திருமணம் எப்போது? செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா?

வணக்கம் நண்பர்களே மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு நண்பர் அவருடைய மகளின் ஜாதகத்தை அனுப்பி அவர் கேட்ட கேள்விகள் இதுவே..... 

வணக்கம் அய்யா தங்களின் தளம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள். என்னுடைய மகளின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதாகவும் அதனால் செவ்வாய் தோஷம் உள்ள பையனுக்கே திருமணம் செய்ய வேண்டும் என்று நான் செல்லும் இடங்களில் எல்லாம் அனைத்து ஜோதிடர்களும் சொல்லுகிறார்கள் அது உண்மையா? என்னுடைய மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? 

சரி நண்பர்களே இந்த நண்பருடைய மகளின் ஜாதகத்தை பார்போம்:
லக்கினம் : ரிஷபம்.
நட்சத்திரம் : ரோகிணி 1-ம் பாதம்.
வயது : 23 வருடம் 8 மாதம்.  
தசா இருப்பு : சந்திரா தசா 08 வருடம் 05 மாதம் 06 நாள்.
ஜாதகி கடந்து வந்த தசைகள் : சந்திரன், செவ்வாய் தசைகள். 
நடப்பு தசா, புத்தி : ராகு – புதன்.

கேள்விகள்: 
1. செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா? 
2. திருமணத்திற்கு உகந்த காலம் எப்போது? 

முதல் கேள்வி செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா? 

ஒருவருக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றால் ஜாதகரின் சுய லக்கினத்திற்கு இரண்டாம் ஏழாம் பாவகமும் இறையருளின் கணக்கிற்கு இரண்டாம் ஏழாம் பாவகமும் நன்றாக இருந்தால் சரியான வயதிலேயே அந்த பாவகங்கள் திருமணத்தை நடத்திவிடும். 

இந்த ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் அனைவரும் இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் உடனே செவ்வாய் தோஷம் இந்த ஜாதகத்தில் இருக்கிறது என்று முடிவு செய்து விடுகின்றனர். ஆனால் அந்த இடத்தில் கேது இருப்பதைப் பார்க்க மறந்து விடுகின்றனர். இந்த இரண்டாம் பாவகத்திற்கு முழுமையான பலனை கேதுவே செய்கிறார். எனவே இங்கு செவ்வாய்க்கோ செவ்வாய் தோசத்திற்கோ ஒரு சம்மந்தமும் இல்லை. எனவே இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இல்லை என்பதுதான் உண்மை. 

இந்த இரண்டாம் பாவகத்திற்கு கேது நன்மை செய்கிறாரா இல்லை கெடுதல் செய்கிறாரா? என்பதையே நாம் பார்க்க வேண்டும். இரண்டாம் பாவகத்தின் அதிபர் புதன் இவர் சூரியனுடன் சேராமல் 20 பகைக்கு மேல் இருந்து கேந்திர பலம் பெற்றுவிட்டார் மேலும் இரண்டாம் பாவகம் 12-ம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்றதன் விளைவு கேது இரண்டாம் பாவகத்திற்கு அவயோக பலனையே செய்கிறார்.

அடுத்து இறையருளின் கணக்கிற்கு இரண்டாம் பாவகம் லக்கினத்தோடு சம்மந்தம் பெற்று 100% நன்றாக உள்ளது. லக்கினதிற்கு ஏழாம் பாவகம் ஏழாம் பாவகத்தின் சம்மந்தம் பெற்று அதுவும் 100% நன்றாக உள்ளது. அடுத்ததாக இறையருளின் கணக்கிற்கு ஏழாம் பாவகம் 12-ம் பாவகத்தோடு சம்மந்தம் பெற்று அவயோகப் பலனையே கொடுக்கிறது. 

சுய லக்கினத்திற்கு இரண்டாம் பாவகமும் இறையருளின் கணக்கிற்கு ஏழாம் பாவகமும் கெட்டுவிட்டது என்பது தெரிய வருகிறது. இதன் காரணமாக திருமணத்தை தாமதம் செய்யுமே தவிர தடை செய்யாது என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் தோஷம் இந்த ஜாதகத்தில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

இரண்டாவது கேள்வி திருமணத்திற்கு உகந்த காலம் எப்போது? 

தற்போது ஜாதகி ராகு திசையில் பயணம் செய்கிறார் இந்த ராகு 2,6,8-ம் பாவகங்கள் 12-ம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்று திருமணத்திற்கு தாமதத்தை கொடுக்கிறது. ஆனால் புதன் புத்தி 10-ம் பாவகத்தின் பலனை மட்டுமே செய்கிறது. இந்த புதன் புத்தி 2017 வரை நடக்கிறது எனவே புதன் புத்தியில் திருமணம் நடந்துவிடும் என்பது உறுதியாகிறது. 

தற்போது நடக்கும் புதன் மற்றும் கேதுவின் அந்தரம் திருமணத்திற்கு சாதகமாகவே உள்ளது மேலும் 5-ம் பாவகம் 11-ம் பாவகத்தோடு சம்மந்தம் பெற்று அது கேதுவின் அந்தர காலத்தில் நடக்கவிருக்கிறது இதன் விளைவாக குழதேவதையின் பரிபூரண ஆசீர்வாதத்துடன் 2015 ஏப்ரல் மாதம் முடிவிற்குள் நல்ல வரன் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது கொட்சர கிரக நிலைகளும் நன்றாக உள்ளது எனவே கவலை வேண்டாம். திருமணம் உறுதி எனவே இந்த ஜாதகியின் பெற்றோர் கவலை கொள்ள தேவையே இல்லை. 

இந்த பெண்ணின் திருமணத் தாமதத்திற்கு முக்கிய காரணமாக சனி கிரகத்தின் கதிரிக்கமே காரணமாக இருக்கிறது. இதன் விளைவாக இந்த ஜாதகிக்கு குடும்பதில் மந்த நிலை மற்றும் சிறிது சுயநலத் தன்மையையும் ஏற்படுத்தி விடுகிறார். மேலும் உடல் நிலையில் சரத்தன்மையோடு பாதிக்கிறார் அதன் விளைவாக திடீர் விரயமும் ஏற்பட காரணமாகிறார் எனவே ஜாதகி உடல் நலனிலும் உணவு விசயங்களிலும் அக்கறை செலுத்துவது நல்லது முக்கியமாக 6-ம் பாவகம் இறையருளின் கணக்கிற்கு நண்பர்களை குறிப்பதால் இந்த ஜாதகியின் நண்பர்களே இவரின் உடல்நலகேட்டிற்கு காரணமாக விளங்குவார்கள். மற்றபடி இந்த ஜாதகம் மிக சிறப்பு வாய்ந்த ஜாதகமாகவே அஸ்ட்ரோ ராஜ் கருதுகிறது. 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!