2015 - 2016 குரு பெயர்ச்சி – லக்கின வாரியாக பலன்கள் பகுதி-1

ஓம் சரவண பவ 
வணக்கம் நண்பர்களே மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த பதிவில் நாம் குரு பெயர்ச்சியை பற்றி பார்க்கவிருக்கிறோம். குரு பெயர்ச்சி என்ற உடனே நம்மில் பல பேருக்கும் அப்படி என்றால் என்ன என்ற கேள்வி தான் இன்றைய இளைஞர்களிடமும் நிலவி வருகிறது. 

சரி குரு பெயர்ச்சி என்றால் என்ன? 

குரு என்கின்ற கிரகம் கடகத்தில் 90:00:01 பாகையில் இருந்து 120:00:00 பாகையை கடந்து சிம்மத்தில் 120:00:01 பாகைக்குள் வருவதையே குரு பெயர்ச்சி அடைந்து விட்டார் என்கிறோம். 120:00:01 பாகையில் இருந்து 150:00:00 பாகை வரை சிம்மத்தின் வீடாகும். இங்கு பெயர்ச்சி செய்துள்ள குரு தன்னுடைய சொந்த வீட்டிற்கும், தன்னுடைய பார்வையான 5,7,9 ஆகிய பார்வையாலும் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்களை செய்கிறார் என்பதையே குரு பெயர்ச்சி பலன்கள் என்கிறோம். 

நம்முடைய முறையில் ராசிக்கு முக்கியத்துவம் இல்லை நண்பர்களே. எனவே நாம் லக்கின வாரியான பொதுப் பலன்களை பார்ப்போம். 

ஓம் நகத்வஜாய வித்மஹே 
பத்ம ஹஸ்த்தாய தீமஹி 
தந்நோ ராகு ப்ரோசோதயாத் 

மேஷம் லக்கினம்:


மேஷ லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த நன்மையை செய்யும். லக்கினத்திற்கு 5-ம் இடத்தில் அமர்ந்துள்ள குரு இந்த ஆண்டு மேஷ லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு நல்ல பட்ட படிப்பு, கல்வித்துறையில் வேலைவாய்ப்பு, விளையாட்டு துறையில் சாதனை, குடும்பத்தில் தெளிவான செயல்பாடு, எதையும் ஆராய்ந்து முடிவு செய்யும் பக்குவ நிலை, 100% வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தன்னுடைய பூர்வீகத்தில் நல்ல மதிப்பு மரியாதை, குழந்தை செல்வம்  என அனைத்து வகையிலும் நன்மையை செய்யும். தன்னுடைய மூத்த சகோதர வழியாக மட்டும் பிரச்சனையை கொடுக்கும்.  

ரிஷபம் லக்கினம்:


ரிஷப லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த சோதனையையே தரும் என்பது வருத்தம் மிகுந்ததே. லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் உள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு உஷ்ணப் பிரச்சனையையும், நெருப்பு காயங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆண்கள் தன்னுடைய தாயின் உடல்நிலையிலும் பெண்கள் தன்னுடைய தந்தையின் உடல்நிலையிலும் அக்கறை செலுத்துவது நல்லது. வேளையில் இருக்கும் நண்பர்கள் எந்த சூல்நிலையிலும் தன்னுடைய வேலையை விட்டுவிடக் கூடாது. படிக்கும் மாணவர்களின் ஞாபக சக்தி குறையும். சமூகத்தில் மரியாதை குறையும் வாய்ப்பு அதிகம். தன்னுடைய செயல்பாடுகளே பலவித பாதகத்தை கொடுத்துவிடும்.  எனவே பொறுமையுடன் செயல்படுவதும் பெரியோர்களின் பேச்சை கேட்டு நடப்பதும் நல்ல நன்மையை கொடுக்கும் இதுவே பரிகாரமும் ஆகும். 

மிதுனம் லக்கினம்:


மிதுன லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த நன்மையை செய்யும். லக்கினத்திற்கு 3-ம் இடத்தில் இருக்கும் குரு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி , 100% வெளிநாட்டு வேலை வாய்ப்பு, குறைந்த உழைப்பில் அதிக ஊதியம், தகவல் தொடர்பாடல், படிப்பில் அக்கறை செலுத்தும் போக்கு, என நன்மையை அனுபவிக்க போகிறார்கள். திருமணம், கூட்டுத்தொழில் இவை இரண்டும் இந்த ஆண்டு பலன் கொடுக்காது. 

கடக லக்கினம்: 


கடக லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த சோதனையையே தரும் என்பது வருத்தம் மிகுந்ததே. லக்கினத்திற்கு 2-ம் இடத்தில் உள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு கடன் தொல்லைகள், உடல் நிலை பிரச்சனைகள், பேச்சில் தடுமாற்றம், திடீர் இளப்புகள், செய்யும் வேளையில் திருப்தி இன்மை என தீய பலனையே கொடுக்கும். இவர்களுக்கு பரிகாரம் என்னவென்றால் அமைதியாக இருப்பது, தேவையில்லாத காரியங்களில் மூக்கை நூலைக்காமல் இருப்பது, கடன் வாங்குதல் மற்றும் கொடுத்தலை தவிர்ப்பது. செய்யும் வேளையில் கவனம் செலுத்துதல் இவைகளை கடைபிடித்தால் நன்மையை அனுபவிக்கலாம். 

சிம்மம் லக்கினம்: 


சிம்ம லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த நன்மையை செய்யும். லக்கினத்திற்கு 1-ம் இடத்தில் அமர்ந்துள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு மதிநுட்ப அறிவாற்றலையும், நல்ல ஞானத்தையும், ஏற்றுமதி இறக்குமதில் திடீர் லாபத்தையும், வெளிநாட்டு பயணத்தில் நல்ல ஆதாயமும், கல்வியில் சிறந்தும், எதீர்பாரா யோகநிலையையும் அடைவர். மனைவி மற்றும் நபர்களிடம் பொறுமையை கடைபிடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். 

கன்னி லக்கினம்: 


கன்னி லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த சோதனையையே தரும் என்பது வருத்தம் மிகுந்ததே. லக்கினத்திற்கு 12-ம் இடத்தில் உள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு மானவர்கள் படிப்பில் மந்தம், மண், மனை, வாகணத்தால் விரையம், அடிப்படை பராமரிப்பு திறன் பாதித்தல், தன்னுடைய செய்ல்பாடுகளால் பெரியோர்களிடம் அல்லது பணிபுரியும் இடத்தில் அவப்பெயர் என தீமையை சந்த்தித்தாலும் திருமணம், கணவனின் ஆதரவு, கூட்டு முயற்சி என கன்னி லக்கினத்திற்கு நன்மை தீமை இரண்டும் சேர்ந்தே நடக்கும். 

முக்கிய குறிப்பு: தங்களது  ஜாதகத்திற்கும் இந்த குரு பெயர்ச்சியின் தெளிவான பலன்களை தெரிந்துகொள்ள விரும்பினால் featurereport1@gmail.com என்ற இந்த மின்னஞ்சலுக்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பி வைக்கவும் நன்றி. 


astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!