எனக்கு எப்போது குழந்தை பிறக்கும்?

மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. வேலூரை சேர்ந்த ஒரு நண்பர் “அய்யா எனக்கு திருமணம் முடிந்து இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை என்னுடைய அமைப்பை பார்த்து எனக்கு குழந்த பாக்கியம் இருக்குமா என்று கணித்து சொல்லுங்கள்” என்று அவருடைய ஜாதகத்தை அனுப்பினார். அவரின் மனைவியின் ஜாதகம் மிகவும் சிறப்பாகவே இருந்தது எனவே அவருடைய மனைவியிடம் எந்த குறையும் இல்லை என்பது தான் உண்மை. 

சரி நண்பரின் ஜாதகத்தை பார்ப்போம்: 
லக்கினம்: மிதுனம் 
நட்ச்சத்திரம்: உத்திரட்டாதி-4 

முதலில் நண்பரின் பாவகத்தை அலசுவோம். நண்பரின் லக்கினம்,3,5,6,7,11,12 ஆகிய பாவகங்கள் திரத் தன்மையோடு 60% பலம் இழந்தநிலையில் உள்ளது 8ம் பாவகம் 30% பலம் இழந்தநிலையில் உள்ளது. 

2,4 ஆகிய பாவகங்கள் 100% நல்ல நிலையில் உள்ளது. 9,10 ஆகிய பாவகங்கள் 60% திரத் தன்மையில் நல்ல நிலையில் இருப்பது மிகவும் சிறப்பு. 
5,7,12 ஆகிய பாவகங்கள் பலம் இழந்ததன் காரணமாக திருமணத்தை தாமதம் செய்தது. இருப்பினும் 2ம் பாவகம் 100% நல்லநிலையில் இருந்து திருமணம் என்னும் சுப நிகல்வை ஏற்படுத்தி கொடுத்தது.  

நண்பர் கடந்து வந்த திசைகளைப் பார்ப்போம் நண்பர் 2 வயது வரை சனி திசையில் பயனித்துள்ளார். சனி 9ம் வீட்டு பலனை மட்டுமே செய்திருக்கிறது. 9ம் பாவகம் 60% நல்ல நிலையில் உள்ளது. எனவே 2வயது வரை சிறப்பான வளச்சியை கொடுத்திருக்கும். 

புதன் திசை 19 வயது வரை 9ம் பாவகப் பலனை மட்டுமே செய்திருக்கிறது. எனவே புதன் திசையில் நல்ல படிப்பை கொடுத்திருக்கிறது. 

கேது திசை 26 வயது வரை 2,4 ஆகிய பாவகத்தின் பலனை மட்டுமே செய்திருக்கிறது 2,4ம் பாவகம் 100% நல்ல நிலையில் உள்ளது. எனவே கேது திசையும் நல்ல மேற்படிப்பு மற்றும் சுகபோக வாழ்வை அனுபவிக்கும் நிலையை கொடுத்திருக்கும். இந்த திசையில் இறுதி காலகட்டத்தில் திருமணப் பேச்சை குடும்பத்தில் ஏற்படுத்தி இருக்கும். 

சுக்கிர திசையும் 2,4 பாவாகப் பலனை மட்டுமே செய்வதால் சுக்கிர திசையில் திருமணம் நடைபெற்றது. 

கவனிக்க தக்கது சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களின் திசை புத்தி அந்தரம் சூச்சம காலங்களில் ஜாதகருக்கு கடினமாகவே இருக்கும். 

தற்போது சுக்கிர திசை நடக்கிறது 2,4ம் வீட்டுப் பலன் நடந்தாலும் செவ்வாய் புத்தி 3,6,12 மற்றும் 1,5,7,11 ஆகிய பாவகத்தின் பலனை செய்கிறது எனவே செவ்வாய் புத்தி சரியில்லை என்பது  தெரிகிறது. மேலும் 5ம் பாவகம் பலம் இழந்த நிலையில் இருப்பதும் அந்த வீட்டுப் பலனை செவ்வாய் எடுத்து செய்வதும் குழந்தை பாக்கியம் இந்த காலகட்டத்தில் இல்லை என்பது தெரியவருகிறது. செவ்வாய் புத்தி 24.11.2015 வரை நடக்கிறது. 

அடுத்து ராகு புத்தியில் 9ம் வீட்டு பலன் நடக்கவிருக்கிறது 9ம் வீடு 60% நல்ல நிலையில் இருந்து அதன் அதிபதி சூரியனாக இருக்கிறது எனவே ராகு புத்தியில் குழந்தை பிறக்கும் இதுவே உண்மை நிலை. 

நண்பர்களே இவருடைய ஜாதகத்தில் குரு, சந்திரன் நல்ல நிலையில் இருக்கின்றனர் எனவே குழந்த பாக்கியம் உண்டு இருப்பினும் 5 மற்றும் 3ம் பாவகம் பலம் இழந்து 5க்கு சனி ஆதிபதியாகவும் 3க்கு செவ்வாய் அதிபதியாகவும் இருப்பதே குழந்தை தாமதத்திற்கு காரணம் எனவே இந்த ஜாதகத்தின் உண்மைநிலையை புரிந்து கொண்டு மனதை பக்குவப் படுத்திக்கொள்வது நல்லது. 

பரிகாரம்: 
பொதுவாக நான் பரிகாரத்தை பரிந்துரை செய்வது இல்லை. இருப்பினும் நான் பார்த்து வியந்து போன ஒரு தெய்வம் கீழாத்தூர் நாடியம்மன். இந்த அம்மன் சக்கி என்பது ஜாதகத்தின் நிலையையே தலைகீலாக புரட்டிவிடும். எனவே நண்பர் இந்த கோவிலுக்கு சென்று மனதில் உள்ள குறைகளை அம்மன் இடத்தில் சொல்லி விட்டு சென்றால் ஒரு மாத காலத்திற்குள் பலன் கண்கூடாகத் தெரியும். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!