வீடுகட்ட உகந்த காலம் எப்போது?வணக்கம் நண்பர்களே மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்த நண்பர் ஒருவர் “ அய்யா நான் வீடுகட்ட உகந்த காலம் எப்போது ” என்று மின்னஞ்சல் வாயிலாக கேட்டிருந்தார். 

நண்பரின் ஜாதக அமைப்பு: 
 

லக்கினம்: துலாம்.
நட்சத்திரம்: மூலம்-1 
பிறப்பு தசா இருப்பு: கேது 5 வருடம்; 7 மாதம்; 00 நாட்கள். 

கேள்வி: 
வீடுகட்ட உகந்த காலம் எப்போது? 

வணக்கம்: 

ஒவ்வொரு மனிதனுக்கும் கண்டிப்பாக ஒவ்வொரு ஆசைகள் இருக்கும். அதில் அனைவரும் பொதுவாக விரும்பும் ஆசைதான் இந்த வீடுகட்ட வேண்டும் என்ற ஆசை. வண்டி, வாகன சுகபோகம் மற்றும் ஒருவருடைய சந்தோஷம் அதற்கான ஆதாரம் அவருக்கு எங்கிருந்து கிடைக்கிறது இந்த பிறவியில் அவர் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வாரா என்பது போன்ற ஒரு மனிதனின் அனைத்து விதமான சந்தோஷ நிலைகளையும் தனியாக எடுத்துக் காட்டுவது இந்த நான்காம் பாவகம் என்றால் அது மிகையாகாது நண்பர்களே. 

ஒரு சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் கெட்டிருந்தால் உடனே அந்த ஜாதகரின் மனநிலை மற்றும் அவரின் எண்ணங்கள் சரியில்லை என்று முடிவு செய்துவிடக் கூடாது இந்த பிறவியில் அந்த ஜாதகரின் அனைத்து விதமான சந்தோஷ நிலைகளும் பாதிக்கப் பட்டுள்ளன என்று முடிவு செய்வது சிறந்தது.

சரி நண்பரின் ஜாதகத்தை பார்க்கலாம்: 

நண்பரே தங்களின் ஜாதகத்தில் நான்காம் பாவகம் மற்றும் பத்தாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்று உள்ளது. மேலும் நடக்கும் ராகு திசை மற்றும் குரு புத்தியும் இந்த பன்னிரெண்டாம் பாவகத்தின் பலனையே கொடுக்கிறது. 

எனவே தங்களின் பூர்வீகத்தில் இருந்து தொழில் மூலமாக கிடைக்கும் வருமானம் நன்றாக இருக்கும் வீடுகட்ட ஆரம்பித்தால் விரயத்தில் முடியும் என்பது தெரிய வருகிறது. இது தங்களின் பிறப்பு ஜாதகத்தில் இருக்கும் நிலை ஆகும். அந்த நிலை தற்போது கோட்சாரா ரீதியாக எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

கோட்சாரா கிரக நிலைகள்: 

கோட்சார ரீதியாக தங்களின் நான்காம் பாவகம் மற்றும் பத்தாம் பாவகம் நல்ல நிலையில் இருக்கிறது தங்களுக்கு நடக்கும் ராகு திசை மற்றும் குரு புத்தி இரண்டுமே வீடுகட்ட அனுமதிக்கிறார்கள் எனவே நீங்கள் வீடுகட்ட உகந்த காலமே.

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!