என்னுடைய எதிர்காலம் எப்படி மற்றும் எனக்கு திருமணம் எப்போது?

ஓம் சரவண பவ
மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே. இந்தப் பதிவில் சென்னையை சேர்ந்த ஒரு நண்பரின் ஜாதகத்தை பார்க்கவிருக்கிறோம். இந்த நண்பரின் கேள்விகள் பின்வருமாறு: 
  • என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?
  • எனக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போய்கிறது என்ன காரணம்?
  • எனக்கு சரியாக எத்தனை வயதில் திருமணம் நடைபெறும்? 
இவைகளே இந்த நண்பரின் கேள்விகள் ஆகும். சரி இனி இந்த நண்பரின் ஜாதகத்தை வைத்துக்கொண்டு மேற்கண்ட வினாக்களுக்கு விடையை காண்போம் வாருங்கள். 

லக்கினம்: மிதுனம்
ராசி: கன்னி 
நட்ச்சத்திரம்: உத்திரம் 4-ம் பாதம் 


முதலில் இந்த நண்பரின் 12 பாவகத்தையும் ஆராய வேண்டும். நண்பரின் ஜாதகத்தில் 1,2,5,7,10,11 ஆகிய பாவகங்கள் நல்லநிலையில் இருக்கிறது. 

எனவே ஜாதகர் நல்ல குணம், அறிவுபூர்வமான சிந்தனை ஆற்றலும், விவேகமான செயல்பாடும், நல்ல ஆண்மைத் திறனும், நல்ல இனிமையான பேச்சுத் திறனும், நல்ல நிர்வாகத் திறனும், இலாபகரமான வருமானம் ஈட்டும் தன்மையும், மற்றவர்களிடையே பேசி காரியத்தை கட்ச்சிதமாக முடிக்கும் குணமும், நுண்ணிய சிந்தனைத் திறனும், அனைவரையும் கவர்ந்திளுக்கும் பேச்சுத் திறனும், நண்பர்களின் ஆதரவும், பொதுமக்களின் ஆதரவும், சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதையும், நண்பர்களின் ஆதரவும், வீரியமான செயல்திறனும் இயற்க்கையாக பெற்றவர் ஆவார். 

நடக்கும் தசா, புத்தி, அ.ந்தர, சூட்ச்சமங்கள் மேற்குறிப்பிட்ட பாவக்கத்தின் பலனை செய்யும் போது நல்ல யோகமான பலனை அனுபவிப்பார். 


3,4,6,8,9,12 ஆகிய பாவகங்கள் நண்பரின் ஜாதகத்தில் பலம் இழந்து காணப்படுவது நண்பர் இந்த பாவகங்களின் வாயிலாக அவயோகப் பலனையே சந்திக்க வேண்டியனிலை வரும் என்பது தெரிகிறது. 

எனவே நண்பரின் தகவல் பரிமாற்றம், எழுத்து ஆற்றல், எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, சொந்த வீடு மண்,மனை வாங்கும் யோகம் அற்ற நிலை, மனக்குழப்பம், தயக்க நிலை, சலித் தொந்தரவுகள், செரிமானக் கோளாறுகள், தீடீரென தொழில் இழப்பு, பணிபுரியும்  இடத்தில் கருத்து வேறுபாடுகள் சக ஊழியர்களிடையே ஏற்படும் நிலை, தன்னிறைவு அற்ற நிலை, பெரியோகளிடம் அவப் பெயரை சம்பாதிதல், வீண் கற்பனைத்திறன், வீணான செலவீனங்கள், பணவிரையம், மனவிரையம், அதிகமாக உணவில் நாட்டம், மறைமுக எதிரிகள், எதிரிகளின் தொந்தரவை சமாளிக்க முடியாத நிலை இவைகளையும் இயற்க்கையாக பெற்றவர் ஆவார். 

நடக்கும் தசா, புத்தி, அந்தர, சூட்ச்சமங்கள் மேற்குறிப்பிட்ட பாவக்கத்தின் பலனை செய்யும் போது அவயோக பலனை அனுபவிப்பார்.

இனி இவர் கடந்து வந்த, தற்போது கடந்து கொண்டிருக்கிற, இனிமேல் கடக்கபோகிற திசைகளை பார்போம்.


நண்பர் சூரிய திசையில் பிறந்திருக்கிறார் இந்த சூரிய திசை நண்பர் பிறந்து நான்கு மாதம் வரை நடைபெற்று இருக்கிறது. மேலும் இந்த சூரிய திசை 3,6,12 ஆகிய பாவகத்தின் பாலை செய்து இருக்கிறது. எனவே நண்பர் பிறந்து நான்கு மாதம் வரை சுறுசுறுப்பு குறைவாக இருந்திருப்பார் மேலும் மருத்துவ செலவுகளும் அதிகமாக விரையம் ஆகி இருக்கும் என்பது தெரிகிறது. 

நண்பரின் பத்து வயது முதல் சந்திர திசை நடந்து இருக்கிறது. இந்த திசை 1,5,7,11 ஆகிய பாவகத்தின் பலனை செய்து நல்ல படிப்பு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, நல்ல சமயோசித புத்தி என பத்து வயது சிறுவனின் துடிதுடிப்பு இவரிடம் காணப்பட்டிருக்கிறது. 

அடுத்து 17 வயது வரை நடந்த செவ்வாய் திசையும் இதே பலனை செவ்வாயின் அதிகாரத் தோரணையில் கொத்து இருக்கிறது. எனவே இந்த திசையில் நண்பர்களை இவர் வழிநடத்தி இருப்பார், நன்றாகப் படித்திருப்பார் என்பதும் தெரிய வருகிறது. 

