என்னுடைய மகளுக்கு திருமணம் எப்போது ?

 
ஓம் சரவண பவ வணக்கம் நண்பர்களே மற்றுமொரு பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைய பதிவில் ஒரு தோழிக்கு திருமணம் ஆகாதது பற்றியும், புத்திர பாவகம் (ஸ்தானம்) பற்றியும் பார்க்கவிருக்கிறோம். 

அந்த தோழியின் அம்மா கேட்ட கேள்விகள். 
1.என்னுடைய மகளுக்கு வரன்கள் வருகின்றன ஆனால் பெண் பார்த்துவிட்டு பிடிக்கிறது என்று சொல்லிவிடு என்னுடைய மகளின் ஜாதகத்தை பார்த்தபின்னர் ஜாதக பொருத்தம் இல்லை என்று சொல்லிவிடு போய்விடுகின்றனர். இது எதனால்?
2.என்னுடைய மகளின் ஜாதகத்தில் என்ன பிரச்சனை உள்ளது என்பதை தெளிவாக விளக்கவும்.
3.என்னுடைய மகளின் புத்திரபாக்கிய நிலை எப்படி உள்ளது? 
4.என்னுடைய மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? 

இதுவே அத்தோழியின் அம்மா கேட்ட கேள்விகள். சரி நண்பர்களே இனி தோழியின் ஜாதகத்தை பார்க்கலாம். 

அதற்க்கு முன்னாள் நம்முடைய கணித விதிகளை நினைவு படுத்திக்கொள்வோம்:

முதல் விதி: 
பிறந்த தேதி-மாதம்-வருடம், பிறந்த நேரம் (மணி-நிமிடம்-வினாடி), பிறந்த இடத்தின் மிகத் துல்லியமான அட்சாம்ஸம், தீர்க்காம்ஸம். இவை சரியாக உள்ளதா என்பதை தெளிவுபடுத்தி கொள்க. 

இரண்டாம் விதி: 
ஜனனம் செய்த ஜாதகரின் பன்னிரெண்டு பாவகத்தையும் துல்லியமாக கணிதம் செய்து எந்தெந்த பாவகம் எத்தனை சதவீதம் பலமாக உள்ளது பலம் இழந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்க.

மூன்றாம் விதி: 
ஒன்பது நவக்கிரகத்தில் எந்த கிரகம் மிகவும் நன்மை செய்யும் அமைப்பில் உள்ளது. என்பதை சரியாக கணிதம் செய்து தெரிந்து கொள்க. 

நான்காம் விதி: 
தற்போது நடக்கும் தசா, புத்தி, அந்தரம், சூச்சமம் என்ன என்பதை தெளிவாக கணிதம் செய்து தெரிந்து கொள்க. 

ஐந்தாம் விதி: 
நடக்கும் தசா, புத்தி, அந்தரம், சூச்சம நாதர்கள் கோட்ச்சாரத்தில் நன்மை செய்கிறார்களா, தீமை செய்கிறார்களா என்பதை தெளிவாக கணிதம் செய்து தெரிந்து கொண்டு இறையருளின் துணையோடு தெளிவாக பலன் சொல்க. 
இந்த ஐந்து விதிகளையும் பயன்படுத்தி ஒரு ஜாதகருக்கு பலன் சொல்லும் போது மிகவும் துல்லியமாக இறையருளின் கருணையோடு நூறு சதவீதம் சரியான பலனை சொல்லிட முடியும். 

தோழியின் ஜாதக விவரம்: 
லக்கினம்: துலாம் 
இராசி: கடகம் 
நட்ச்சத்திரம்: ஆயில்யம் 2ம் பாதம் 
தசா இருப்பு: புதன் தசா 08 வருடம் 08 மாதம் 20 நாள். பாவக விவரம்: 
முதல் பாவகம் (லக்கினம்): 
லக்கினம் 30% பலமுடன் இருக்கிறது. எனவே ஜாதகி நல்ல மனநலம் கொண்டவர் நல்ல பெண் என்பது தெரியவருகிறது. 

இரண்டாம் பாவகம்: 
இரண்டாம் பாவகம் 30% பலமுடன் இருக்கிறது. எனவே நல்ல பேச்சு திறன் கொண்ட பெண் என்பது தெரியவருகிறது. 

மூன்றாம் பாவகம்: 
மூன்றாம் பாவகம் 30% பலமுடன் இருக்கிறது. எனவே நல்ல மனம் உடையவர் என்பதும் மனதில் தோன்றும் எண்ணங்களை சரியாக பிரதிபலிப்பவர் என்பதும் தெரிய வருகிறது. 

நான்காம் பாவகம்: 
நான்காம் பாவகம் 60% பலம் இழந்த நிலையில் இருக்கிறது. எனவே உடல் பிரச்சனைகளை கொடுக்கும் அதாவது மார்பு, நுரையீரல் தசைகள் போன்றவற்றில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மேலும் பொறுமையின்மையை ஏற்படுத்தும். 

ஐந்தாம் பாவகம்: 
ஐந்தாம் பாவகம் 160% பலம் இழந்த நிலையில் இருக்கிறது. எனவே தோழியின் குழதெய்வ வழிபாடு பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆறாம் பாவகம்: 
ஆறாம் பாவகம் 30% பலமுடன் இருக்கிறது. எனவே சண்டை சச்சரவுகளில் இடம்பெற மாட்டார். நேர்மையாக இருப்பார் என்பது தெரிய வருகிறது. 

