மாற்றம் தரும் சிவ மந்திரம்


ஓம் நம சிவாய


'நமசிவாய ஊம் நமசிவாய' என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.

'சவ்வும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.

'ஊங்கிறியும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை உச்சரித்தால் மோட்சம் கிடைக்கும்.

'அலங்கே நமசிவாய நமோ'என்ற மந்திரத்தை உச்சரித்தால் புகழ் மற்றும் பெருமை உண்டாகும்.

'வநம சிவாய'என்ற மந்திரத்தை உச்சரித்தால் தேகசித்தி உண்டாகும்.

'ஓம் நமசிவாய'என்ற மந்திரத்தை உச்சரித்தால் காலனை வெல்லலாம்.

'லங்கிரியும் நமசிவாய'என்ற மந்திரத்தை உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்.

'லங்கிரியும் நமசிவாய' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்.

'ஓங்கிறியும் ஓம் நமசிவாய' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் வாணிபங்கள் நன்றாக நடக்கும்.

'லூங் ஓங் நமசிவாய' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.

'ஓங் அங்கிஷ சிவாய நமா' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் சஞ்சாரம் செய்யலாம். 

'அங் உங் வங் சிவாய நம' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

'ஹம் ஹம் சிவாய நமா' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும்.

'ஓம் நமசிவாய நமா' என்று  இந்த மந்திரத்தை உச்சரித்தால் துஷ்ட தேவதைகள் அழியும்.

'யம் ஓம் சிவாய' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் விஷங்கள் உடலில் பரவாது.

'ஓம் அங்கிஷ சிவாய நமா' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் மனிதனுக்குரிய முக்குணங்களையும் வெல்லலாம்.

'மங் மங் மங்' என்று  இந்த மந்திரத்தை உச்சரித்தால் பசியை துறக்கலாம். உணவை வெறுக்கலாம்.

'வங் வங் சிங் சிவாய நம' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் உலகின் எப்பாகத்திற்கும் செல்லும் வழியை அறியலாம்.

'சியும் சியும் ணங் சிவாய நம' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் எல்லாச் சாதனைகளையும் அடையலாம். 

'ஓங் அங்கிஷ ஊங் சிவாய நம' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் நினைத்த இடத்தில் மனத்தினை விரைவாகச் செலுத்தலாம். 

'சிவாய ஓம்' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.

'ஸ்ரீ யுங் உங் சிவாய நம' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் தியானத்தின் பயனை அடையலாம்.

'நங் வங் யங் சிங்' என்று இந்த மந்திரத்தை உச்சரித்தால் போட்ட விதை விரைவில் முளைத்து நல்ல கனியைக் கொடுக்கும்.

இந்த மந்திரங்கள் அனைத்தும் சி.எஸ்.முருகேசன் அவர்கள் எழுதிய சித்தர்களின் மந்திரக்கலை என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

என்னுடைய எதிர்காலம் எப்படி மற்றும் எனக்கு திருமணம் எப்போது?

ஓம் சரவண பவ
மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே. இந்தப் பதிவில் சென்னையை சேர்ந்த ஒரு நண்பரின் ஜாதகத்தை பார்க்கவிருக்கிறோம். இந்த நண்பரின் கேள்விகள் பின்வருமாறு: 
  • என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?
  • எனக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போய்கிறது என்ன காரணம்?
  • எனக்கு சரியாக எத்தனை வயதில் திருமணம் நடைபெறும்? 
இவைகளே இந்த நண்பரின் கேள்விகள் ஆகும். சரி இனி இந்த நண்பரின் ஜாதகத்தை வைத்துக்கொண்டு மேற்கண்ட வினாக்களுக்கு விடையை காண்போம் வாருங்கள். 

லக்கினம்: மிதுனம்
ராசி: கன்னி 
நட்ச்சத்திரம்: உத்திரம் 4-ம் பாதம் 


முதலில் இந்த நண்பரின் 12 பாவகத்தையும் ஆராய வேண்டும். நண்பரின் ஜாதகத்தில் 1,2,5,7,10,11 ஆகிய பாவகங்கள் நல்லநிலையில் இருக்கிறது. 

எனவே ஜாதகர் நல்ல குணம், அறிவுபூர்வமான சிந்தனை ஆற்றலும், விவேகமான செயல்பாடும், நல்ல ஆண்மைத் திறனும், நல்ல இனிமையான பேச்சுத் திறனும், நல்ல நிர்வாகத் திறனும், இலாபகரமான வருமானம் ஈட்டும் தன்மையும், மற்றவர்களிடையே பேசி காரியத்தை கட்ச்சிதமாக முடிக்கும் குணமும், நுண்ணிய சிந்தனைத் திறனும், அனைவரையும் கவர்ந்திளுக்கும் பேச்சுத் திறனும், நண்பர்களின் ஆதரவும், பொதுமக்களின் ஆதரவும், சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதையும், நண்பர்களின் ஆதரவும், வீரியமான செயல்திறனும் இயற்க்கையாக பெற்றவர் ஆவார். 

நடக்கும் தசா, புத்தி, அ.ந்தர, சூட்ச்சமங்கள் மேற்குறிப்பிட்ட பாவக்கத்தின் பலனை செய்யும் போது நல்ல யோகமான பலனை அனுபவிப்பார். 


3,4,6,8,9,12 ஆகிய பாவகங்கள் நண்பரின் ஜாதகத்தில் பலம் இழந்து காணப்படுவது நண்பர் இந்த பாவகங்களின் வாயிலாக அவயோகப் பலனையே சந்திக்க வேண்டியனிலை வரும் என்பது தெரிகிறது. 

எனவே நண்பரின் தகவல் பரிமாற்றம், எழுத்து ஆற்றல், எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, சொந்த வீடு மண்,மனை வாங்கும் யோகம் அற்ற நிலை, மனக்குழப்பம், தயக்க நிலை, சலித் தொந்தரவுகள், செரிமானக் கோளாறுகள், தீடீரென தொழில் இழப்பு, பணிபுரியும்  இடத்தில் கருத்து வேறுபாடுகள் சக ஊழியர்களிடையே ஏற்படும் நிலை, தன்னிறைவு அற்ற நிலை, பெரியோகளிடம் அவப் பெயரை சம்பாதிதல், வீண் கற்பனைத்திறன், வீணான செலவீனங்கள், பணவிரையம், மனவிரையம், அதிகமாக உணவில் நாட்டம், மறைமுக எதிரிகள், எதிரிகளின் தொந்தரவை சமாளிக்க முடியாத நிலை இவைகளையும் இயற்க்கையாக பெற்றவர் ஆவார். 

நடக்கும் தசா, புத்தி, அந்தர, சூட்ச்சமங்கள் மேற்குறிப்பிட்ட பாவக்கத்தின் பலனை செய்யும் போது அவயோக பலனை அனுபவிப்பார்.

இனி இவர் கடந்து வந்த, தற்போது கடந்து கொண்டிருக்கிற, இனிமேல் கடக்கபோகிற திசைகளை பார்போம்.


நண்பர் சூரிய திசையில் பிறந்திருக்கிறார் இந்த சூரிய திசை நண்பர் பிறந்து நான்கு மாதம் வரை நடைபெற்று இருக்கிறது. மேலும் இந்த சூரிய திசை 3,6,12 ஆகிய பாவகத்தின் பாலை செய்து இருக்கிறது. எனவே நண்பர் பிறந்து நான்கு மாதம் வரை சுறுசுறுப்பு குறைவாக இருந்திருப்பார் மேலும் மருத்துவ செலவுகளும் அதிகமாக விரையம் ஆகி இருக்கும் என்பது தெரிகிறது. 

நண்பரின் பத்து வயது முதல் சந்திர திசை நடந்து இருக்கிறது. இந்த திசை 1,5,7,11 ஆகிய பாவகத்தின் பலனை செய்து நல்ல படிப்பு, நல்ல நண்பர்கள் சேர்க்கை, நல்ல சமயோசித புத்தி என பத்து வயது சிறுவனின் துடிதுடிப்பு இவரிடம் காணப்பட்டிருக்கிறது. 

அடுத்து 17 வயது வரை நடந்த செவ்வாய் திசையும் இதே பலனை செவ்வாயின் அதிகாரத் தோரணையில் கொத்து இருக்கிறது. எனவே இந்த திசையில் நண்பர்களை இவர் வழிநடத்தி இருப்பார், நன்றாகப் படித்திருப்பார் என்பதும் தெரிய வருகிறது. 

