இரட்டை குழந்தை ஜாதகம் ஒரு பார்வை.அன்பிற்கு இனிய வாசகர்களே உங்களை மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்று நாம் பார்க்கவிருக்கும் ஜோதிட அமைப்பை பற்றி ஒரு சில வார்த்தைகள். இந்த அமைப்பு ஒரு இரட்டை குழந்தை அமைப்பு ஆகும். இந்த குழந்தைகளின் தாயார் எம்மிடம் கூறியது. (தாயாரின் அனுமதியுடனே இந்த பதிவை அஸ்ட்ரோ ராஜ் வெளியீடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது நண்பார்களே)

அய்யா எனக்கு 19/05/---- அன்று இரட்டை குழந்தை பிறந்தது மிகவும் மகிழ்ச்சிக்குள்ளானேன் இன்று அவ்விரு குழந்தைகளும் 10-ம் வகுப்பு படிக்கிறார்கள். இருப்பினும் முதல் குழந்தையின் உடல் அமைப்பு வளர்ச்சி அடையாமலும் - அதாவது ஒல்லியாக இருக்கிறது முக்கியமாக இன்னும் பருவமடையவில்லை.

இரண்டாவது குழந்தை சிறப்பான வளர்ச்சியையும் 2014-ளில் மருவமடைந்தும் விட்டது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் முதல் குழந்தையை நினைத்து மிகவும் வருத்தமாக உள்ளது. அதுவரை ஜோதிடம் பார்க்காத நான் அதற்கு பிறகு என்னால் முடிந்த வரை நானும் பல ஜோதிடர்களை பார்த்து விட்டேன்.

அனைத்து ஜோதிடர்களும் சொல்லும் பதில் “அம்மா தங்களின் இரண்டு குழந்தைகளும் ஒரே நாளில் பிறந்த குழந்தைகள் தான் எனவே இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க முடியும் நீங்கள் முதல் குழந்தை பருவமடையவில்லை என்கிறீர்கள் அதற்கு காரணம் கண்டிப்பாக செய்வினையும், உங்கள் குடும்பத்திற்கு விலுந்த கண் திர்ஷ்டியுமே ஆகும்” இதுவே ஆகும். 

மேலும் பல ஜோதிடர்கள் பலவிதமான பரிகாரங்களையும் சொல்லி பணம் பறிக்கும் செயல்களில் எல்லாம் ஈடுபட்டு அந்த குழந்தைகளின் தாயாரை மன வேதனைக்கு உள்ளாக்கி அத்துடம் ஜோதிடம் என்ற மாபெறும் இயற்க்கையின் கணிதத்தை கொச்சைபடுத்தி விட்டனர். 

இந்த சூழ்நிலையில்  அஸ்ட்ரோ ராஜ் அந்த குழந்தைகளின் ஜாதகத்தை பார்த்து தெளிவான விளக்கத்தை அந்த குழந்தைகளின் தாயாரிடம் எடுத்துரைத்தது. தாயாரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை இருப்பினும் அவர்களிடம் அஸ்ட்ரோ ராஜ் பணம் எதுவும் வாங்கவில்லை.  இதை குறிப்பிடக் காரணம் மனிதப் பிறவி என்பதே நம்மை போன்ற மனிதர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து அதில் கிடைக்கும் மகிழ்ச்சியில் சந்தோஷம் அடைவதே என்பதை ஒரு மனித நேயத்தோடு பார்பதன் காரணமே ஆகும்.

அஸ்ட்ரோ ராஜ் ஒன்றை சொல்ல கடமைபடுகிறது அதாவது பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரின் குணாதிசயங்கள் முற்றிலும் வேறுபட்டதே. உதாரணமாக ஒரே நாளில் பல குழந்தைகள் பிறந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான குணநலங்களை கொண்டு செயல்படுவது இல்லை. எனவே முற்றிலும் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் பல வேறுபாடுகள் இருந்தே ஆகும். 

சரி நண்பர்களே இனி அந்த குழந்தைகளின் அமைப்பை பார்ப்போம் வாருங்கள்.

கேள்வி :
1. முதல் குழந்தை பருவமடையாமல் இருப்பதற்கு என்ன காரணம்?
2. இந்த குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? 

முதல் குழந்தை: 


லக்கினம் : துலாம் 
நட்சத்திரம் : கேட்டை-1 
பிறந்த நேரம் : 4.30 PM 

முதல் குழந்தை பருவமடையாமல் இருப்பதற்கு என்ன காரணம்?

முதலில் இந்த குழந்தையின் உயிர்-உடல்நிலை மற்றும் சிந்திக்கும் தன்மை இவற்றை பற்றி தெரிந்து கொள்ள லக்கினத்தை ஆராய்வோம் நண்பர்களே. காரணம் லக்கினம் தான் ஆணிவேர் இதை வைத்தே அனைத்து பாவகங்களும் இயங்குகிறது. லக்கினம் நற்றாக இருந்து மற்ற பாவகங்கள் கெட்டிருந்தாலும் லக்கினம் அந்த ஜாதகரை சரியான முறையில் வழிநடத்திவிடும். 

