பூர்வீகம் கெட்டுவிட்டதா ?

மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. ஒரு நண்பர் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு “ஐயா என்னுடைய ஜாதகத்தில் பூர்வீகம் கெட்டுவிட்டது. எனவே பூர்வீகத்தை விட்டு தொலைவில் இருந்தால் நல்லது என்று நான் பார்த்த ஜோதிடர்கள் அனைவரும் கூறுகின்றனர். எனவே நான் பூர்வீகத்தை விட்டு வெகுதொலைவில் என்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறேன்” வருமானம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை மனதளவில் திருப்தியில்லா நிலைதான், விரயங்கள் அதிகமாகிறது என்ன செய்வது என்று தெரியவில்லை எதாவது என்னுடைய ஜாதகத்தில் இருக்கிறதா சொல்லுங்கள் அய்யா என்று எழுதியிருந்தார். அவருக்கு சரியான வழிகளை எடுத்துரைத்தோம். 

சரி நண்பர்களே அந்த நண்பரின் ஜாதகத்கை பார்க்கலாம்:

லக்கினம்: மீனம் 
நட்சத்திரம் : ஸ்வாதி-3 

லக்கினம்,3,6,7,12 ஆகிய பாவகங்கள் 12-ம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்று கெடுபலனையே செய்கிறது. எனவே இந்த பாவகங்கள் பலவீனம் அடைந்ததின் காரணமாக தாய்தந்தை அரவணைப்பை இழந்தார், மேலும் கல்வி பயில்வதில் நாட்டம் குறைந்து 8-ம் வகுப்பிற்கு மேல் படிக்கவில்லை. தான் எடுக்கும் முயற்ச்சிகளில் தோல்வியை மட்டுமே சந்தித்தார். வீண் வாக்குவாதம் அதன் மூலமாக பலவிதமான பிரச்சனைகள் மற்றும் உடல்நிலை பாதிப்புகளை கொடுத்து சிநேகம் இல்லாமல் செய்தது. இவை அனைத்தும் இணைந்து எதிலும் திருப்தி இல்லா நிலையை ஏற்படுத்தி விட்டது. 

2 மற்றும் 8 ஆகிய பாவகங்கள் 8-ம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்று திடீர் இளப்புகள் மற்றும் தன்னுடைய பேச்சால் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலையை கொடுக்கிறது. தந்தையை விட்டு பிரியும் நிலைக்கு தள்ளியது. தாய்வழி இலாபங்களை இவரே கெடுத்துக்கொள்ளும் சூல்நிலைக்கு தள்ளியது. 

4,5,10 ஆகிய பாவகங்கள் 5-ம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்று 30% பலத்துடன் இருக்கிறது அதன் வாயிலாக நல்ல சிந்திக்கும் ஆற்றலையும், சுகபோக வாழ்வையும் தன்னுடைய மனைவியின் குடும்பத்தாரின் ஆதரவையும் பெற்று தந்துவிடும். குழந்தைகள் மூலமாக நல்ல கௌரவத்தை பெற்றுத்தந்துவிடும். 

11 மற்றும் 9 ஆகிய பாவகங்கள் முறையே 11,9- ம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்று நல்ல பலத்துடன் இருக்கிறது எனவே நல்ல ஆராயும் திறனையும் முன்னோர்களின் முழுமையான ஆசீர்வாதத்தையும் மற்றும் தொழில் மூலமாக நல்ல இலாபத்தையும்  ஏற்படுத்திவிடும். 

இவருடைய ஜாதகத்தில் பூர்வீகத்தை குறிக்கும் 5-ம் பாவகமே பலத்துடன் நிற்கிறது என்பது தான் நண்பர்களே உண்மை. ஆனால் அனைத்து ஜோதிடர்களும் இவரின் பூர்வீகம் கெட்டுவிட்டது என்று சொன்னதின் விளைவு இவர் பூர்வீகத்தைவிட்டு வெகுதொலைவில் இருந்து இலாபம் ஈட்டமுடியாத சூல்நிலையில் தவிக்கிறார். 

ஒருவருடைய சுய ஜாதகத்தில் பூர்வீகம் கெட்டிருந்தால் அந்த நபர் தன்னுடைய ஜீவனத்தை மட்டும் பூர்வீகத்தைவிட்டு தொலைவில் அமைத்துக்கொள்வது சிறப்பு, பூர்வீகத்திலேயே தொழிலை அமைத்துக் கொண்டால் திடீர் இழப்பீடுகளையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்பதே உண்மைநிலை.   

எனவே இந்த நண்பரின் ஜாதகத்தில் பூர்வீகம் நன்றாகவே உள்ளது. எனவே இந்த நண்பர் பூர்வீகத்தில் இருந்து தனக்கு தெரிந்த என்ன தொழில் செய்தாலும் சிறப்பாகவே அமையும் என்பதே உண்மைநிலை.  