தற்போது நடக்கும் ராகு திசை 35 வயது வரை நடக்கவிருக்கிறது. இந்த திசை 3,6,12 ஆகிய பலம் இழந்த பாவகத்தின் வாயிலாக தீமையையும், 10-ம் பாவகத்தின் வாயிலாக நல்ல பலனையும் அனுபவிப்பார். 

இந்த ராகு திசை 3,6,12 ஆகிய பாவக வாயிலாக எடுக்கும் அனைத்து விதமான முயற்சிகளுலும் தோல்வி, உடல்நிலை பிரச்சனை முக்கியமாக செரிமானக் கோளாறு, அனைத்திலும் மனம் நிம்மதியை இழத்தல், வெட்டித்தனமான செலவுகள், பணவிரையம் என தீமையையும் 10-ம் பாவகத்தின் வாயிலாக பணிபுரியும் இடத்தில் இருந்து போதிய வருமானமும் பெற்றுக் கொண்டு இந்த ராகு திசையில் நன்மை, தீமை என இரண்டு விதமான பலன்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. 

அடுத்து வரவிருக்கும் குரு திசை 1,5,7,11 ஆகிய பாவகங்கள் வாயிலாக நல்ல யோகமனை பலனை செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருமணம், குழந்தை, குறைந்த உழைப்பு அதிக வருமானம் என சகலவித நன்மைகளையும் குரு திசை வளங்கும். 


திருமண தாமததிற்கு என்ன காரணம்? 
நடக்கும் ராகு திசை களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நடுக்கும் புத்திகளை பார்க்க வேண்டும். 

நண்பரின் குடும்பத்தில் சரியாக 24 வயதில் திருமணப் பேச்சை எடுத்திருக்கிறார்கள் அந்த சமயத்தில் நண்பருக்கு சனி புத்தி நடந்திருக்கிறது. இந்த சனி புத்தி ராகு எந்த வீட்டு பலனை செய்கிறதோ அதே வீட்டின் பலனை சனி புத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சனி புத்தி 25 வயது வரை களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. 

அடுத்து 27 வயது வரை நடந்த புதன் புத்தி 4,8 ஆகிய பாவகத்தின் பலனை செய்து சுக, போக அற்ற நிலையை கொடுத்தது, இந்த காலகட்டத்தில் நண்பர் புத்தி குழம்பி திரிந்து இருக்கிறார். வேலையை திடீரென இழந்தும் இருக்கிறார். இந்த புதன் புத்தியும் களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே திருமணம் கைகூடவில்லை. 

அடுத்து வந்த கேது புத்தியும் அதே நிலையை கொடுத்திருக்கிறது இன்னும் சற்று அதிகமாக பெரியோரிடமும் அவப்பெயரை சம்பாதித்து இருக்கிறார். இந்த கேது புத்தியும் திருமணத்திற்கு தேவையான களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பது தெரிய வருகிறது.

தற்போது நடக்கும் சுக்கிர புத்தியும் அடுத்து நடக்கும் சூரிய புத்தியும் 3,6,12 ஆகிய பாவகத்தின் பலனை மட்டுமே செய்கிறது. எடுக்கும் முயற்சிகளில் தோல்வியையே கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே சுக்கிர மற்றும் சூரிய புத்தியும் திருமணத்திற்கு தேவையான களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பது தெரிய வருகிறது.

32 வயதிற்கு மேல் வருகிற சந்திர புத்தி 1,5,7,11 ஆகிய பாவகத்தின் பலனை செய்யவிருக்கிறது இந்த சந்திர புத்தியில் திருமணத்திற்கு தேவையான களத்திர ஸ்தானதின் பலனும் குலதேவதையை குறிக்கும் 5-ம் பாவகப் பலனும் நடந்து குலதெய்வத்தின் அருளாசியால் தென்கிழக்கு திசையில் இருந்து நல்ல பெண்ணை திருமணம் முடித்து வைக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

நண்பரின் கேள்விக்கான பதிலகள்: 
  • என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?
எதிர்காலம் நன்றாக இருக்கும்.
  • எனக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போய்கிறது என்ன காரணம்?
திருமண தாமதத்திற்கு நடந்த புத்திகளும்     நடக்கும் ராகு திசையும் திருமணத்திற்கு     தேவையான களத்திர ஸ்தானதின் பலனையோ, குடும்ப ஸ்தானதின் பலனையோ செய்யவில்லை என்பதுதான் காரணம்.
  • எனக்கு சரியாக எத்தனை வயதில் திருமணம் நடைபெறும்? 
சந்திர புத்தியில் திருமணம் உறுதி கவலை வேண்டாம்.

முக்கிய குறிப்பு: 
இந்த நண்பரின் ஜாதகத்தில் லக்கினம், களத்திரம், குடும்ப ஸ்தானம் என அனைத்தும் நல்ல நிலையில் இந்தும் சரியான வயதில் திருமணம் நடக்காதத்திற்கு காரணம் நடக்கும் திசையும், புத்திகளுமே ஆகும் நண்பர்களே. எனவே ஒரு ஜாதகத்தில் எத்தனை பாவகம் நன்றாக இருந்தாலும் சரி அந்த நன்மையாக பாவகத்தின் பலனை நடக்கு திசா மற்றும் புத்திகள் ஏற்று செய்தால் மட்டுமே நன்மையை அனுபவிக்க முடியும் இல்லையேல் ஜாதகர் பாடு அதோகெதிதான்.


astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

என்னுடைய மகளுக்கு திருமணம் எப்போது ?

 
ஓம் சரவண பவ வணக்கம் நண்பர்களே மற்றுமொரு பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இன்றைய பதிவில் ஒரு தோழிக்கு திருமணம் ஆகாதது பற்றியும், புத்திர பாவகம் (ஸ்தானம்) பற்றியும் பார்க்கவிருக்கிறோம். 

அந்த தோழியின் அம்மா கேட்ட கேள்விகள். 
1.என்னுடைய மகளுக்கு வரன்கள் வருகின்றன ஆனால் பெண் பார்த்துவிட்டு பிடிக்கிறது என்று சொல்லிவிடு என்னுடைய மகளின் ஜாதகத்தை பார்த்தபின்னர் ஜாதக பொருத்தம் இல்லை என்று சொல்லிவிடு போய்விடுகின்றனர். இது எதனால்?
2.என்னுடைய மகளின் ஜாதகத்தில் என்ன பிரச்சனை உள்ளது என்பதை தெளிவாக விளக்கவும்.
3.என்னுடைய மகளின் புத்திரபாக்கிய நிலை எப்படி உள்ளது? 
4.என்னுடைய மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? 

இதுவே அத்தோழியின் அம்மா கேட்ட கேள்விகள். சரி நண்பர்களே இனி தோழியின் ஜாதகத்தை பார்க்கலாம். 

அதற்க்கு முன்னாள் நம்முடைய கணித விதிகளை நினைவு படுத்திக்கொள்வோம்:

முதல் விதி: 
பிறந்த தேதி-மாதம்-வருடம், பிறந்த நேரம் (மணி-நிமிடம்-வினாடி), பிறந்த இடத்தின் மிகத் துல்லியமான அட்சாம்ஸம், தீர்க்காம்ஸம். இவை சரியாக உள்ளதா என்பதை தெளிவுபடுத்தி கொள்க. 

இரண்டாம் விதி: 
ஜனனம் செய்த ஜாதகரின் பன்னிரெண்டு பாவகத்தையும் துல்லியமாக கணிதம் செய்து எந்தெந்த பாவகம் எத்தனை சதவீதம் பலமாக உள்ளது பலம் இழந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்க.

மூன்றாம் விதி: 
ஒன்பது நவக்கிரகத்தில் எந்த கிரகம் மிகவும் நன்மை செய்யும் அமைப்பில் உள்ளது. என்பதை சரியாக கணிதம் செய்து தெரிந்து கொள்க. 

நான்காம் விதி: 
தற்போது நடக்கும் தசா, புத்தி, அந்தரம், சூச்சமம் என்ன என்பதை தெளிவாக கணிதம் செய்து தெரிந்து கொள்க. 

