் பனிரெண்டாம் பாவகம் 60% பலம் இழந்து இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை தங்கள் சந்திக்கும் போது நிறைய செலவு, பங்குச்சந்தை, இலாட்டரி, சூது மூலம் நட்டம், திருப்தியில்லை, அனைவராலும் தொல்லை, விபத்து என்ற வகையில் தீமையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் இரகசிய எதிரிகளின் தொல்லை, நிதானத்தை இழந்த நிலை, சுகவாசியாக இருக்க முடியாமை, பொறுமையை சுத்தமாக இழக்கும் நிலை என்றவாறு செயல்பட வைக்கும். 
 
கிரகங்களின் திசைகள் விவரம்: 
 
குரு திசையில் நடக்கும் புத்திகளின் விவரம்: 
 
தங்களுக்கு நன்மை செய்யும் கிரகங்கள்:
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகிய கிரகங்கள் தங்களுக்கு நன்மையை செய்யும்.
 
தங்களுக்கு தீமை செய்யும் கிரகங்கள்:
சனி, கேது ஆகிய கிரகங்கள் தங்களுக்கு தீமையை செய்யும்.
 
நன்மை செய்யும் கிரகத்தின் திசா, புத்திகள்:
கேது திசா, புத்தி – சுக்கிரன் திசா, புத்தி – சந்திரன் திசா, புத்தி – செவ்வாய் திசா, புத்தி – ராகு திசா, புத்தி – குரு திசா, புத்தி. 
 
தீமை செய்யும் கிரகத்தின் திசா, புத்திகள்:
புதன் திசா, புத்தி தீமையை செய்யும். 
 
நன்மை தீமை செய்யும் கிரகத்தின் திசா, புத்திகள்:
சூரியன் திசா, புத்தி – சனி திசா, புத்தி ஆகிய இரண்டு கிரகத்தின் திசா புத்திகள் நன்மை தீமையென இரண்டு விட பலன்களை செய்யும்.  
 
தாங்கள் இதுவரை கடந்து வந்த கிரகத்தின் திசைகள்:
தாங்கள் இதுவரை ராகு திசையை மட்டும் கடந்து வந்துள்ளீர்கள். 

கவனிக்க வேண்டியது:
ஒவ்வொரு கிரகங்களும் தங்களுடைய திசா காலத்தில் 12 பாவகங்களில் ஏதாவது ஒரு சில பாவகத்தின் பலனை செய்யும். அந்த பாவகம் பலம் பெற்று இருந்தால் நன்மையான பலனை அந்த கிரகத்தின் காரகத்துவத்திற்கு ஏற்றவாறும் அந்த பாவகத்தின் காரகத்துவத்திற்கு ஏற்றவாறும் மற்றும் ராசியின் காரகத்துவத்திற்கு ஏற்றவாறும் செய்யும். அதுவே பலம் இழந்த நிலையில் இருந்தால் தீமையான பலனை அந்த கிரகத்தின் காரகத்துவத்திற்கு ஏற்றவாறும் அந்த பாவகத்தின் காரகத்துவத்திற்கு ஏற்றவாறும் மற்றும் ராசியின் காரகத்துவத்திற்கு ஏற்றவாறும் செய்யும்.    
 
தாங்கள் கடந்து வந்த கிரகத்தின் திசைகள் எந்த பாவகத்தின் பலனை செய்தது. அது நன்மையை செய்ததா தீமையை செய்ததா? 
 
தாங்கள் 18 வயது வரை ராகு திசையை கடந்து வந்துள்ளீர்கள். இந்த ராகு திசை 4-ம் பாவகத்தின் பலனை செய்துள்ளது. இந்த 4-ம் பாவகம் 100% பலம் பெற்று இருக்கிறது. எனவே நன்மையான பலனை ராகு திசை 18 வயது வரை செய்திருக்கும் என்பது தெரிய வருகிறது.
 
எனவே 18 வயது பையனிடம் என்ன எதிர்பார்க்க முடியும் நல்ல படிப்பு, நல்ல பழக்கங்கள், நல்ல சுறுசுறுப்பு தாயின் மீது பாசம், தந்தையின் மீது நல்ல மரியாதை இந்த வகையில் நன்மைகளை சந்தித்து இருப்பார். 
 
மேலும் மண், மனை, வாகன யோகம், சொந்த ஊரிலேயே இருக்க விரும்புதல், பள்ளிகளை நடத்துதல், கல்வியில் வெற்றி, கண்டிப்பானவர் என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் கல்வி மூலம் முன்னேற்றம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவராகவும் செயல்பட வைக்கும். 
 