தற்போது நடக்கும் ராகு திசை 35 வயது வரை நடக்கவிருக்கிறது. இந்த திசை 3,6,12 ஆகிய பலம் இழந்த பாவகத்தின் வாயிலாக தீமையையும், 10-ம் பாவகத்தின் வாயிலாக நல்ல பலனையும் அனுபவிப்பார். 

இந்த ராகு திசை 3,6,12 ஆகிய பாவக வாயிலாக எடுக்கும் அனைத்து விதமான முயற்சிகளுலும் தோல்வி, உடல்நிலை பிரச்சனை முக்கியமாக செரிமானக் கோளாறு, அனைத்திலும் மனம் நிம்மதியை இழத்தல், வெட்டித்தனமான செலவுகள், பணவிரையம் என தீமையையும் 10-ம் பாவகத்தின் வாயிலாக பணிபுரியும் இடத்தில் இருந்து போதிய வருமானமும் பெற்றுக் கொண்டு இந்த ராகு திசையில் நன்மை, தீமை என இரண்டு விதமான பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. 

அடுத்து வரவிருக்கும் குரு திசை 1,5,7,11 ஆகிய பாவகங்கள் வாயிலாக நல்ல யோகமனை பலனை செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருமணம், குழந்தை, குறைந்த உழைப்பு அதிக வருமானம் என சகலவித நன்மைகளையும் குரு திசை வளங்கும். 


திருமண தாமததிற்கு என்ன காரணம்? 
நடக்கும் ராகு திசை களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நடுக்கும் புத்திகளை பார்க்க வேண்டும். 

நண்பரின் குடும்பத்தில் சரியாக 24 வயதில் திருமணப் பேச்சை எடுத்திருக்கிறார்கள் அந்த சமயத்தில் நண்பருக்கு சனி புத்தி நடந்திருக்கிறது. இந்த சனி புத்தி ராகு எந்த வீட்டு பலனை செய்கிறதோ அதே வீட்டின் பலனை சனி புத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சனி புத்தி 25 வயது வரை களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. 

அடுத்து 27 வயது வரை நடந்த புதன் புத்தி 4,8 ஆகிய பாவகத்தின் பலனை செய்து சுக, போக அற்ற நிலையை கொடுத்தது, இந்த காலகட்டத்தில் நண்பர் புத்தி குழம்பி திரிந்து இருக்கிறார். வேலையை திடீரென இழந்தும் இருக்கிறார். இந்த புதன் புத்தியும் களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே திருமணம் கைகூடவில்லை. 

அடுத்து வந்த கேது புத்தியும் அதே நிலையை கொடுத்திருக்கிறது இன்னும் சற்று அதிகமாக பெரியோரிடமும் அவப்பெயரை சம்பாதித்து இருக்கிறார். இந்த கேது புத்தியும் திருமணத்திற்கு தேவையான களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பது தெரிய வருகிறது.

தற்போது நடக்கும் சுக்கிர புத்தியும் அடுத்து நடக்கும் சூரிய புத்தியும் 3,6,12 ஆகிய பாவகத்தின் பலனை மட்டுமே செய்கிறது. எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையே கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே சுக்கிர மற்றும் சூரிய புத்தியும் திருமணத்திற்கு தேவையான களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பது தெரிய வருகிறது.

32 வயதிற்கு மேல் வருகிற சந்திர புத்தி 1,5,7,11 ஆகிய பாவகத்தின் பலனை செய்யவிருக்கிறது இந்த சந்திர புத்தியில் திருமணத்திற்கு தேவையான களத்திர ஸ்தானதின் பலனும் குலதேவதையை குறிக்கும் 5-ம் பாவகப் பலனும் நடந்து குலதெய்வத்தின் அருளாசியால் தென்கிழக்கு திசையில் இருந்து நல்ல பெண்ணை திருமணம் முடித்து வைக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

நண்பரின் கேள்விக்கான பதிலகள்: 
  • என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?
எதிர்காலம் நன்றாக இருக்கும்.
  • எனக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போய்கிறது என்ன காரணம்?
திருமண தாமதத்திற்கு நடந்த புத்திகளும்     நடக்கும் ராகு திசையும் திருமணத்திற்கு     தேவையான களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பதுதான் காரணம்.
  • எனக்கு சரியாக எத்தனை வயதில் திருமணம் நடைபெறும்? 
சந்திர புத்தியில் திருமணம் உறுதி கவலை வேண்டாம்.

முக்கிய குறிப்பு: 
இந்த நண்பரின் ஜாதகத்தில் லக்கினம், களத்திரம், குடும்ப ஸ்தானம் என அனைத்தும் நல்ல நிலையில் இந்தும் சரியான வயதில் திருமணம் நடக்காதத்திற்கு காரணம் நடக்கும் திசையும், புத்திகளுமே ஆகும் நண்பர்களே. எனவே ஒரு ஜாதகத்தில் எத்தனை பாவகம் நன்றாக இருந்தாலும் சரி அந்த நன்மையாக பாவகத்தின் பலனை நடக்கு திசா மற்றும் புத்திகள் ஏற்று செய்தால் மட்டுமே நன்மையை அனுபவிக்க முடியும் இல்லையேல் ஜாதகர் பாடு அதோகெதிதான்.


astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!