ஐந்தாம் விதி: 
நடக்கும் தசா, புத்தி, அந்தரம், சூச்சம நாதர்கள் கோட்ச்சாரத்தில் நன்மை செய்கிறார்களா, தீமை செய்கிறார்களா என்பதை தெளிவாக கணிதம் செய்து தெரிந்து கொண்டு இறையருளின் துணையோடு தெளிவாக பலன் சொல்க. 
இந்த ஐந்து விதிகளையும் பயன்படுத்தி ஒரு ஜாதகருக்கு பலன் சொல்லும் போது மிகவும் துல்லியமாக இறையருளின் கருணையோடு நூறு சதவீதம் சரியான பலனை சொல்லிட முடியும். 

தோழியின் ஜாதக விவரம்: 
லக்கினம்: துலாம் 
இராசி: கடகம் 
நட்ச்சத்திரம்: ஆயில்யம் 2ம் பாதம் 
தசா இருப்பு: புதன் தசா 08 வருடம் 08 மாதம் 20 நாள். பாவக விவரம்: 
முதல் பாவகம் (லக்கினம்): 
லக்கினம் 30% பலமுடன் இருக்கிறது. எனவே ஜாதகி நல்ல மனநலம் கொண்டவர் நல்ல பெண் என்பது தெரியவருகிறது. 

இரண்டாம் பாவகம்: 
இரண்டாம் பாவகம் 30% பலமுடன் இருக்கிறது. எனவே நல்ல பேச்சு திறன் கொண்ட பெண் என்பது தெரியவருகிறது. 

மூன்றாம் பாவகம்: 
மூன்றாம் பாவகம் 30% பலமுடன் இருக்கிறது. எனவே நல்ல மனம் உடையவர் என்பதும் மனதில் தோன்றும் எண்ணங்களை சரியாக பிரதிபலிப்பவர் என்பதும் தெரிய வருகிறது. 

நான்காம் பாவகம்: 
நான்காம் பாவகம் 60% பலம் இழந்த நிலையில் இருக்கிறது. எனவே உடல் பிரச்சனைகளை கொடுக்கும் அதாவது மார்பு, நுரையீரல் தசைகள் போன்றவற்றில் மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். மேலும் பொறுமையின்மையை ஏற்படுத்தும். 

ஐந்தாம் பாவகம்: 
ஐந்தாம் பாவகம் 160% பலம் இழந்த நிலையில் இருக்கிறது. எனவே தோழியின் குழதெய்வ வழிபாடு பாதிக்கப்பட்டுள்ளது. 

ஆறாம் பாவகம்: 
ஆறாம் பாவகம் 30% பலமுடன் இருக்கிறது. எனவே சண்டை சச்சரவுகளில் இடம்பெற மாட்டார். நேர்மையாக இருப்பார் என்பது தெரிய வருகிறது. 

ஏழாம் பாவகம்: 
ஏழாம் பாவகம் 100% பலமுடன் இருக்கிறது. எனவே நல்ல நண்பர்களின் பாலக்க வழக்கத்தை பெற்று இருப்பார் என்பது தெரிய வருகிறது. 

எட்டாம் பாவகம்: 
எட்டாம் பாவகம் 30% பலமுடன் இருக்கிறது. எனவே தோழி எடுக்கும் முடிவில் திடீர் யோகம் உண்டு. 

ஒன்பதாம் பாவகம்: 
ஒன்பதாம் பாவகம் 60% பலமுடன் இருக்கிறது. எனவே நல்ல அறிவாளி என்பது தெரியவருகிறது.   

பத்தாம் பாவகம்: 
பத்தாம் பாவகம் 60% பலம் இழந்த நிலையில் இருக்கிறது. எனவே எழுப்பு மூட்டுகளில் பிரச்சனைகளை கொடுக்கும். 

பதினோராம் பாவகம்: 
பதினோராம் பாவகம் 30% பலமுடன் இருக்கிறது. நல்ல அதிஷ்டமுடையவர். 

பன்னிரெண்டாம் பாவகம்: 
பன்னிரெண்டாம் பாவகம் 60% பலமுடன் இருக்கிறது. இது மிகவும் நல்ல விஷயம். எனவே தோழி வெளிநாடுகளில் குடியுரிமை வாங்கி வாழ்க்கையை நடத்தலாம். இதுவே ஜாதகியின் பன்னிரெண்டு பாவக நிலை ஆகும்.குடும்பம் மற்றும் களத்திர பாவகம்: 
குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவகம் நல்லநிலையில் இருக்கிறாத என்று பார்க்க வேண்டும். குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருக்கிறது. அடுத்து களத்திர ஸ்தானம் நல்லநிலையில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். களத்திர ஸ்தானமும் நல்லநிலையில் இருக்கிறது. 

எனவே களத்திர ஸ்தானம், குடும்ப ஸ்தானம் பாதிக்கப் படவில்லை என்பதை தெரிந்து கொண்டோம். ஆகவே நடக்கும் தசா, புத்திகள் நல்லது செய்கிறதா என்று கணிதம் செய்ய வேண்டும். அடுத்து தற்போது நடக்கும் தசா, புத்தி என்னவென்று பாக்க வேண்டும். 

தசா, புத்தி விவரம்: 
தற்போது ஜாதகிக்கு சுக்கிர திசை நடக்கிறது. தசா நாதன் ஐந்தாம் பாவகத்தை லக்கினத்திற்கு பாதக ஸ்தானதுடன்  சம்மந்தப்படுத்தி தோழியின் 16 வயது முதல் 36வரை 160% பாதகமான பலனை மட்டும் கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தற்போது ஜாதகிக்கு குரு புத்தி நடக்கிறது. புத்தி நாதன் நான்கு மற்றும் ஐந்தாம் பாவக பலனை செய்கிறார். அவ்விரண்டு பாவகமும் 60% பலம் இழந்த நிலையில் இருக்கிறது. எனவே புத்தி நாதனும் பாதகத்தையே செய்கிறார். 

எனவே திருமண பிரச்சனைக்கு நடக்கும் தசா, புத்தி தான் காரணம் என்று தெளிவாக தெரிகிறது. 

36 வயது வரை தோழிக்கு பாதகமான பலன் நடைபெறுவதால் தோழி தன்னுடைய பூர்வீகத்தை விட்டு வெளியே இருப்பது மிகவும் நல்லது. மேலும் தன்னுடைய குழதெய்வ அருள் ஜாதகிக்கும் கிடைக்கவில்லை. அதற்கு சரியான வழிபாடுகளையும் செய்ய வேண்டும். 

இயற்கையாகவே தோழியின் அமைப்பில் குடும்பம், களத்திரம் பாதிக்கப்படவில்லை எனவே திருமணம் உறுதி கவலை தேவையில்லை. 
கொட்ச்சாரத்தில் 2015 ஒன்பதாம் மாதத்திற்கு பிறகு 2016 ஜீலை மாதம் வரை நல்ல பலன் நடக்கிறது எனவே இந்த கலகட்டத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வரும் வரன் உறுதியாக முடியும். திருமணம் உறுதி கவலை தேவையில்லை. 

இருப்பினும் புத்திர பாவகம் பாதிக்கப் பட்டுள்ளது எனவே மாப்பிளையை தேர்வு செய்யும் போது அவருடைய அமைப்பில் புத்திர பாவகம் 100% நன்றாக உள்ளதா என ஜோதிட ஆலோசனை பெற்று திருமணம் செய்து வைப்பது நல்லது. 

நாம் தெளிவாக பலன் சொன்னவுடன் அந்த தோழியின் தாய் முகத்தில் சந்தோஷம் ஏற்பட்டது. 

கவனிக்க வேண்டியது: 
நம்முடைய சுய ஜாதகத்தில் மொத்தம் உள்ள பன்னிரெண்டு பாவகத்தில் பதினோரு பாவகம் நல்லநிலையில் இருந்து ஒரே ஒரு பாவகம் மட்டும் பாதிக்கப்பட்டு அந்த பாதிக்கப்பட்ட பாவகத்தின் பலனை நமக்கு நடக்கும் தசா, புத்திகள் ஏற்று நடத்துமேயாயின் 100% அந்த பாவக வழியாக கெடுபலனையே சந்திக்கவேண்டி இருக்கும். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

2015-2016 குரு பெயர்ச்சி – லக்கின வாரியாக பலன்கள் பகுதி-2.

