திருமணப் பொருத்தம் பார்க்கலாம் வாங்க


மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. எம்மிடம் ஜோதிட ஆலோசைனைக்கு ஒரு மகனின் தாய் வந்திருந்தார்கள். அவர்கள் தன்னுடைய மகன் மற்றும் மருமகளின் ஜாதகத்தை கொடுத்து “அய்யா என்னுடைய மகனுக்கு திருமணம் முடிந்தது முதல் குடும்ப வாழ்க்கையை இருவரும் சரியான முறையில் வாழவில்லை முதலில் ஒரு பெண்குழந்தை பிறந்தவுடனே இறந்து விட்டது. என்னுடைய மகனை மருமகள் சரியாக புரிந்து கொள்ளாமல் சண்டை வந்து இறுதியில் என்னுடைய மகன் ஜெயிலில் இருந்து கடுமையான மனவேதனைக்கு தள்ளப்பட்டார். இதற்கு என்ன காரணம். இருவருக்கும் திருமணம் செய்யும்போது பல ஜோதிடர்களிடம் பொருத்தம் பார்த்து அனைத்து பொருத்தமும் இருக்கிறது என்று தெரிந்த பிறகே திருமணம் முடித்து வைத்தோம். தற்போது இருவருக்கும் விவாகரத்து செய்யலாம் என்று முடிவுசெய்துள்ளோம். இதற்கு எல்லாம் என்ன காரணம் திருமணத்திற்கு முன்பு என்னுடைய மகன் நல்ல நிலையில் வெளிநாட்டில் இருந்தார் திருமணம் முடிந்தவுடன் அவரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது என்ன செய்வதென்றே புரியவில்லை.” அந்த தாயாருக்கு ஜாதகத்தின் உண்மை நிலையை புரிய வைத்து அனுப்பி வைத்தேன். 

ஜோதிடர்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். மருத்துவர்களிடன் எப்படி தன்னுடைய உடல் பிரச்சனைகளை மறைக்காமல் சொல்லுகிறார்களோ அதைபோன்றே ஜோதிடர்களிடமும் தன்னுடைய குடும்ப விசயங்களையும் சொல்லி சரியான வழிகாட்டுதலை எதிர்பார்க்கின்றனர் ஆகவே சரியான முறையில் கணித்து நன்மை தீமைகளை எடுத்துரைப்பது நம்முடைய கடமை என்று உணர்ந்து செயல்படுவது நல்லது. 

தற்போது அந்த தம்பதியரின் ஜாதகத்தைப் பார்போம் நண்பர்களே. முதலில் இரு ஜாதகத்திற்கும் பொருத்தம் இருக்கிறதா என்று பார்போம். 

மணமகனின் ஜாதகம்: 

இவருடைய ஜாதகத்தில் 2,8 ஆகிய பாவகங்கள் விராய ஸ்த்தானத்துடன் சம்மதம் பெற்று 100% பலம் இழந்த நிலையில் இருக்கிறது. 

கவனிக்க வேண்டியவை:
நண்பர்களே எந்தஒரு ஜாதகத்திலும் பாவக வலிமை என்பதே மிகவும் முக்கியம் பாவகத்தின் வலிமையை வைத்தே பலனை நிர்ணயம் செய்யவேண்டும். பலன் காணும் பாவகம் நல்ல நிலையில் இருக்குமேயானால் அந்த பாவகத்திற்கு அதிபதியான கிரகமும் நண்மைகளை வாரிவழங்கும். 

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது இருவரின் ஜாதகத்திலும் மிகமுக்கியமாக 5ந்து பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது சிறந்தது ஆகும். 
அது குடும்பம் மற்றும் வருமானத்தை குறிக்கும் 2, புத்திர ஸ்த்தானம் என்னும் 5, களத்திர ஸ்த்தானம் என்னும் 7, ஆயுளை குறிக்கும் 8, கௌரவத்தை குறிக்கும் 10 ஆகிய பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது சிறந்தது ஆகும். 

அனைத்து ஜோதிடர்களும் களத்திர ஸ்த்தானம் நல்லநிலையில் இருந்தாலே போதும் என்று நினைப்பது தவறாகும். 7ம்‌ பாவகம் என்பது கணவன் மனைவியின் அன்யோனியத்தை குறிக்கும் ஆனால் 2ம் பாவகமே மிகவும் முக்கியம் கணவன் மனைவி குடும்பம் நடத்தும் விதத்தை எடுத்து காட்டுவது இந்த 2ம் பாவகம் ஆகும். 

