பாதகஸ்தானம் படுத்திய பாடு.

அனைவருக்கும் வணக்கம் மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. இந்த பதிவில் ஒரு நண்பரின் திருமண தாமதத்திற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி பார்க்கப் போகிறோம். வயது 30 ஆகியும் திருமணம் ஆகவில்லை என்ன காரணம்?


லக்கினம்: மேஷம் 
நட்சத்திரம்: கேட்டை-4 

நண்பர் இதுவரை கடந்து வந்த திசைகளை பார்ப்போம் முதலில் புதன் மற்றும் கேது திசை இவரின் 7 வயது வரை நடந்துள்ளது அந்த சமயத்தில் 2,8ம் பாவகம் பூர்வீகத்துடன் சம்மந்தம் பெற்று நல்ல பலனையே செய்துள்ளது 7 வயது சிறுவராக இருக்கும் போது நண்பர் நல்ல துடிதுடிப்பாகவும் நல்ல புத்திக்கூர்மையுடனும் செயல்பட்டிருப்பார். 

அடுத்து நடந்து முடிந்த சுக்கிர திசை நண்பரின் 27 வயது வரை 4,7ம் பாவகத்தின் பலனையே செய்துள்ளது இந்த சுக்கிர திசை காலத்தில் நண்பரின் படிப்பு மற்றும் நண்பர்களின் சேர்க்கை இவை அனைத்தும் நல்லவிதமாகவே அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் திருமணம் நடக்க நல்ல வாய்ப்புகள் இருந்தும் நடக்கவில்லை ஏன்?   

நண்பரின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவகம் மற்றும் களத்திர ஸ்தானம் என்னும் 7ம் பாவகம் நல்ல நிலையிலேயே இருக்கிறது. பின்பு ஏன் திருமணம் ஆகவில்லை சற்று உற்று நோக்கினால் புரியும் நண்பர்களே இந்த நண்பரின் ஜாதகத்தில் லாபஸ்தானம் என்னும் 11ம் பாவகம் பாதகஸ்தானதுடன் சம்மந்தம் பெற்று இருக்கிறது. இங்கு 11ம் பாவகம் என்பது மூத்த சகோதரத்தையும் குறிக்கும் அல்லவா இவருடைய அண்ணனுக்கு திருமணம் மிகவும் தாமதமாகவே நடந்துள்ளது அதுவே இவரின் திருமண தாமதத்திற்கு காரணம் ஆகியது. தற்போது இவருக்கு 30 வயது ஆகிவிட்டதால் வரும் சம்மந்தங்களும் நண்பரின் வயதை சுட்டிக்காட்டி தள்ளிக் கொண்டு போகிறது. 

தற்போது நண்பருக்கு சூரிய தசா நடந்து கொண்டிருக்கிறது எனவே இந்த தசா காலத்தில் நண்பருக்கு திருமணம் உறுதி கவலை தேவையில்லை. இவருடைய அண்ணனின் ஜாதகத்தை பார்த்தால் அவருக்கு எதனால் திருமணம் தாமதமாக நடந்தது என்பது புரிய வரும். அந்த நண்பரின் ஜாதகத்தை பார்க்கலாம் வாருங்கள். 


லக்கினம்: கன்னி 
நட்சத்திரம்: உத்திரட்டாதி-2 

இவருடைய அமைப்பில் குடும்பஸ்தானம் என்னும் 2ம் பாவகம் 8ம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்றுள்ளது இதன் காரணமாக திருமணம் தாமதமாக நடந்தது. பேச்சு திறனையும் அந்த பாவகமே தீர்மானம் செய்கிறது எனவே இவரின் திருமண தாமதத்திற்கு இந்த நண்பரே காரணமாக இருக்க வேண்டும் என்பது தான் விதி.  

கவனிக்க மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய லக்கினங்களுக்கு பாதகஸ்தானம் 11 ஆகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்கினங்களுக்கு பாதகஸ்தானம் 09 ஆகும். மிதுனம், கன்னி, தனுஷ், மீனம் ஆகிய லக்கினங்களுக்கு பாதகஸ்தானம் 07 ஆகும். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!