இந்த முதல் குழந்தையின் லக்கினம்-1,3,7,11 ஆகியவைகள் லக்கினத்திற்கு பாதக ஸ்த்தானதுடன் சம்மந்தம் பெற்று ஸ்த்திரத்தன்மையோடு லக்கினத்தை முழுமையாக கெடுத்துவிட்டது. இதை அந்த குழந்தையின் தாயிடம் புரியும் படியாக எடுத்துச் சொல்லி எப்படி அந்த குழந்தையை வழிநடத்த வேண்டும் என்பதையும் அஸ்ட்ரோ ராஜ் எடுத்துரைத்தது. 

அடுத்தபடியாக பருவமடையாமைக்கு என்ன காரணம்? இன்று பல குழந்தைகள் மிகவும் குறைந்த வயதிலேயே பருவமடைவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம் அதற்கு என்ன காரணம். உணவு முறைகள் அதன் மூலமாக அபரிவிதமான உடல் வளர்ச்சி இதுவே காரணமாக அமைகிறது. 

பெண்கள் குழந்தை பெரும் நிலை மற்றும் குழதேவதையின் அருள் கிடைக்கிறதா என்பதை காட்டும் பாவகம் ஐந்தாம் பாவகம் ஆகும். அதே தான் பெண்கள் பருவமடையா தன்மையையும் தெளிவாக விளக்கி விடும். 

இந்த முதல் குழந்தையின் ஐந்தாம் பாவகம் 5,9 ஆகியவை லக்கினத்திற்கு எட்டாம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்று ஸ்த்திரத்தன்மையோடு உடலை பதிப்பிற்குள்ளாக்கியது தெரிய வந்தது. மேலும் நடக்கும் புதன் திசையும் எட்டாம் பாவகத்தின் பலனையை முழுமையாக செய்கிறது. எனவே பருவமைடையா நிலை உருவானது என்பதை பக்குவமாக குழந்தையின் தாயாரிடம் புரியும்படி சொல்லி அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அஸ்ட்ரோ ராஜ் எடுத்துரைத்தது.  

இரண்டாவது குழந்தை :


லக்கினம் : துலாம் 
நட்சத்திரம் : கேட்டை-1 
பிறந்த நேரம் : 4.39 PM 

இந்த இரண்டாவது குழந்தையின் ஐந்தாம் பாவகம் 5,9 ஆகியவை லக்கினத்திற்கு ஒன்பதாம் பாவகத்துடம் சம்மந்தம் பெற்று வலுவான நிலையில் இருக்கிறது மற்றும் நடக்கும் புதன் திசையும் ஒன்பதாம் பாவகத்தின் பலனை செய்ய வில்லை. எனவே இந்த குழந்தை பருவமடையும் நிலையில் எந்த சிக்கலும் இல்லை என்பதை சரியாக புரியும்படி அஸ்ட்ரோ ராஜ் விளக்கியது. 

மேலும் இரண்டு குழந்தைகளின் லக்கினமும் பாதக ஸ்த்தானதுடன் சம்மந்தம் பெற்று லக்கினத்தை கெடுத்துவிட்டதன் விளைவு இரண்டு குழந்தைகளும் தாய்தந்தையின் அரவணைப்பில் இல்லாமல் மாமன் வீடில் வளரும் நிலைக்கு தள்ளியது. 

வெறும் ஒன்பது நிமிடம் தான் வித்தியாசம் அதன் விளைவு எப்படி இருக்கிறது என்பதை இரண்டு குழந்தைகளின் ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொண்டோம். ஆனால் பாரம்பரிய ஜோதிடர்கள் சரியாக கணிதம் செய்யாமல் பலபேர்களின் வாழ்க்கையையும் ஜோதிடத்தின் உண்மை நிலையையும் கெடுத்துக் கொண்டு வருகின்றனர். 

இந்த குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? 

ஒருவன் எவ்வளவு தவறுகள் செய்தாலும் அவனின் அடுத்த கேள்வி என்ன பரிகாரம் என்பது தான். ஆனால் உண்மை நிலை பரிகாரம் என்பது மனிதனின் மனதை திருப்தி படுத்தும் செயல் மட்டுமே என்பதை நன்றாக உணர்ந்தால் புரியும். ஜோதிடத்தில் ஆஸ்ட்ரோ ராஜ் எடுத்துரைக்கும் பரிகாரம் என்பது முற்றிலும் மாறுபட்டது ஆகும். அந்த பரிகாரத்தை அந்த குழந்தையின் தாயாரிடம் எடுத்துரைத்தோம்.

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!