இந்த 5ந்து பாவகத்திலும் மிக முக்கியம் 2,5,8 ஆகிய பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். 

இந்த மணமகனின் ஜாதகத்தில் 2,8 ஆகிய பாவகங்கள் 100% பலம் இழந்து விட்டது. எனவே மணமகளின் ஜாதகத்திலாவது இந்த பாவகங்கள் 100% நல்ல நிலையில் இருப்பது மிகவும் முக்கியம். 

மணமகளின் ஜாதகத்தை பார்போம்: 

இவருடைய ஜாதகத்தில் 2,5,8 ஆகிய மூன்று பாவகங்களும் 100% பலம் இழந்தநிலையில் உள்ளது கவனிக்கத் தக்கது. 

இரண்டாம் பாவகம் 100% பாதிக்கப்பட்டதன் காரணமாக தன்னுடைய உடமைகளை பாதுகாக்கும் தன்மை குடும்பம் நடத்தும் விதம் அன்பாக பேசும் தன்மை இவை அனைத்தும் இருவருக்கும் பாதிக்கப் பட்டுள்ளது. 

இவருடைய ஜாதகத்தில் 5ந்தாம் பாவகம் பாதிக்கப்பட்டு குழந்தைக்கு தடையை ஏற்படுத்தியது. 

8ம் பாவகம் பாதிக்கப்பட்டு திடீர் அதிஷ்ட வாய்ப்புக்கு வழியில்லாமலும் நீண்ட ஆயுளையும் கேள்விக்குறியாக்கியது. 

2ம் பாவகம் இருவருடைய ஜாதகத்திலும் 100% பதிக்கப்பட்டுள்ளது மிகவும் தவறாகும் எனவே இருவரின் ஜாதகமும் பொருத்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவதே நல்லது

இருவரின் ஜாதகத்திலும் லக்கினம் நல்லநிலையில் இருப்பது ஒருவகையில் நல்லது இல்லை என்றால் ஒரு உயிர் இழப்பு நிகல்ந்திருக்கும்.

இவற்றையெல்லாம் எடுத்துரைத்து என்னசெய்ய வேண்டும் என்பதையும் அந்த தாயாரிடம் எடுத்துச் சொல்லி அனுப்பிவைத்தேன். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

எனக்கு எப்போது குழந்தை பிறக்கும்?

மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. வேலூரை சேர்ந்த ஒரு நண்பர் “அய்யா எனக்கு திருமணம் முடிந்து இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை என்னுடைய அமைப்பை பார்த்து எனக்கு குழந்த பாக்கியம் இருக்குமா என்று கணித்து சொல்லுங்கள்” என்று அவருடைய ஜாதகத்தை அனுப்பினார். அவரின் மனைவியின் ஜாதகம் மிகவும் சிறப்பாகவே இருந்தது எனவே அவருடைய மனைவியிடம் எந்த குறையும் இல்லை என்பது தான் உண்மை. 

சரி நண்பரின் ஜாதகத்தை பார்ப்போம்: 
லக்கினம்: மிதுனம் 
நட்ச்சத்திரம்: உத்திரட்டாதி-4 

முதலில் நண்பரின் பாவகத்தை அலசுவோம். நண்பரின் லக்கினம்,3,5,6,7,11,12 ஆகிய பாவகங்கள் திரத் தன்மையோடு 60% பலம் இழந்தநிலையில் உள்ளது 8ம் பாவகம் 30% பலம் இழந்தநிலையில் உள்ளது. 

2,4 ஆகிய பாவகங்கள் 100% நல்ல நிலையில் உள்ளது. 9,10 ஆகிய பாவகங்கள் 60% திரத் தன்மையில் நல்ல நிலையில் இருப்பது மிகவும் சிறப்பு. 
5,7,12 ஆகிய பாவகங்கள் பலம் இழந்ததன் காரணமாக திருமணத்தை தாமதம் செய்தது. இருப்பினும் 2ம் பாவகம் 100% நல்லநிலையில் இருந்து திருமணம் என்னும் சுப நிகல்வை ஏற்படுத்தி கொடுத்தது.  