தற்போது எந்த கிரகத்தின் திசை நடக்கிறது. அது எந்த பாவகத்தின் பலனை செய்கிறது. நன்மையை செய்கிறதா? தீமையை செய்கிறதா? 
 
தங்களுக்கு தற்போது குரு திசை 34 வயது வரை நடக்கவிருக்கிறது. இந்த குரு திசை 11-ம் பாவகத்தின் பலனை செய்கிறது. இந்த 11-ம் பாவகம் 30% பலம் பெற்று இருக்கிறது. எனவே இந்த குரு திசை 34 வயது வரை தங்களுக்கு நன்மைகளை செய்யும். 
 
எனவே நல்ல பட்டபடிப்பு, நல்ல கௌரவமான வேலை, திருமணம், தன்னுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறல், நுணுக்கமான அறிவாற்றலால் செயல்பட்டு நண்பர்களிடமும், பெரியவர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தல், நல்ல குழந்தைகளை பெற்றெடுத்தல் என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் எப்போதும் மகிழ்ச்சி, கலை, இசை, சினிமா மூலம் இலாபம், மனைவி சொத்துக்கள், காதலில் வெற்றி, பங்குமார்கெட், லாட்டரி, சூது இவற்றில் இலாபம் என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் பெண் மூலம் இலாபம், நல்ல நண்பர்கள், துணிச்சல் மிக்கவராக செயல்பட வைக்கும். 
 
அடுத்து எந்த கிரகத்தின் திசா நடக்கும் அது எந்த பாவகத்தின் பலனை செய்யும். அது நன்மையாக இருக்குமா? தீமையாக இருக்குமா? 
 
தங்களுக்கு குரு திசை முடிந்ததும் அடுத்து 53 வயது வரை சனி திசை நடக்கும். இந்த சனி திசை 4-ம் வீட்டு பலனையும் 8-ம் வீட்டு பலனையும் செய்யும். இதில் 4-ம் வீடு பலம் பெற்று 100% நல்ல பலனையும்  8-ம் வீடு பலம் இழந்து 30% தீமையான பலனையும் செய்யும்.
 
எனவே 4-ம் பாவக வழியில் இருந்து மண், மனை, வாகன யோகம், சொந்த ஊரிலேயே இருக்க விரும்புதல், பள்ளிகளை நடத்துதல், கல்வியில் வெற்றி, கண்டிப்பானவர் என்ற வகையில் நன்மையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் கல்வி மூலம் முன்னேற்றம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக்கவராகவும் செயல்பட வைக்கும். 
 
8-ம் பாவக வழியில் இருந்து நல்ல ஆயுள், வாழ்க்கையில் ஏமாற்றம், துயரம், விபத்து, வியாதி, திருப்தியில்லை என்ற வகையில் தீமையான பலனை அனுபவிப்பீர்கள். 
 
மேலும் தன விரையம், இனம் புரியாத வியாதி, முயச்சிகள் தோல்வி, முன்கோவம், பிடிவாதம், கௌரவம் அற்றவராக செயல்பட வைக்கும். 
 
இப்படியாக அடுத்து நடக்கபோக்கும் சனி திசை நன்மை மற்றும் தீமை என இருவித பலன்களை செய்யும். இந்த காலகட்டத்தில் கொட்சாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.   
 
தாங்கள் சுயமாக தொழில் செய்யலாமா இல்லை ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரியலாமா? 
 
தங்களுடைய அறிவாற்றலை வைத்தும் பொருள் ஈட்டலாம் அல்லது தங்களுடைய அறிவாற்றலை ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு செலவு செய்தும் பொருள் ஈட்டலாம். 
 
மேலும் இந்த நண்பர் என்ன தொழில் செய்யவேண்டும் என்பதை தொலைபேசி வாயிலாக கேட்டு தெளிவு பெற்றார்.
 
நண்பர்களே இவ்வாறாக ஒருவரின் ஜாதகத்தை தெளிவாக விளக்கும் போது சம்மந்தபட்ட ஜாதகர் தெளிவான மனநிலையை அடைவதுடன். தன்னுடைய வாழ்க்கையையும் தெளிவான பாதையில் கொண்டு செல்வார். 

அனைவருமே முயற்சியையும் பயிற்சியையும் செய்தாலும் வெற்றி என்பது ஒருசிலருக்கு தான் கிடைக்கிறது. அது எதனால் சற்று உற்று நோக்கினால் விளக்கும் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் வெற்றி இது பகுத்தறிவு அதற்கு சரியான காலகட்டத்தை குறித்து தருவதே ஜோதிட அறிவு. நன்றி.