ஓம் சரவண பவ 


ஓம் நகத்வஜாய வித்மஹே 
பத்ம ஹஸ்த்தாய தீமஹி 
தந்நோ ராகு ப்ரோசோதயாத்
துலாம் லக்கினம்: 


துலாம் லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த நன்மையை செய்யும். லக்கினத்திற்கு 11-ம் இடத்தில் அமர்ந்துள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு சகோதர வழி ஆதாயம், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, எழுத்து ஆற்றல், தொழில் தொடர்பு, நண்பர்களின் ஆதரவு, அறிவியல் ஆராய்ச்சி, வட்டித் தொழில் மற்றும் இன்சூரன்ஸ் துறையில் நல்ல வருமானம், மன நிம்மதி, பெரியோர்களின் முழு ஆசீர்வாதம், உடல்நல பிரச்சனை இன்மை, நல்ல மனநலம், துடிப்பான செயல்பாடுகள், அபரிவிதமான அறிவாற்றல் என சகல நன்மைகளையும் அனுபவிப்பர். மனைவியிடம் கண்டிப்பை குறைத்துக் கொள்வது இல்லறத்தில் மகிழ்வை தரும்.  

விருச்சிகம் லக்கினம்: 


விருச்சிக லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த சோதனையையே தரும் என்பது வருத்தம் மிகுந்ததே. லக்கினத்திற்கு 10-ம் இடத்தில் உள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு தன்னுடைய நாவடக்கமின்மை காரணமாக ஆசிரியர்கள், தன்னைவிட வயதில் மூத்தோரிடம் கெட்ட பெயரையே சம்பாதிப்பர், வேலை வாய்ப்பில் தாமதம் ஏற்படும், வருமானம் குறைவுக்கு தானே காரணமாவர், உடல் பிரச்சனை சந்திக்கும் நிலை ஏற்படும், கடன் வாங்குதல் மற்றும் கொடுத்தல் ஆகாது, சக நண்பர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும், அதிகளவும் மனரீதியான பிரச்சனையை எதர்கொள்ளவேண்டிய நிலை வரும், பெண்களுக்கு தாயிடமும் ஆண்களுக்கு தந்தையிடமும் கருத்துவேறுபாடு ஏற்படும். 

( நண்பர்களே 12 லக்கினங்களில் விருச்சிக லக்கினம் என்பது மட்டும் கெடவே கூடாது ஏன் என்றால் இறையருளின் கணக்கிற்கு இந்த லக்கினம் 8-ம் வீடாக வரும் அதாவது ஆயுள் பாவகமாக வரும் இந்த லக்கினம் கெடுமேயாயின் இந்த லக்கினத்தை சேர்ந்த நண்பர்களை போன்ற ஒரு சுயநலவாதியை பார்க்கவே முடியாது மேலும் இந்த நண்பர்களால் தன்னுடைய மனதை ஒருநிலை படுத்தவே முடியாது. எதிலுள் குறைக்கானும் குணம் இயற்க்கையாக அமைந்துவிடும் அடுத்தவருக்கு தீமை நடந்தால் இவர்களில் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. மனம் நினைக்கிறதை எல்லாம் செய்ய வேண்டும் என்ற போக்கில் இறங்கி தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் பாதாளத்திற்கு கொண்டுபோய் விடுவர். தன்னுடைய வாழ்க்கை மற்றவரை சார்ந்தே இருக்கும். அதுவே விருச்சிக லக்கினம் நல்ல நிலையில் இருக்கும் நண்பர்களின் வாழ்க்கை அவர்கள் எதிர்பாகும் அளவைவிட பெரும் வளர்ச்சியை தரும், இவர்களின் சிந்தனை என்றும் பொதுநலம் சார்ந்தே இருக்கும், ஆன்மீகத்தில் கைதேர்ந்தவராக இருப்பார். இவர்களின் எண்ணமே இவர்களை உயர்ந்த இடத்திற்கு எடுத்து செல்லும். ) 

தனுஷ் லக்கினம்: 


தனுஷ் லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த நன்மையை செய்யும். லக்கினத்திற்கு 9-ம் இடத்தில் அமர்ந்துள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு முழுமையான நன்மையை வாரி வழங்குவார் அனைத்து வழிகளிலும் முழு நன்மையை அனுபவிப்பர், தன்னுடைய குணத்தின் செயல்பாட்டால் அனைத்து தரப்பினரிடமும் நல்ல பெயரையும் தொழில் ஆதாயமும் அடைவர், குழந்தை பாக்கியம் பரிபூரணமாக கிடைக்கும், வீடு, வண்டி, வாகனம், புதிய சொத்து என சுகபோகத்தை அனுபவிப்பர், வெளிநாட்டு வேலை வீடு தேடிவரும். ஒழுக்கத்தில் சிறந்து விழங்குவர். 

மகரம் லக்கினம்: 


மகர லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த சோதனையையே தரும் என்பது வருத்தம் மிகுந்ததே. லக்கினத்திற்கு 8-ம் இடத்தில் உள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு முழுமையான கெடுதலையே செய்வார், தொழில் தொடர்பு முயச்சி பலனளிக்காமல் போய்விடும், இளைய சகோதரர்களால் மனவிரயம் ஏற்படும், நண்பர்கள் மற்றும் சுற்றதாரின் உதவி கிடைக்க வாய்ப்பு குறைவு, உடல் நலனில் அதிக கவனம் தேவை, கட்டுபாடு மிகவும் அவசியம், தாய், தந்தையிடம் கோபம் கொள்ளுதல் ஆகாது, வெளிநாடு செல்லும் முயற்சி தோல்வியில் போய்முடியும் அப்படியே கிடைத்து சென்றாலும் போனவேகத்தில் திருபுவர். பொறுமையும், நிதானமும், பெரியோர்களின் வழிகாட்டுதலையும் கேட்டு நடப்பது நல்லது. 

கும்பம் லக்கினம்: 


கும்ப லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த நன்மையை செய்யும். லக்கினத்திற்கு 7-ம் இடத்தில் அமர்ந்துள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வித்துறை மற்றும் விளையாட்டு துறையில் இருப்போருக்கு மிகுந்த நன்மையை செய்யும், நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் முழுமையான ஆதரவு கிடைக்கும், குடும்ப வருமானம் நல்லமுறையில் இருக்கும், வேளையில் இருப்போருக்கு சம்பள உயர்வு 100% கிடைக்கும், திருமணம் ஆகாதோருக்கு முன்பகுதியில் பிரச்சனையை கொடுத்தாலும் இறுதியில் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்து தந்துவிடு செல்லும், இவ்வாறாக கும்ப லக்கினம் மற்றும் மிதுன லக்கின நண்பர்களுக்கு கூட்டுத் தொழில் – நண்பர்களிடையே கருத்து வேறுபாடு மற்றும் திருமண விஷயங்களில் முன்பகுதி மனவிரயம் இறுதியில் நன்மையை செய்துவிட்டு செல்லும். 

மீனம் லக்கினம்: 


மீன லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த சோதனையையே தரும் என்பது வருத்தம் மிகுந்ததே. லக்கினத்திற்கு 6-ம் இடத்தில் உள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு தொழிலில் தேக்க நிலை, பணிபுரியும் இடத்தில் அவப்பெயர், தாய் தந்தையிடையே கருத்து வேறுபாடு, அதிகப்படியான முன்கோபம், முரட்டு புத்தி, குடும்பத்தில் சண்டை சச்சரவு, பேச்சில் ஆணவம், மனைவியிடம் வீண் பிரச்சனை, அனைத்திலும் திருப்தி குறைவு என அனைத்து வழியிலும் சோதனைய அனுபவிப்பர். 

கவனிக்க வேண்டியவை: 

இதுவே 12 லக்கினங்களின் பலன்கள் ஆகும். 100% இந்த பலன்கள் ஒவ்வொருவரின் சுயஜாதகத்திற்கும் கண்டிப்பாக மாறுபடும் நண்பர்களே. உதாரணமாக மீன லக்கினத்தை சேர்ந்த ஒரு நண்பருக்கு தற்போது நடக்கும் ஏதோ ஒரு கிரகத்தின் புத்தியில் 5-ம் வீட்டு பலன் மட்டுமே நடைபெறுமேயாயின் அந்த 5-ம் வீடு நல்ல நிலையில் இருப்பின் கண்டிப்பாக இந்த குருபெயர்ச்சியில் அவர் தீமையை அனுபவிக்க மாட்டார். 5-ம் வீட்டு பலனை மட்டுமே அனுபவிப்பர். 

ஆகவே நண்பர்களே இந்த குரு பெயர்ச்சி தங்களின் ஜாதகத்திற்கு நன்மையை செய்யுமா இல்லை தீமையை செய்யுமா என்பதை தெரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் தங்களின் ஜாதக குறிப்புகளை featurereport1@gmail.com  என்ற இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்து தெளிவு பெறலாம். 
நன்றி.