நண்பர் கடந்து வந்த திசைகளைப் பார்ப்போம் நண்பர் 2 வயது வரை சனி திசையில் பயனித்துள்ளார். சனி 9ம் வீட்டு பலனை மட்டுமே செய்திருக்கிறது. 9ம் பாவகம் 60% நல்ல நிலையில் உள்ளது. எனவே 2வயது வரை சிறப்பான வளச்சியை கொடுத்திருக்கும். 

புதன் திசை 19 வயது வரை 9ம் பாவகப் பலனை மட்டுமே செய்திருக்கிறது. எனவே புதன் திசையில் நல்ல படிப்பை கொடுத்திருக்கிறது. 

கேது திசை 26 வயது வரை 2,4 ஆகிய பாவகத்தின் பலனை மட்டுமே செய்திருக்கிறது 2,4ம் பாவகம் 100% நல்ல நிலையில் உள்ளது. எனவே கேது திசையும் நல்ல மேற்படிப்பு மற்றும் சுகபோக வாழ்வை அனுபவிக்கும் நிலையை கொடுத்திருக்கும். இந்த திசையில் இறுதி காலகட்டத்தில் திருமணப் பேச்சை குடும்பத்தில் ஏற்படுத்தி இருக்கும். 

சுக்கிர திசையும் 2,4 பாவாகப் பலனை மட்டுமே செய்வதால் சுக்கிர திசையில் திருமணம் நடைபெற்றது. 

கவனிக்க தக்கது சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களின் திசை புத்தி அந்தரம் சூச்சம காலங்களில் ஜாதகருக்கு கடினமாகவே இருக்கும். 

தற்போது சுக்கிர திசை நடக்கிறது 2,4ம் வீட்டுப் பலன் நடந்தாலும் செவ்வாய் புத்தி 3,6,12 மற்றும் 1,5,7,11 ஆகிய பாவகத்தின் பலனை செய்கிறது எனவே செவ்வாய் புத்தி சரியில்லை என்பது  தெரிகிறது. மேலும் 5ம் பாவகம் பலம் இழந்த நிலையில் இருப்பதும் அந்த வீட்டுப் பலனை செவ்வாய் எடுத்து செய்வதும் குழந்தை பாக்கியம் இந்த காலகட்டத்தில் இல்லை என்பது தெரியவருகிறது. செவ்வாய் புத்தி 24.11.2015 வரை நடக்கிறது. 

அடுத்து ராகு புத்தியில் 9ம் வீட்டு பலன் நடக்கவிருக்கிறது 9ம் வீடு 60% நல்ல நிலையில் இருந்து அதன் அதிபதி சூரியனாக இருக்கிறது எனவே ராகு புத்தியில் குழந்தை பிறக்கும் இதுவே உண்மை நிலை. 

நண்பர்களே இவருடைய ஜாதகத்தில் குரு, சந்திரன் நல்ல நிலையில் இருக்கின்றனர் எனவே குழந்த பாக்கியம் உண்டு இருப்பினும் 5 மற்றும் 3ம் பாவகம் பலம் இழந்து 5க்கு சனி ஆதிபதியாகவும் 3க்கு செவ்வாய் அதிபதியாகவும் இருப்பதே குழந்தை தாமதத்திற்கு காரணம் எனவே இந்த ஜாதகத்தின் உண்மைநிலையை புரிந்து கொண்டு மனதை பக்குவப் படுத்திக்கொள்வது நல்லது. 

பரிகாரம்: 
பொதுவாக நான் பரிகாரத்தை பரிந்துரை செய்வது இல்லை. இருப்பினும் நான் பார்த்து வியந்து போன ஒரு தெய்வம் கீழாத்தூர் நாடியம்மன். இந்த அம்மன் சக்கி என்பது ஜாதகத்தின் நிலையையே தலைகீலாக புரட்டிவிடும். எனவே நண்பர் இந்த கோவிலுக்கு சென்று மனதில் உள்ள குறைகளை அம்மன் இடத்தில் சொல்லி விட்டு சென்றால் ஒரு மாத காலத்திற்குள் பலன் கண்கூடாகத் தெரியும். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!