செவ்வாய் தோஷம், ராகு, கேது தோஷம் உண்மையா?மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே. இந்த பதில் ஒரு நண்பரின் ஜாதகத்தை வைத்து இவருக்கு 34 வயதாகியும் இன்னும் ஏன் திருமணம் ஆகவில்லை? ராகு இரண்டாம் இடத்தில் இருப்பதால் அது களத்திர வழி தோசமாகுமா? போன்றவற்றை பார்போம் நண்பர்களே. 

கும்பகோணத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் எம்மிடம் கேட்ட கேள்வி:
அய்யா என்னுடைய ஜாதகத்தில் ராகு இரண்டில் இருந்து தற்போது எனக்கு ராகு திசை நடப்பதால் எனக்கு எந்தவரனும் அமைய வில்லை இதை காலசர்ப்ப தோஷம் என்றும் மனைவிக்கு ஆகாது என்றும் பல ஜோதிடர்கள் கூறுகின்றனர். வீடு, நல்ல வேலை அனைத்தும் இருந்தும் திருமணம் மட்டும் நடக்காதது மிகுந்த வேதனைக்கு ஆளாக்குகிறது. எனக்கு திருமணம் நடக்குமா இல்லை நடக்காதா? என்னுடைய ஜாதகத்தில் இருப்பதுதான் என்ன தெளிவான விளக்கம் தேவை. தங்களின் வாங்கிக்கிலையில் நான் பணம் செலுத்த தயாராக உள்ளேன். 

ஓம் சரவண பவா
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நோ பவும ப்ரசோதயாத்

உண்மையாகவே தோஷம் என்ற ஒன்று இருக்கிறதா? ஏன் பல ஜோதிடர்கள் தோஷம் என்று பல ஜாதகத்தை ஒதுக்கி பல நண்பர்களின்  வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்?: இந்த பதிவில் நான் சொல்லப் போகும் தோஷம் பற்றிய விளக்கம் பல ஜோதிடர்களுக்கு முரண்பட்ட கருத்தாக இருக்கலாம் ஆனால் உண்மைநிலை இதுவே. சரி வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.

செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம், ஏழரை சனி, கிரகம் உச்சம், நீசம் என்று பலவாறு கிரகத்தை அடிப்படையாக வைத்து ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்லுவதென்பது மிகவும் முட்டாள் தனமான விஷயம் நண்பர்களே. 2,7,12 ஆகிய இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் மட்டும் ஏன் செவ்வாய் தோஷம் என்கிறோம்? ஏன் அந்த இடத்தில் குரு இருந்தால் குரு தோஷம்? புதன் இருந்தால் புதன் தோஷம்? என்று சொல்வதில்லை. அதேபோல் 2-ல்‌ ராகு இருந்தால் அது தோஷம் ஆகிவிடுமா? செவ்வாய், ராகு இந்த இரண்டு கிரகத்திற்கு மட்டும் தான் தோஷம் உள்ளதா? ஏன் இந்த இரண்டு கிரகத்திற்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம்?. 2,7 ஆகிய வீடுகளுக்கு எதற்காக மிக முக்கியம்? என்று கருதப் படுகிறது இப்படி பல கேள்விகள் என்மனதில் தோன்றியதன் விளைவே ஒரு பொறியாளனாக இருந்த நான் ஜோதிடத்தின் பக்கம் திரும்ப காரணமாகியது.  