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

2015 - 2016 குரு பெயர்ச்சி – லக்கின வாரியாக பலன்கள் பகுதி-1

ஓம் சரவண பவ 
வணக்கம் நண்பர்களே மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த பதிவில் நாம் குரு பெயர்ச்சியை பற்றி பார்க்கவிருக்கிறோம். குரு பெயர்ச்சி என்ற உடனே நம்மில் பல பேருக்கும் அப்படி என்றால் என்ன என்ற கேள்வி தான் இன்றைய இளைஞர்களிடமும் நிலவி வருகிறது. 

சரி குரு பெயர்ச்சி என்றால் என்ன? 

குரு என்கின்ற கிரகம் கடகத்தில் 90:00:01 பாகையில் இருந்து 120:00:00 பாகையை கடந்து சிம்மத்தில் 120:00:01 பாகைக்குள் வருவதையே குரு பெயர்ச்சி அடைந்து விட்டார் என்கிறோம். 120:00:01 பாகையில் இருந்து 150:00:00 பாகை வரை சிம்மத்தின் வீடாகும். இங்கு பெயர்ச்சி செய்துள்ள குரு தன்னுடைய சொந்த வீட்டிற்கும், தன்னுடைய பார்வையான 5,7,9 ஆகிய பார்வையாலும் எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்களை செய்கிறார் என்பதையே குரு பெயர்ச்சி பலன்கள் என்கிறோம். 

நம்முடைய முறையில் ராசிக்கு முக்கியத்துவம் இல்லை நண்பர்களே. எனவே நாம் லக்கின வாரியான பொதுப் பலன்களை பார்ப்போம். 

ஓம் நகத்வஜாய வித்மஹே 
பத்ம ஹஸ்த்தாய தீமஹி 
தந்நோ ராகு ப்ரோசோதயாத் 

மேஷம் லக்கினம்:


மேஷ லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த நன்மையை செய்யும். லக்கினத்திற்கு 5-ம் இடத்தில் அமர்ந்துள்ள குரு இந்த ஆண்டு மேஷ லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு நல்ல பட்ட படிப்பு, கல்வித்துறையில் வேலைவாய்ப்பு, விளையாட்டு துறையில் சாதனை, குடும்பத்தில் தெளிவான செயல்பாடு, எதையும் ஆராய்ந்து முடிவு செய்யும் பக்குவ நிலை, 100% வெளிநாட்டு வேலை வாய்ப்பு, தன்னுடைய பூர்வீகத்தில் நல்ல மதிப்பு மரியாதை, குழந்தை செல்வம்  என அனைத்து வகையிலும் நன்மையை செய்யும். தன்னுடைய மூத்த சகோதர வழியாக மட்டும் பிரச்சனையை கொடுக்கும்.  

ரிஷபம் லக்கினம்:


ரிஷப லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த சோதனையையே தரும் என்பது வருத்தம் மிகுந்ததே. லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் உள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு உஷ்ணப் பிரச்சனையையும், நெருப்பு காயங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. ஆண்கள் தன்னுடைய தாயின் உடல்நிலையிலும் பெண்கள் தன்னுடைய தந்தையின் உடல்நிலையிலும் அக்கறை செலுத்துவது நல்லது. வேளையில் இருக்கும் நண்பர்கள் எந்த சூல்நிலையிலும் தன்னுடைய வேலையை விட்டுவிடக் கூடாது. படிக்கும் மாணவர்களின் ஞாபக சக்தி குறையும். சமூகத்தில் மரியாதை குறையும் வாய்ப்பு அதிகம். தன்னுடைய செயல்பாடுகளே பலவித பாதகத்தை கொடுத்துவிடும்.  எனவே பொறுமையுடன் செயல்படுவதும் பெரியோர்களின் பேச்சை கேட்டு நடப்பதும் நல்ல நன்மையை கொடுக்கும் இதுவே பரிகாரமும் ஆகும். 

மிதுனம் லக்கினம்:


மிதுன லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த நன்மையை செய்யும். லக்கினத்திற்கு 3-ம் இடத்தில் இருக்கும் குரு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி , 100% வெளிநாட்டு வேலை வாய்ப்பு, குறைந்த உழைப்பில் அதிக ஊதியம், தகவல் தொடர்பாடல், படிப்பில் அக்கறை செலுத்தும் போக்கு, என நன்மையை அனுபவிக்க போகிறார்கள். திருமணம், கூட்டுத்தொழில் இவை இரண்டும் இந்த ஆண்டு பலன் கொடுக்காது. 

கடக லக்கினம்: 


கடக லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த சோதனையையே தரும் என்பது வருத்தம் மிகுந்ததே. லக்கினத்திற்கு 2-ம் இடத்தில் உள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு கடன் தொல்லைகள், உடல் நிலை பிரச்சனைகள், பேச்சில் தடுமாற்றம், திடீர் இளப்புகள், செய்யும் வேளையில் திருப்தி இன்மை என தீய பலனையே கொடுக்கும். இவர்களுக்கு பரிகாரம் என்னவென்றால் அமைதியாக இருப்பது, தேவையில்லாத காரியங்களில் மூக்கை நூலைக்காமல் இருப்பது, கடன் வாங்குதல் மற்றும் கொடுத்தலை தவிர்ப்பது. செய்யும் வேளையில் கவனம் செலுத்துதல் இவைகளை கடைபிடித்தால் நன்மையை அனுபவிக்கலாம். 

சிம்மம் லக்கினம்: 


சிம்ம லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த நன்மையை செய்யும். லக்கினத்திற்கு 1-ம் இடத்தில் அமர்ந்துள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு மதிநுட்ப அறிவாற்றலையும், நல்ல ஞானத்தையும், ஏற்றுமதி இறக்குமதில் திடீர் லாபத்தையும், வெளிநாட்டு பயணத்தில் நல்ல ஆதாயமும், கல்வியில் சிறந்தும், எதீர்பாரா யோகநிலையையும் அடைவர். மனைவி மற்றும் நபர்களிடம் பொறுமையை கடைபிடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும். 

கன்னி லக்கினம்: 


கன்னி லக்கினக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த சோதனையையே தரும் என்பது வருத்தம் மிகுந்ததே. லக்கினத்திற்கு 12-ம் இடத்தில் உள்ள குரு இந்த லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு மானவர்கள் படிப்பில் மந்தம், மண், மனை, வாகணத்தால் விரையம், அடிப்படை பராமரிப்பு திறன் பாதித்தல், தன்னுடைய செய்ல்பாடுகளால் பெரியோர்களிடம் அல்லது பணிபுரியும் இடத்தில் அவப்பெயர் என தீமையை சந்த்தித்தாலும் திருமணம், கணவனின் ஆதரவு, கூட்டு முயற்சி என கன்னி லக்கினத்திற்கு நன்மை தீமை இரண்டும் சேர்ந்தே நடக்கும். 

முக்கிய குறிப்பு: தங்களது  ஜாதகத்திற்கும் இந்த குரு பெயர்ச்சியின் தெளிவான பலன்களை தெரிந்துகொள்ள விரும்பினால் featurereport1@gmail.com என்ற இந்த மின்னஞ்சலுக்கு தங்களின் ஜாதகத்தை அனுப்பி வைக்கவும் நன்றி. 


astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

காதலில் தோல்வி ஏன் ?

ஓம் சரவண பவ 


மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. காதலித்த பெண் தன்னைவிட்டு போனதற்கு என்ன காரணம் என்று ஒரு தம்பி எனக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார் அந்த ஜாதகத்தை தற்போது பார்க்கலாம் வாருங்கள். 
லக்கினம்: துலாம் 
திதி: வளர்பிறை சதுர்த்தி 
நட்ச்சத்திரம்: உத்திரம் 4-ம் பாதம் 
( எம்முடைய முறையில் ராசிக்கு முக்கியத்துவம் இல்லை ஜனனம் லக்கினமே மிகவும் முக்கியம் )

ஓம் நகத்வஜாய வித்மஹே 
பத்ம ஹஸ்த்தாய தீமஹி 
தந்நோ ராகு ப்ரசோதயாத் 

இந்த தம்பியின் ஜாதகத்தில் 12 பாவகங்களில் எந்தெந்த பாவகம் எத்தனை சதவிகிதம் நன்றாக உள்ளது என ஆராய்வோம். 