நடக்கும் சனி திசையும் 5 மற்றும் 11-ம் வீட்டு பலனையே செய்கிறது. சனி மகாதிசை நல்லதாயே செய்யும். இவர் ராகு, குரு தசையில் படாதபாடு பட்டுள்ளார் அதற்கு காரணம் இரு திசைகளிலும் லக்கினம்,3,6,7,12 ஆகிய பாவகங்கள் 12-ம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்று அவயோக பலனையே செய்திருக்கிறது. 

எனவே ஒருவரின் சுய ஜாதகத்தில் இருக்கும் 12 பாவகங்களின் நிலையை நன்றாக கணிதம் செய்து அவற்றில் எந்த பாவகம் மிகவும் நன்றாக உள்ளதோ அந்த பாவகத்தின் வாயிலாக தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே சிறப்பு. 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

வெளிநாடு செல்ல ஜாதகம் எப்படி இருக்க வேண்டும்?

மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே. இன்று ஒரு முக்கியமான விஷயத்தை ஜோதிட ரீதியாக நாம் ஆராயப்போகிறோம். இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்கவைத்து நல்ல வேலை தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கும் வரை அவர்கள் மிகவும் மனவேதனைக்கு ஆளாகிறார்கள். 

இதில் மிக முக்கியமாக ஒருசில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி விட்டால் பிள்ளைகளின் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்று நினைத்து பணத்தை செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். 

இதில் பரிதாபம் என்னவென்றால் வெளிநாடு சென்று அங்கு அவர்களின் பிள்ளைகள் படும்பாடு தான் மிகவும் பரிதாப நிலை. ஒருசில இளஞர்கள் ஒரு மாதம் இரண்டு மாத கால கட்டத்திலேயே திரும்பி விடுகின்றனர். அதன் விளைவாக பெற்றோர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகின்றனர். இந்த வகையான பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் வெளிநாடு செல்ல நான்கு லட்சம் வரை கடன் வாங்கி எப்படியும் வெளிநாடு அனுப்பிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதே பணத்தை வைத்து சொந்தமாக ஒரு தொழில் தொடங்க தங்கள் பிள்ளைகளை தூண்டுவது இல்லை என்பது தான் எதார்த்த உண்மையாக இருக்கிறது. 

சரி நண்பர்களே நம்முடைய கட்டுரைக்குள் செல்வோம். ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வெளிநாடு சென்று வரலாம். ஆனால் வேலைகிடைத்து ஓராண்டு ஈராண்டு இருந்து வரலாமா? மற்றும் ஒருவரின் ஜீவனம் வெளிநாட்டில் அமையுமா? என்பது தான் இங்கு மிக முக்கியம். இந்த பதிவில் நாம் ஒவ்வொரு லக்கின வாரியாக எந்தெந்த பாவகம் நன்றாக இருந்தால் ஒருவர் வெளிநாடு சென்று ஜீவனம் ஈட்ட முடியும் என்று பார்க்கப் போகிறோம். 

முதலில் மேஷம் லக்கினம்:
மேஷ லக்கின காரர்களுக்கு லக்கினத்திற்கு 7, 9 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக 9 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

ரிஷபம் லக்கினம்:
ரிஷப லக்கின காரர்களுக்கு லக்கினத்திற்கு 8, 9, 11 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக 8 மற்றும் 9-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

மிதுன லக்கினம்:
மிதுன லக்கின காரர்களுக்கு லக்கினத்திற்கு 7, 9, 10 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக 7 மற்றும் 9-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

கடக லக்கினம்:
கடக லக்கின காரர்களுக்கு லக்கினத்திற்கு 6, 9 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக 6 மற்றும் 9-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

சிம்ம லக்கினம்:
சிம்ம லக்கின காரர்களுக்கு லக்கினத்திற்கு 5, 8, 9 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக 5 மற்றும் 9-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

கன்னியா லக்கினம்:
கன்னி லக்கின காரர்களுக்கு லக்கினத்திற்கு 4, 7, 9 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக 4 மற்றும் 9-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும். 

துலாம் லக்கினம்:
துலாம் லக்கின காரர்களுக்கு லக்கினத்திற்கு 3, 6, 9 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக 3 மற்றும் 9-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும். 

விருச்சிக லக்கினம்: 
விருச்சிக லக்கின காரர்களுக்கு லக்கினத்திற்கு 2, 5, 9 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக 2 மற்றும் 9-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

தனுஷ் லக்கினம்:
தனுஷ் லக்கின காரர்களுக்கு லக்கினம், 4, 9 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக லக்கினம் மற்றும் 9-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும். 

மகரம் லக்கினம்:
மகர லக்கின காரர்களுக்கு லக்கினத்திற்கு 3, 9 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக 9 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும். 