ஜோதிடம் என்பது முற்றிலும் உண்மை அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. நாம் வசிக்கும் வீடு நன்றாக இருந்தால் மட்டுமே மழை காலங்களில் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். நாம் வசிக்கும் வீடு பராமரிப்பு இன்றி இருக்கும் போது மழை, வெயில் காலங்களில் பல கஷ்டங்களை சந்தித்தே ஆக வேண்டும். இப்படிபட்ட சூழ்நிலையில் நாம் வெயில், மழையை குத்தம் சொல்வதா இல்லை நம்முடைய பாலுதான வீட்டை குத்தம் சொல்வதா நன்றாக சிந்தித்து பாருங்கள் நண்பர்களே மழை, வெயில் என்பது ஒரு இயற்க்கையான பொது விஷயம் அதற்கு இந்த வீட்டுக்காரன் நல்லவன் இந்த வீட்டுக்காரன் கெட்டவன் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது எனவே நாம் வசிக்கும் வீடு நன்றாக இருந்தால் நாம் பாதிப்பை சந்திக்கப் போவது இல்லை. பலுதான வீடாக இருந்தால் அதை பராமரிப்பது முக்கியம் இதை உணர்ந்து கொள்வது அதைவிட முக்கியம். 

இதை போன்றே நம்முடை ஜாதகத்திலும் பாவகம் என்னும் வீடு நன்றாக இருந்தால் எந்த கிரகத்தின் கதிரியக்கமும் அந்த பாவக வழியில் நன்மைகளை மட்டுமே செய்யும். அதுவே பலம் இழந்த பாவகமாக இருந்தால் எந்த ஒரு கிரகத்தின் கதிரியக்கமும் அந்த பாவகத்தின் காரகத்துவத்திற்கு ஏற்றார் போல் அவயோகப் பலனையே செய்யும். செவ்வாய் மற்றும் ராகுவின் கதிரியக்கம் மட்டும் பலம் வாய்ந்தது அல்ல நண்பர்களே அனைத்து கிரகத்தின் கதிரியக்கமும் பலம் வாய்ந்ததே. (ராகு என்பது ஒரு கிரகமே இல்லை இதை மற்றுமொரு பதிவில் பார்போம்) 

அனைத்து கிரகங்களும் ஒரே மாதிரியான கதிரியக்கத்தையே 12 பாவகங்களுக்கும் வழங்குகிறது அந்த கதிரியக்கத்தின் பலனை பாவகங்களே தீர்மானிக்கிறது எனவே கிரகங்களை குத்தம் சொல்வது மிகவும் தவறு நண்பர்களே. 

ஓர் உதாரணத்திற்கு தற்போது ராகு கன்னியில் உள்ளது எனவே தற்போது பிறக்கும் சிம்ம லக்கின ஜாதகர்கள் அனைவருக்கும் தோஷம் என்று சொல்லிவிட முடியுமா அப்படி கணிதம் செய்வது மிகவும் தவறு நண்பர்களே அந்த ஜாதகத்தில் ராகு எந்த வீட்டிற்கு ஆதிபத்தியம் வாக்குகிறது, தன்னுடை தசா, புத்தி, அந்தர, சூட்ச்சம காலங்களில் எந்த வீட்டின் பலனை செய்கிறது மற்றும் கோட்ச்சாரத்தில் எந்த வீடின் பலனை செய்யும் இந்த வீடுகள் இறையருளின் கணக்கிற்கு எந்தெந்த பாவகமாக வருகிறது மேலும் என்ன ராசியில் என்ன இயக்கதத்துவத்தில் அமைகிறது என்று இன்னும் பல சூட்ச்சம விஷயங்கள் இருக்கிறது நண்பர்களே இதையெல்லாம் வைத்து நாம் பலனை தீர்மானிக்கும் போது மிகவும் துல்லியமாக பலன் கிடைக்கும் இதுவே 100% உண்மை நிலை ஆகும். 

சரி இனி நண்பரின் ஜாதகத்தை பார்போம்: 


லக்கினம்: மிதுனம் 
நட்ச்சத்திரம்: உத்திரம்-3 
நாம் ஏற்கனவே சொன்னது போல ஒருவருக்கு திருமண நல்லபடியாக நடக்க வேண்டுமானால் அவர்களுடைய ஜாதகத்தில் 1,2,7 ஆகிய பாவகங்ககள் மற்றும் இறையருளின் கணக்கிற்கு மேஷம், ரிஷபம், துலாம் ராசிகள் மேலும் நடக்கும் தசா, புத்திகள் நன்றாக இருக்க வேண்டும் இவை அனைத்தும் நன்றாக இருக்கும் போது திருமணம் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெறும் நண்பர்களே. 