1-ம் பாவகம் அதன் அதிபதி சுக்கிரன் 10-ல் இருந்து 1-ம் வீட்டை கெடுத்து விட்டார். ஆனால் சனி அந்த வீட்டை 10-ம் பார்வையால் பார்த்து நன்மை செய்கிறார். எனவே சுக்கிரன் கெடுத்தாலும் சனி நன்மை செய்கிறார் ஆகவே 1-ம் பாவகம் 50% நன்றாக உள்ளது. 

2-ம் பாவகம் அதன் அதிபதி செவ்வாய் 11-ல் இருந்து 2-ம் வீட்டிற்கு நன்மை செய்கிறார். மேலும் தன்னுடைய வீட்டை 4-ம் பார்வையால் செவ்வாய் பார்த்து நன்மை செய்கிறார், குரு 5-ம் பார்வையால் பார்ப்பது தவறு எனவே  2-ம் பாவகம் 50% நன்றாக உள்ளது. 

3-ம் பாவகம் அதன் அதிபர் குரு இருப்பினும் அங்கு ராகு இருப்பது நல்லது. எனவே ராகு 3-ம் பாவகத்திற்கு 100% நன்மை செய்து விடுகிறார். 

4-ம் பாவகம் அதன் ஆதிபர் சனி 3-ல் இருப்பது தவறு மேலும் குரு மற்றும் சூரியன் பார்ப்பது அதைவிட தவறு. எனவே 4-ம் பாவகம் 100% கெட்டு விட்டது. 

5-ம் பாவகம் அதன் அதிபர் சனி 3-ல் இருப்பது நல்லது. 5-ம் வீட்டை புதன் மற்றும் சுக்கிரன் பார்ப்பது நல்லது செவ்வாய் பார்ப்பது தவறு. எனவே 5-ம் பாவகம் 75% நன்றாக உள்ளது. 

6-ம் பாவகம் அதன் அதிபர் குரு 10-ல் இருப்பது தவறு மேலும் தன்னுடைய வீட்டை தானே பார்த்து 100% கெடுத்து விட்டார். 

7-ம் பாவகம் அதன் அதிபர் செவ்வாய் 11-ல் இருந்து 100% 7-ம் வீட்டை கெடுத்து விட்டார். 

8-ம் பாவகம் அதன் அதிபர் சுக்கிரன் 10-ல் இருந்து 100% 8-ம் வீட்டிற்கு நன்மை செய்கிறார். 

9-ம் பாவகம் அதன் அதிபர் புதன் இருப்புனும் அங்கு கேது இருந்து 9-ம் பாவகத்தை 100% பலப்படுத்தி விட்டார். 

10-ம் பாவகம் அதன் அதிபர் சந்திரன் 11-ல் இருந்து கெடுதல் செக்கிறார். மேலும் 10-ம் வீட்டில் சனியின் பார்வை மற்றும் சூரியன், குரு, புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இருக்கின்றன. இதில் சூரியன் ஒருவரே நன்மை செய்கிறார். எனவே 10-ம் பாவகம் 17% நல்ல நிலையில் உள்ளது. 

11-ம் பாவகம் அதன் அதிபர் சூரியன் 10-ல் இருப்பது தவறு. சந்திரன் மற்றும் செவ்வாய் இங்கு இருப்பது நல்லது. எனவே 11-ம் பாவகம் 67% நன்றாக உள்ளது. 

12-ம் பாவகம் அதன் அதிபர் புதன் 10-ல் இருப்பது நல்லது எனவே 12-ம் பாவகம் 100% நன்றாக உள்ளது. 

தம்பியின் 12 பாவகத்தையும் கணிதம் செய்து எந்தெந்த பாவகம் எத்தனை சதவிகிதம் நன்றாக உள்ளது என்பதையும் எந்தெந்த கிரகங்கள் பாவகங்களுக்கும் நன்மை மற்றும் தீமை செய்கிறது என்பதையும் தெளிவாக கணிதம் செய்துள்ளோம் இனி தம்பியின் தசா புத்திக்கு செல்வோம் நண்பர்களே. 

இவர் முதலில் சூரிய திசையை கடந்துள்ளார். சூரிய திசையில் 9,10,12 வீடுகளின் பலன் நடந்திருக்கிறது. 9-ம் வீடு 100% நன்றாக உள்ளது, 10-ம் வீடு 17% மட்டுமே நன்றாக உள்ளது, 12-ம் வீடு 100% நன்றாக உள்ளது. என்வே 9,12-ம் பாவகம் வழியாக நன்மையையும் 10-ம் பாவக வழியாக சிறிய உடல் நிலை பாதிப்பை சந்தித்து இருப்பார். 

அடுத்து இவர் சந்திர திசையை கடந்துள்ளார். சந்திர திசையில் 11-ம் வீட்டு பலன் மட்டுமே நடந்துள்ளது. 11-ம் வீடு 67% நன்றாக உள்ளது. அதுவும் சிம்மாத்தில் உள்ளது ஆகவே சந்திர திசையில் நன்றாக படித்திருபார். சூரியன் கெடுதல் செய்வதால் உஷ்ணம் பிரச்சனைகளை சந்தித்து இருப்பார். பெரும்பகுதி நன்மையாகவே இருந்திருக்கும். 

அடுத்து இவர் செவ்வாய் திசையை கடந்துள்ளார். செவ்வாய் திசையில் 7,11-ம் வீட்டு பலன் நடந்துள்ளது. 7-ம் வீடு 100% கெட்டு விட்டது. 11-ம் வீடு 67% நன்றாக உள்ளது. 7-ம் வீடு 100% பாதிப்பை கொடுத்துள்ளது இதனால் தன்னுடைய தாயை இழந்தார். காதலில் விழுந்தார். 11-ம் பாவக வழியாக படிப்பை மட்டும் நல்ல முறையில் படித்திருக்கிறார். 
( கெட்ட தசா புத்தி காலத்தில் நாம் என்ன நல்லது செய்தாலும் கெடுதலில் தான் போய் முடியும். அதே போல் 7-ம் பாவகம் தம்பிக்கு காதலியை காட்டி காதலில் விழவைத்து கஷ்டத்தையே கொடுத்துள்ளது. )  

தற்போது ராகு திசை நடக்கிறது. ராகு திசையில் 3-ம் வீட்டு பலன் மட்டுமே நடைபெறுகிறது. இந்த காலகட்டம் தம்பிக்கு நல்லதாகவே அமையும் எடுக்கும் முயர்ச்சிகளில் வெற்றி வேலை வாய்ப்பு என்று அனைத்தும் நல்லதாகவே அமையும். 

 ராகு திசையில் புத்திகளை கணிதம் செய்யவேண்டும். முதலில் நடந்த ராகு புத்தி 3-ம் வீட்டு பலனை செய்துள்ளது. நன்றாக படித்து முடித்து விட்டார். 

அடுத்து குரு புத்தியில் 10-ம் வீட்டு பலன் நடந்துள்ளது 10-ம் வீடு 17% மட்டுமே நல்ல நிலையில் உள்ளது இந்த கால கட்டத்தில் தன்னுடைய தந்தையால் பெரிய அளவு மனவிரயாத்தை சந்தித்துள்ளார். இவரின் தந்தைக்கு இதயக் கோளாறு எனவே குரு புத்தி ஒரு ஆட்டு ஆட்டி விட்டது. 

தற்போது சனி புத்தியில் பயணம் செய்கிறார். சனி புத்தி 3-ம் வீட்டு பலனை செய்கிறது. 3-ம் வீடு 100% நன்றாக உள்ளது எனவே இந்த காலகட்டம் நன்றாக இருக்கும். சகோதரவழி ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். 

தம்பி உன்னுடைய ஜாதகத்தில் காளத்திர பாவகம் 100% கெட்டுவிட்டது எனவே காதல், நண்பர்களின் பலக்கவழக்கம் ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.  

ஆகவே நண்பர்களே ஒருவரின் 12 வீடுகளையும் சரியாக கணித்து, பிறகு கடந்து வந்த திசைகளையும் தற்போது நடக்கும் திசா புத்திகளையும் கணித்து பலன் சொல்லும் போது எந்த பிரச்சனையும் இல்லாமல் பலனை தெளிவாக சொல்ல முடியும். 

முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்: ஒருவரின் லக்கினம் 100% நல்ல நிலையில் இருப்பினும் அவருக்கு நடக்கும் தசா, புத்திகள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே நன்மையை அனுபவிக்க முடியும். அப்படி அவர் தீமையை சந்தித்து வரும் போது லக்கினம் நல்ல நிலையில் இருப்பின் தற்கொலை முயற்ச்சியில் இறங்க மாட்டார். லக்கினம் கெடும் பச்சத்தில் தற்கொலை செய்துகொள்வார். அதனால் தான் எந்த ஒரு ஜாதகருக்கும் லக்கினம் 100% கெட்டுவிடக் கூடாது என்ற கருத்தை ஆரம்பம் முதல் நாம் சொல்லிவருகிறோம். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

செவ்வாய் தோஷம், ராகு, கேது தோஷம் உண்மையா?மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பர்களே. இந்த பதில் ஒரு நண்பரின் ஜாதகத்தை வைத்து இவருக்கு 34 வயதாகியும் இன்னும் ஏன் திருமணம் ஆகவில்லை? ராகு இரண்டாம் இடத்தில் இருப்பதால் அது களத்திர வழி தோசமாகுமா? போன்றவற்றை பார்போம் நண்பர்களே. 

கும்பகோணத்தை சேர்ந்த நண்பர் ஒருவர் எம்மிடம் கேட்ட கேள்வி:
அய்யா என்னுடைய ஜாதகத்தில் ராகு இரண்டில் இருந்து தற்போது எனக்கு ராகு திசை நடப்பதால் எனக்கு எந்தவரனும் அமைய வில்லை இதை காலசர்ப்ப தோஷம் என்றும் மனைவிக்கு ஆகாது என்றும் பல ஜோதிடர்கள் கூறுகின்றனர். வீடு, நல்ல வேலை அனைத்தும் இருந்தும் திருமணம் மட்டும் நடக்காதது மிகுந்த வேதனைக்கு ஆளாக்குகிறது. எனக்கு திருமணம் நடக்குமா இல்லை நடக்காதா? என்னுடைய ஜாதகத்தில் இருப்பதுதான் என்ன தெளிவான விளக்கம் தேவை. தங்களின் வாங்கிக்கிலையில் நான் பணம் செலுத்த தயாராக உள்ளேன். 

ஓம் சரவண பவா
ஓம் அங்காரகாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தந்நோ பவும ப்ரசோதயாத்

உண்மையாகவே தோஷம் என்ற ஒன்று இருக்கிறதா? ஏன் பல ஜோதிடர்கள் தோஷம் என்று பல ஜாதகத்தை ஒதுக்கி பல நண்பர்களின்  வாழ்க்கையில் விளையாடுகிறார்கள்?: இந்த பதிவில் நான் சொல்லப் போகும் தோஷம் பற்றிய விளக்கம் பல ஜோதிடர்களுக்கு முரண்பட்ட கருத்தாக இருக்கலாம் ஆனால் உண்மைநிலை இதுவே. சரி வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.

செவ்வாய் தோஷம், காலசர்ப்ப தோஷம், ஏழரை சனி, கிரகம் உச்சம், நீசம் என்று பலவாறு கிரகத்தை அடிப்படையாக வைத்து ஒரு ஜாதகத்திற்கு பலன் சொல்லுவதென்பது மிகவும் முட்டாள் தனமான விஷயம் நண்பர்களே. 2,7,12 ஆகிய இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் மட்டும் ஏன் செவ்வாய் தோஷம் என்கிறோம்? ஏன் அந்த இடத்தில் குரு இருந்தால் குரு தோஷம்? புதன் இருந்தால் புதன் தோஷம்? என்று சொல்வதில்லை. அதேபோல் 2-ல்‌ ராகு இருந்தால் அது தோஷம் ஆகிவிடுமா? செவ்வாய், ராகு இந்த இரண்டு கிரகத்திற்கு மட்டும் தான் தோஷம் உள்ளதா? ஏன் இந்த இரண்டு கிரகத்திற்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம்?. 2,7 ஆகிய வீடுகளுக்கு எதற்காக மிக முக்கியம்? என்று கருதப் படுகிறது இப்படி பல கேள்விகள் என்மனதில் தோன்றியதன் விளைவே ஒரு பொறியாளனாக இருந்த நான் ஜோதிடத்தின் பக்கம் திரும்ப காரணமாகியது.  

ஜோதிடம் என்பது முற்றிலும் உண்மை அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. நாம் வசிக்கும் வீடு நன்றாக இருந்தால் மட்டுமே மழை காலங்களில் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். நாம் வசிக்கும் வீடு பராமரிப்பு இன்றி இருக்கும் போது மழை, வெயில் காலங்களில் பல கஷ்டங்களை சந்தித்தே ஆக வேண்டும். இப்படிபட்ட சூழ்நிலையில் நாம் வெயில், மழையை குத்தம் சொல்வதா இல்லை நம்முடைய பாலுதான வீட்டை குத்தம் சொல்வதா நன்றாக சிந்தித்து பாருங்கள் நண்பர்களே மழை, வெயில் என்பது ஒரு இயற்க்கையான பொது விஷயம் அதற்கு இந்த வீட்டுக்காரன் நல்லவன் இந்த வீட்டுக்காரன் கெட்டவன் என்றெல்லாம் பார்ப்பது கிடையாது எனவே நாம் வசிக்கும் வீடு நன்றாக இருந்தால் நாம் பாதிப்பை சந்திக்கப் போவது இல்லை. பலுதான வீடாக இருந்தால் அதை பராமரிப்பது முக்கியம் இதை உணர்ந்து கொள்வது அதைவிட முக்கியம். 

இதை போன்றே நம்முடை ஜாதகத்திலும் பாவகம் என்னும் வீடு நன்றாக இருந்தால் எந்த கிரகத்தின் கதிரியக்கமும் அந்த பாவக வழியில் நன்மைகளை மட்டுமே செய்யும். அதுவே பலம் இழந்த பாவகமாக இருந்தால் எந்த ஒரு கிரகத்தின் கதிரியக்கமும் அந்த பாவகத்தின் காரகத்துவத்திற்கு ஏற்றார் போல் அவயோகப் பலனையே செய்யும். செவ்வாய் மற்றும் ராகுவின் கதிரியக்கம் மட்டும் பலம் வாய்ந்தது அல்ல நண்பர்களே அனைத்து கிரகத்தின் கதிரியக்கமும் பலம் வாய்ந்ததே. (ராகு என்பது ஒரு கிரகமே இல்லை இதை மற்றுமொரு பதிவில் பார்போம்) 

அனைத்து கிரகங்களும் ஒரே மாதிரியான கதிரியக்கத்தையே 12 பாவகங்களுக்கும் வழங்குகிறது அந்த கதிரியக்கத்தின் பலனை பாவகங்களே தீர்மானிக்கிறது எனவே கிரகங்களை குத்தம் சொல்வது மிகவும் தவறு நண்பர்களே. 

ஓர் உதாரணத்திற்கு தற்போது ராகு கன்னியில் உள்ளது எனவே தற்போது பிறக்கும் சிம்ம லக்கின ஜாதகர்கள் அனைவருக்கும் தோஷம் என்று சொல்லிவிட முடியுமா அப்படி கணிதம் செய்வது மிகவும் தவறு நண்பர்களே அந்த ஜாதகத்தில் ராகு எந்த வீட்டிற்கு ஆதிபத்தியம் வாக்குகிறது, தன்னுடை தசா, புத்தி, அந்தர, சூட்ச்சம காலங்களில் எந்த வீட்டின் பலனை செய்கிறது மற்றும் கோட்ச்சாரத்தில் எந்த வீடின் பலனை செய்யும் இந்த வீடுகள் இறையருளின் கணக்கிற்கு எந்தெந்த பாவகமாக வருகிறது மேலும் என்ன ராசியில் என்ன இயக்கதத்துவத்தில் அமைகிறது என்று இன்னும் பல சூட்ச்சம விஷயங்கள் இருக்கிறது நண்பர்களே இதையெல்லாம் வைத்து நாம் பலனை தீர்மானிக்கும் போது மிகவும் துல்லியமாக பலன் கிடைக்கும் இதுவே 100% உண்மை நிலை ஆகும். 