ஏழாம் பாவகம்: 
ஏழாம் பாவகம் 100% பலமுடன் இருக்கிறது. எனவே நல்ல நண்பர்களின் பாலக்க வழக்கத்தை பெற்று இருப்பார் என்பது தெரிய வருகிறது. 

எட்டாம் பாவகம்: 
எட்டாம் பாவகம் 30% பலமுடன் இருக்கிறது. எனவே தோழி எடுக்கும் முடிவில் திடீர் யோகம் உண்டு. 

ஒன்பதாம் பாவகம்: 
ஒன்பதாம் பாவகம் 60% பலமுடன் இருக்கிறது. எனவே நல்ல அறிவாளி என்பது தெரியவருகிறது.   

பத்தாம் பாவகம்: 
பத்தாம் பாவகம் 60% பலம் இழந்த நிலையில் இருக்கிறது. எனவே எழுப்பு மூட்டுகளில் பிரச்சனைகளை கொடுக்கும். 

பதினோராம் பாவகம்: 
பதினோராம் பாவகம் 30% பலமுடன் இருக்கிறது. நல்ல அதிஷ்டமுடையவர். 

பன்னிரெண்டாம் பாவகம்: 
பன்னிரெண்டாம் பாவகம் 60% பலமுடன் இருக்கிறது. இது மிகவும் நல்ல விஷயம். எனவே தோழி வெளிநாடுகளில் குடியுரிமை வாங்கி வாழ்க்கையை நடத்தலாம். இதுவே ஜாதகியின் பன்னிரெண்டு பாவக நிலை ஆகும்.குடும்பம் மற்றும் களத்திர பாவகம்: 
குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவகம் நல்லநிலையில் இருக்கிறாத என்று பார்க்க வேண்டும். குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருக்கிறது. அடுத்து களத்திர ஸ்தானம் நல்லநிலையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். களத்திர ஸ்தானமும் நல்லநிலையில் இருக்கிறது. 

எனவே களத்திர ஸ்தானம், குடும்ப ஸ்தானம் பாதிக்கப் படவில்லை என்பதை தெரிந்து கொண்டோம். ஆகவே நடக்கும் தசா, புத்திகள் நல்லது செய்கிறதா என்று கணிதம் செய்ய வேண்டும். அடுத்து தற்போது நடக்கும் தசா, புத்தி என்னவென்று பாக்க வேண்டும். 

தசா, புத்தி விவரம்: 
தற்போது ஜாதகிக்கு சுக்கிர திசை நடக்கிறது. தசா நாதன் ஐந்தாம் பாவகத்தை லக்கினத்திற்கு பாதக ஸ்தானதுடன்  சம்மந்தப்படுத்தி தோழியின் 16 வயது முதல் 36வரை 160% பாதகமான பலனை மட்டும் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது ஜாதகிக்கு குரு புத்தி நடக்கிறது. புத்தி நாதன் நான்கு மற்றும் ஐந்தாம் பாவக பலனை செய்கிறார். அவ்விரண்டு பாவகமும் 60% பலம் இழந்த நிலையில் இருக்கிறது. எனவே புத்தி நாதனும் பாதகத்தையே செய்கிறார். 

எனவே திருமண பிரச்சனைக்கு நடக்கும் தசா, புத்தி தான் காரணம் என்று தெளிவாக தெரிகிறது. 

36 வயது வரை தோழிக்கு பாதகமான பலன் நடைபெறுவதால் தோழி தன்னுடைய பூர்வீகத்தை விட்டு வெளியே இருப்பது மிகவும் நல்லது. மேலும் தன்னுடைய குழதெய்வ அருள் ஜாதகிக்கும் கிடைக்கவில்லை. அதற்கு சரியான வழிபாடுகளையும் செய்ய வேண்டும். 

இயற்கையாகவே தோழியின் அமைப்பில் குடும்பம், களத்திரம் பாதிக்கப்படவில்லை எனவே திருமணம் உறுதி கவலை தேவையில்லை. 
கொட்ச்சாரத்தில் 2015 ஒன்பதாம் மாதத்திற்கு பிறகு 2016 ஜீலை மாதம் வரை நல்ல பலன் நடக்கிறது எனவே இந்த கலகட்டத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வரும் வரன் உறுதியாக முடியும். திருமணம் உறுதி கவலை தேவையில்லை. 

இருப்பினும் புத்திர பாவகம் பாதிக்கப் பட்டுள்ளது எனவே மாப்பிளையை தேர்வு செய்யும் போது அவருடைய அமைப்பில் புத்திர பாவகம் 100% நன்றாக உள்ளதா என ஜோதிட ஆலோசனை பெற்று திருமணம் செய்து வைப்பது நல்லது. 

நாம் தெளிவாக பலன் சொன்னவுடன் அந்த தோழியின் தாய் முகத்தில் சந்தோஷம் ஏற்பட்டது. 

கவனிக்க வேண்டியது: 
நம்முடைய சுய ஜாதகத்தில் மொத்தம் உள்ள பன்னிரெண்டு பாவகத்தில் பதினோரு பாவகம் நல்லநிலையில் இருந்து ஒரே ஒரு பாவகம் மட்டும் பாதிக்கப்பட்டு அந்த பாதிக்கப்பட்ட பாவகத்தின் பலனை நமக்கு நடக்கும் தசா, புத்திகள் ஏற்று நடத்துமேயாயின் 100% அந்த பாவக வழியாக கெடுபலனையே சந்திக்கவேண்டி இருக்கும். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!