செவ்வாய் தோஷம் உண்டா இல்லையா.


ஓம் நகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்த்தாய தீமஹி
தன்னோ ராஹூ பிரசோதயாத்

அய்யா எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? என்னுடைய ஜாதகத்தை விளக்க முடியுமா? 

நண்பர்களே இன்று இந்த தோழியின் ஜாதகத்தை விளக்கவிருக்கிறோம் தொடர்ந்து படியுங்கள் நற்றி. 


லக்கினம்: ரிஷபம் ; இராசி: கடகம் ; நச்சத்திரம்: ஆயில்யம் 2-ம் பாதம் ; திதி: சு.சதுர்த்தசி ; யோகம்: சோபணம் ; காரணம்: வணிசை. 
தங்களது ஜாதகத்தில் 3,4,10,11 ஆகிய பாவகங்கள் நன்மை செய்யும் அமைப்பில் இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை எந்த கிரகம் தன்னுடைய தசா,புத்தி,அந்தரம் மற்றும் சூச்சுமத்தில் ஏற்று செய்கிறதோ அந்த காலகட்டம் நன்மையான காலகட்டமாக இருக்கும். 

மேலும் தங்களது அமைப்பில் 1,7,8,12 ஆகிய பாவகங்கள் பலம் இழந்த நிலையில் இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை எந்த கிரகம் தன்னுடைய தசா,புத்தி,அந்தரம் மற்றும் சூச்சுமத்தில் ஏற்று செய்கிறதோ அந்த காலகட்டம் நன்மையான காலகட்டமாக இருக்காது.

அடுத்தபடியாக தங்களது அமைப்பில் 2,6 ஆகிய பாவகங்கள் பலம் இழந்த நிலையில் இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை எந்த கிரகம் தன்னுடைய தசா,புத்தி,அந்தரம் மற்றும் சூச்சுமத்தில் ஏற்று செய்கிறதோ அந்த காலகட்டம் நன்மையான காலகட்டமாக இருக்கும் அதே சமயத்தில் உடல்நிலை மற்றும் குடும்பத்தில் தொந்தரவை கொடுக்கும். 

இறுதியாக 5,9 ஆகிய பாவகங்கள் முழுமையான தீமையை செய்யும் அமைப்பில் இருக்கிறது. எனவே இந்த பாவகத்தின் பலனை எந்த கிரகம் தன்னுடைய தசா,புத்தி,அந்தரம் மற்றும் சூச்சுமத்தில் ஏற்று செய்கிறதோ அந்த காலகட்டம் முழு தீமையான காலகட்டமாக இருக்கும். 

வயது வாரியாக தாங்கள் கடந்து வந்த தசைகள்: 

தாங்கள் பிறந்தது முதல் 10 வது வரை புதன் மகாதிசையிலும், அடுத்து 17 வயது வரை கேது மகாதிசையையும் கடந்து வந்துள்ளீர்கள். தற்போது தங்களுக்கு 37 வயதுவரை நடக்கும் சுக்கிரன் மகாதிசையில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

10 வயது வரை நடந்த புதன் திசை என்ன பலனை வழங்கியது: 

இந்த புதன் திசை தங்களுக்கு 3,8,11,12 ஆகிய பாவகத்தின் பலனை வழங்கி இருக்கிறது. இதில் 3,11 ஆகிய பாவகங்கள் பலம் பெற்று இருப்பதால் இந்த இரண்டு பாவக வழியாக நன்மையை அனுபவித்து இருப்பீர்கள். அதாவது தாய், தந்தை இருவருக்கும் நல்ல மனநலனையும், தங்களுக்கு நல்ல கல்வியையும் கொடுத்திருக்கும். 

8,12 ஆகிய பாவகங்கள் பலம் இழந்த நிலையில் இருப்பதால் இந்த இரண்டு பாவக வழியாக தீமையை அனுபவித்து இருப்பீர்கள். அதாவது எதிர்பாராத நேரத்தில் உடல்நிலையில் பிரச்சனையையும், முன்கோபம் மற்றும் பிடிவாத குணத்தையும் கொடுத்திருக்கும். 

புதன் திசை: முன்கோபம், பிடிவாதம் மற்றும் உடல் நிலையில் தொந்தரவை கொடுத்திருந்தாலும் நல்ல கல்வி, துணிச்சல், படிப்பில் ஆர்வம் என நன்மை தீமை ஆகிய இரண்டு வித பலன்களை செய்துள்ளது.

17 வயது வரை நடந்த கேது திசை என்ன பலனை வழங்கியது:

இந்த கேது திசை தங்களுக்கு 4,10 ஆகிய பாவகத்தின் பலனை வழங்கி இருக்கிறது. இந்த இரண்டு பாவகங்களும் பலம் பெற்று இருப்பதால் இந்த இரண்டு பாவக வழியாக நன்மையை அனுபவித்து இருப்பீர்கள். அதாவது நல்ல கல்வி, நுணுக்கமான அறிவாற்றல் என நல்ல பலன்களை அனுபவித்திருப்பார். 

கேது திசை: நல்ல கல்வி, கௌரவமான நிலை என நன்மையான பலனை செய்துள்ளது. 