நண்பரின் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் மேஷ ராசி நல்ல நிலையில் இருக்கிறது, அடுத்ததாக லக்கினத்திற்கு 7-ம் பாவகம் மற்றும் ‌ இறையருளின் கணக்கிற்கு களத்திர பாவகமான துலாம் ராசியும் நல்ல நிலையில் உள்ளது, ஆனால் லக்கினத்திற்கு 2-ம் பாவகமான கடக ராசி மற்றும் ‌ இறையருளின் கணக்கிற்கு இரண்டாம் பாவகமான ரிஷப ராசி முழுமையாக பலம் இழந்த நிலையில் உள்ளது குறிப்பாக 2-ம் பாவகம் மிதுன லக்கினத்திற்கு பாதக ஸ்தானமான 2-ம் பாவகத்துடன் சம்மந்தம் பெறுவது பணம் சார்ந்த விசயங்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும் குடும்ப விஷயத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும். ரிஷப ராசி லக்கினத்திற்கு 12-ம் பாவகமாக வந்து பலம் இழக்கிறது. (இதன் விளைவு நண்பர் தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கி கொள்ள முடியவில்லை) எனவே திருமணம் தாமதம் மட்டுமே ஆகும் களத்திர பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் உறுதியாக திருமணம் நடைபெறும். 

இதில் பலம் இழந்த பாவகமானா 2-ம் பாவகத்திற்கு ஆதிபத்தியம் வாங்குவது செவ்வாய் 12-ம் பாவகத்திற்கு ஆதிபத்தியம் வாங்குவது சனி மற்றும் 11-ம் பாவகத்திற்கு ஆதிபத்தியம் வாங்குவது சூரியன் எனவே திருமணத்தை கெடுப்பது செவ்வாய், சனி மற்றும் தற்போது நடக்கும் சந்திர திசை ஏற்று நடத்தும் பாதக ஸ்தான தொடர்பான 11-ம் பாவகத்தின் அதிபதியான சூரியன் இந்த மூன்று கிரகமும் திருமணத்தை தாமதம் செய்கிறது நண்பர்களே. 

இதில் ராகு தோசத்திற்கெல்லாம் இடமே இல்லை. உண்மையை சொல்லவேண்டும் என்றால் இந்த நண்பரின் ஜாதகத்தில் 19 வயது முதல் 37 வயது வரை முழுமையான நன்மையை செய்வது இந்த ராகு மட்டுமே நண்பர் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 6-ம் பாவகம் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு அதை ராகு திசை ஏற்று நடத்துவது மிகவும் சிறப்பு. 

தற்போது நடக்கும் சந்திர புத்தி பாதக ஸ்தானத்தின் பலனை களத்திர வழியாக கொடுக்கிறது எனவே திருமணம் தாமதமாகிறது. இந்த நண்பரின் ஜாதகத்தில் கொட்ச்சார கிரகங்களே திருமண விஷயத்தில் மிகவும் மோசமான பலனை செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜோதிடத்தில் பல சூட்ச்சம விஷயங்கள் உள்ளன அதன் மூலமாக நண்பருக்கு எந்த காலகட்டத்தில் திருமணம் நடைபெறும் என்பதை குறித்து கொடுத்தோம். மேலும் எந்தவித பொருள் செலவுகளும் இல்லாத பரிகாரத்தையும் பரிந்துரை செய்து கொடுத்தோம் மேலும் மணப்பெண்ணின் ஜாதகம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லி அனுப்பினோம் நண்பர் சந்தோசத்துடன் தெளிவடைந்து சென்றார். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!