கும்பம் லக்கினம்:
கும்ப லக்கின காரர்களுக்கு லக்கினத்திற்கு 2, 9, 11 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக 11 மற்றும் 9-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

மீனம் லக்கினம்:
மீன லக்கின காரர்களுக்கு லக்கினத்திற்கு 1, 9, 10 மற்றும் 12-ம் பாவகங்கள் நன்றாக இருந்தால் அவர்கள் வெளிநாட்டிலேயே ஜீவனம் தேடி தங்களின் வாழ்நாளை வெளிநாட்டிலேயே செலுமை படுத்திக் கொள்ள முடியும். மிக முக்கியமாக 10 மற்றும் 9-ம் பாவகங்கள் நன்றாக இருக்க வேண்டும்.


முக்கிய குறிப்பு:
ஒவ்வொரு லக்கினத்திற்கும் தனுஷ் மற்றும் மீன ராசிகள் என்ன பாவகமாக வருகிறதோ அந்த பாவகங்கள் பலம் பெறவேண்டும் மேலும் ஒவ்வொரு லக்கினத்திற்கும் 10 மற்றும் 11-ம் பாவகங்கள் பாதக ஸ்த்தானத்துடன் சம்மந்தம் பெறாமல் நல்ல நிலையில் இருக்குமானால் அபரிவிதமான லாபத்தை கொடுத்துவிடும் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

எனவே உங்களுடைய ஜாதகத்தில் மேற்குறிப்பிட்ட பாவகங்கள் நன்றாக உள்ளதா? என்பதை தெரிந்துகொள்ள எங்களை தொடர்பு கொள்ளலாம்.
மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளும் நண்பர்கள் தங்களின் பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த இடம் ( பிரசவமான மருத்துவமனை இருக்கும் இடம் ) ஆகியவற்றை தெளிவாக அனுப்பவும்.  

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

வீடுகட்ட உகந்த காலம் எப்போது?வணக்கம் நண்பர்களே மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டை சேர்ந்த நண்பர் ஒருவர் “ அய்யா நான் வீடுகட்ட உகந்த காலம் எப்போது ” என்று மின்னஞ்சல் வாயிலாக கேட்டிருந்தார். 

நண்பரின் ஜாதக அமைப்பு: 
 

லக்கினம்: துலாம்.
நட்சத்திரம்: மூலம்-1 
பிறப்பு தசா இருப்பு: கேது 5 வருடம்; 7 மாதம்; 00 நாட்கள். 

கேள்வி: 
வீடுகட்ட உகந்த காலம் எப்போது? 

வணக்கம்: 

ஒவ்வொரு மனிதனுக்கும் கண்டிப்பாக ஒவ்வொரு ஆசைகள் இருக்கும். அதில் அனைவரும் பொதுவாக விரும்பும் ஆசைதான் இந்த வீடுகட்ட வேண்டும் என்ற ஆசை. வண்டி, வாகன சுகபோகம் மற்றும் ஒருவருடைய சந்தோஷம் அதற்கான ஆதாரம் அவருக்கு எங்கிருந்து கிடைக்கிறது இந்த பிறவியில் அவர் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வாரா என்பது போன்ற ஒரு மனிதனின் அனைத்து விதமான சந்தோஷ நிலைகளையும் தனியாக எடுத்துக் காட்டுவது இந்த நான்காம் பாவகம் என்றால் அது மிகையாகாது நண்பர்களே. 

ஒரு சுய ஜாதகத்தில் நான்காம் பாவகம் கெட்டிருந்தால் உடனே அந்த ஜாதகரின் மனநிலை மற்றும் அவரின் எண்ணங்கள் சரியில்லை என்று முடிவு செய்துவிடக் கூடாது இந்த பிறவியில் அந்த ஜாதகரின் அனைத்து விதமான சந்தோஷ நிலைகளும் பாதிக்கப் பட்டுள்ளன என்று முடிவு செய்வது சிறந்தது.

சரி நண்பரின் ஜாதகத்தை பார்க்கலாம்: 

நண்பரே தங்களின் ஜாதகத்தில் நான்காம் பாவகம் மற்றும் பத்தாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்று உள்ளது. மேலும் நடக்கும் ராகு திசை மற்றும் குரு புத்தியும் இந்த பன்னிரெண்டாம் பாவகத்தின் பலனையே கொடுக்கிறது. 

எனவே தங்களின் பூர்வீகத்தில் இருந்து தொழில் மூலமாக கிடைக்கும் வருமானம் நன்றாக இருக்கும் வீடுகட்ட ஆரம்பித்தால் விரயத்தில் முடியும் என்பது தெரிய வருகிறது. இது தங்களின் பிறப்பு ஜாதகத்தில் இருக்கும் நிலை ஆகும். அந்த நிலை தற்போது கோட்சாரா ரீதியாக எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

கோட்சாரா கிரக நிலைகள்: 

கோட்சார ரீதியாக தங்களின் நான்காம் பாவகம் மற்றும் பத்தாம் பாவகம் நல்ல நிலையில் இருக்கிறது தங்களுக்கு நடக்கும் ராகு திசை மற்றும் குரு புத்தி இரண்டுமே வீடுகட்ட அனுமதிக்கிறார்கள் எனவே நீங்கள் வீடுகட்ட உகந்த காலமே.

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!