37 வயது வரை நடந்துகொண்டிருக்கும் சுக்கிர திசை என்ன பலனை வழங்கி கொண்டு இருக்கிறது:

இந்த சுக்கிர திசை தங்களுக்கு 3,8,11,12 மற்றும் 4,10 ஆகிய பாவகத்தின் பலனை செய்கிறது. இதில் 3,11 மற்றும் 4,10 ஆகிய பாவகங்கள் நல்ல நிலையில் இருக்கிறது. எனவே நல்ல கௌரவமான வேலை, நல்ல தொடர்பாடும் திறன், களத்திரத்தால் இலாபம், முயற்ச்சிகளில் வெற்றி, எதிர்பாலருடன் சாதுரியமாக பலகுதல். பெருந்தன்மை, திருமணம் மூலமாக இலாபம், நல்லுறவு என நல்ல பலனை சுக்கிரன் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.

அதே சமயம் 8,12 ஆகிய பாவகங்கள் பலம் இழந்த நிலையில் இருக்கிறது. எனவே ஏமாற்றம், எதிலும் திருப்தி இன்மை, ஆயுள் பிரச்சனை, துயரம், கோழையான தோற்றம், மற்றவர்களால் ஏமாற்றம், திருமணம் தொடர்பான பிரச்சனைகள், தொழிலில் போட்டி, கூட்டாளியுடன் சண்டை சச்சரவு, கடும் சொற்களால் திட்டுதல், பிடிவாதம், மூர்க்ககுணம் என தீய பலனையும் சுக்கிரன் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.  

சுக்கிர திசை: தொழில் மற்றும் உத்யோகத்தால் நல்ல வருமானம் மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள், திருப்தி இனமை என சுக்கிர திசை 37 வயது வரை நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான பலங்களையும் செய்யவிருக்கிறது. 

திருமணம் எப்போது?

தங்களது ஜாதகத்தில் 12-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால். தங்களது ஜாதகத்தை பார்க்கும் பாரம்பரிய ஜோதிடர்கள் இந்த ஜாதகிக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது எனவே செவ்வாய் தோஷம் உள்ள ஒரு ஜாதகத்துடன் தான் இதை இணைக்க வேண்டும் என்றும் அல்லது மாமியார் இல்லாத வீட்டில் மற்றும் மாமனாருக்கும் இருதாரம் இருக்கும் வீட்டில் உள்ள ஒரு புத்திரனின் ஜாதகத்துடன் தான் இதை இணைக்க முடியும் என்று குத்துமதிப்பான பலனை சொல்லி குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். 

அப்படியே அவர்களின் கணக்குப்படி பார்த்தாலும் செவ்வாய் 12-ல் இருப்பது உண்மை தான். ஆனால் அவர் குடும்பக் காரகனான குருவுடன் இணைந்து இருபது செவ்வாய் தோஷ பரிகாரம் ஆகிவிடாதா. தங்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் குரு ஆகிய இரண்டு கிரகங்களும் 12-ல் இருக்கிறது. 

12-ம் வீடு 003.50.23 பாகை.கலை.விகளையில் தொடங்கி 036.35.45 பாகை.கலை.விகளையில் முடிவடைகிறது குறுப்பிடத்தக்கது ஆகும். அதே சமயம் குரு 1-ம் வீட்டில் இருக்கிறார் என்று பார்ப்பது தவறு அவர் எத்தனை பாகை.கலை.விகளையில் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் போது குரு பகவான் 033.53.04 பாகை.கலை.விகளையில் இருக்கிறார். குரு இருக்கும் இந்த பாகை 12-ம் வீட்டின் பாகைக்குள் வருகிறது எனவே குரு 12-ம் வீட்டில் இருக்கிறார் என்று கணிதம் செய்வதே மிகத் துல்லியமான கணிதம் ஆகும். எனவே சுபக்கிரகமான குருவுடன் செவ்வாய் கூடி 12-ல் இருப்பது செவ்வாய் தோஷ பரிகாரநிலை ஆகும். 

நம்முடைய கணிதப்படி ஜாதகத்தில் தோஷம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. தங்களது ஜாதகத்தை பொறுத்தவரை களத்திர ஸ்தானமான 7-ம் வீடு மற்றும் குடும்ப ஸ்தானமான 2-ம் வீடு இவை இரண்டும் பலம் இழந்த நிலையில் இருப்பதும் லக்கினம் என்னும் முதல் வீடு பலம் இழந்த நிலையில் இருப்பதுமே திருமணத்தில் விருப்பம் இன்மை, திருமணத்தில் குழப்பம், திருமண தாமதத்திற்கு முக்கிய காரணம் ஆகும். 

03-04-2016 இந்த தேதிக்கு பிறகு திருமண முயற்ச்சி வெற்றி தரும். இருப்பினும் தற்போது இராகு புத்தி நடக்கிறது இந்த இராகு தங்களுக்கு பாதக ஸ்தானத்தின் பலனை வழங்கி கொண்டு இருக்கிறது. இது ஒரு அவயோகநிலை ஆகும். இந்த இராகு புத்தி 04-01-2017 வரை நடக்கிறது. அடுத்து குரு புத்தி வந்து விடும் இந்த குரு புத்தி 04-01-2017 முதல் 05-09-2019 வரை நடக்கவிருக்கிறது. இந்த காலகட்டம் திருமணத்திற்கு மிகவும் உகந்த காலகட்டம் ஆகும்.