சரி இனி நண்பரின் ஜாதகத்தை பார்போம்: 


லக்கினம்: மிதுனம் 
நட்ச்சத்திரம்: உத்திரம்-3 
நாம் ஏற்கனவே சொன்னது போல ஒருவருக்கு திருமண நல்லபடியாக நடக்க வேண்டுமானால் அவர்களுடைய ஜாதகத்தில் 1,2,7 ஆகிய பாவகங்ககள் மற்றும் இறையருளின் கணக்கிற்கு மேஷம், ரிஷபம், துலாம் ராசிகள் மேலும் நடக்கும் தசா, புத்திகள் நன்றாக இருக்க வேண்டும் இவை அனைத்தும் நன்றாக இருக்கும் போது திருமணம் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெறும் நண்பர்களே. 

நண்பரின் ஜாதகத்தில் லக்கினம் மற்றும் மேஷ ராசி நல்ல நிலையில் இருக்கிறது, அடுத்ததாக லக்கினத்திற்கு 7-ம் பாவகம் மற்றும் ‌ இறையருளின் கணக்கிற்கு களத்திர பாவகமான துலாம் ராசியும் நல்ல நிலையில் உள்ளது, ஆனால் லக்கினத்திற்கு 2-ம் பாவகமான கடக ராசி மற்றும் ‌ இறையருளின் கணக்கிற்கு இரண்டாம் பாவகமான ரிஷப ராசி முழுமையாக பலம் இழந்த நிலையில் உள்ளது குறிப்பாக 2-ம் பாவகம் மிதுன லக்கினத்திற்கு பாதக ஸ்தானமான 2-ம் பாவகத்துடன் சம்மந்தம் பெறுவது பணம் சார்ந்த விசயங்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும் குடும்ப விஷயத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும். ரிஷப ராசி லக்கினத்திற்கு 12-ம் பாவகமாக வந்து பலம் இழக்கிறது. (இதன் விளைவு நண்பர் தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கி கொள்ள முடியவில்லை) எனவே திருமணம் தாமதம் மட்டுமே ஆகும் களத்திர பாவகம் நல்ல நிலையில் இருப்பதால் உறுதியாக திருமணம் நடைபெறும். 

இதில் பலம் இழந்த பாவகமானா 2-ம் பாவகத்திற்கு ஆதிபத்தியம் வாங்குவது செவ்வாய் 12-ம் பாவகத்திற்கு ஆதிபத்தியம் வாங்குவது சனி மற்றும் 11-ம் பாவகத்திற்கு ஆதிபத்தியம் வாங்குவது சூரியன் எனவே திருமணத்தை கெடுப்பது செவ்வாய், சனி மற்றும் தற்போது நடக்கும் சந்திர திசை ஏற்று நடத்தும் பாதக ஸ்தான தொடர்பான 11-ம் பாவகத்தின் அதிபதியான சூரியன் இந்த மூன்று கிரகமும் திருமணத்தை தாமதம் செய்கிறது நண்பர்களே. 

இதில் ராகு தோசத்திற்கெல்லாம் இடமே இல்லை. உண்மையை சொல்லவேண்டும் என்றால் இந்த நண்பரின் ஜாதகத்தில் 19 வயது முதல் 37 வயது வரை முழுமையான நன்மையை செய்வது இந்த ராகு மட்டுமே நண்பர் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 6-ம் பாவகம் தொழில் ஸ்தானத்துடன் தொடர்பு அதை ராகு திசை ஏற்று நடத்துவது மிகவும் சிறப்பு. 

தற்போது நடக்கும் சந்திர புத்தி பாதக ஸ்தானத்தின் பலனை களத்திர வழியாக கொடுக்கிறது எனவே திருமணம் தாமதமாகிறது. இந்த நண்பரின் ஜாதகத்தில் கொட்ச்சார கிரகங்களே திருமண விஷயத்தில் மிகவும் மோசமான பலனை செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜோதிடத்தில் பல சூட்ச்சம விஷயங்கள் உள்ளன அதன் மூலமாக நண்பருக்கு எந்த காலகட்டத்தில் திருமணம் நடைபெறும் என்பதை குறித்து கொடுத்தோம். மேலும் எந்தவித பொருள் செலவுகளும் இல்லாத பரிகாரத்தையும் பரிந்துரை செய்து கொடுத்தோம் மேலும் மணப்பெண்ணின் ஜாதகம் எப்படிப் பட்டதாக இருக்க வேண்டும் என்பதையும் சொல்லி அனுப்பினோம் நண்பர் சந்தோசத்துடன் தெளிவடைந்து சென்றார். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

பாதகஸ்தானம் படுத்திய பாடு.

அனைவருக்கும் வணக்கம் மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. இந்த பதிவில் ஒரு நண்பரின் திருமண தாமதத்திற்கு என்ன காரணம் என்பதைப் பற்றி பார்க்கப் போகிறோம். வயது 30 ஆகியும் திருமணம் ஆகவில்லை என்ன காரணம்?


லக்கினம்: மேஷம் 
நட்சத்திரம்: கேட்டை-4 

நண்பர் இதுவரை கடந்து வந்த திசைகளை பார்ப்போம் முதலில் புதன் மற்றும் கேது திசை இவரின் 7 வயது வரை நடந்துள்ளது அந்த சமயத்தில் 2,8ம் பாவகம் பூர்வீகத்துடன் சம்மந்தம் பெற்று நல்ல பலனையே செய்துள்ளது 7 வயது சிறுவராக இருக்கும் போது நண்பர் நல்ல துடிதுடிப்பாகவும் நல்ல புத்திக்கூர்மையுடனும் செயல்பட்டிருப்பார். 

அடுத்து நடந்து முடிந்த சுக்கிர திசை நண்பரின் 27 வயது வரை 4,7ம் பாவகத்தின் பலனையே செய்துள்ளது இந்த சுக்கிர திசை காலத்தில் நண்பரின் படிப்பு மற்றும் நண்பர்களின் சேர்க்கை இவை அனைத்தும் நல்லவிதமாகவே அமைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் திருமணம் நடக்க நல்ல வாய்ப்புகள் இருந்தும் நடக்கவில்லை ஏன்?   

நண்பரின் ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவகம் மற்றும் களத்திர ஸ்தானம் என்னும் 7ம் பாவகம் நல்ல நிலையிலேயே இருக்கிறது. பின்பு ஏன் திருமணம் ஆகவில்லை சற்று உற்று நோக்கினால் புரியும் நண்பர்களே இந்த நண்பரின் ஜாதகத்தில் லாபஸ்தானம் என்னும் 11ம் பாவகம் பாதகஸ்தானதுடன் சம்மந்தம் பெற்று இருக்கிறது. இங்கு 11ம் பாவகம் என்பது மூத்த சகோதரத்தையும் குறிக்கும் அல்லவா இவருடைய அண்ணனுக்கு திருமணம் மிகவும் தாமதமாகவே நடந்துள்ளது அதுவே இவரின் திருமண தாமதத்திற்கு காரணம் ஆகியது. தற்போது இவருக்கு 30 வயது ஆகிவிட்டதால் வரும் சம்மந்தங்களும் நண்பரின் வயதை சுட்டிக்காட்டி தள்ளிக் கொண்டு போகிறது. 

தற்போது நண்பருக்கு சூரிய தசா நடந்து கொண்டிருக்கிறது எனவே இந்த தசா காலத்தில் நண்பருக்கு திருமணம் உறுதி கவலை தேவையில்லை. இவருடைய அண்ணனின் ஜாதகத்தை பார்த்தால் அவருக்கு எதனால் திருமணம் தாமதமாக நடந்தது என்பது புரிய வரும். அந்த நண்பரின் ஜாதகத்தை பார்க்கலாம் வாருங்கள். 


லக்கினம்: கன்னி 
நட்சத்திரம்: உத்திரட்டாதி-2 

இவருடைய அமைப்பில் குடும்பஸ்தானம் என்னும் 2ம் பாவகம் 8ம் பாவகத்துடன் சம்மந்தம் பெற்றுள்ளது இதன் காரணமாக திருமணம் தாமதமாக நடந்தது. பேச்சு திறனையும் அந்த பாவகமே தீர்மானம் செய்கிறது எனவே இவரின் திருமண தாமதத்திற்கு இந்த நண்பரே காரணமாக இருக்க வேண்டும் என்பது தான் விதி.  

கவனிக்க மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய லக்கினங்களுக்கு பாதகஸ்தானம் 11 ஆகும். ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்கினங்களுக்கு பாதகஸ்தானம் 09 ஆகும். மிதுனம், கன்னி, தனுஷ், மீனம் ஆகிய லக்கினங்களுக்கு பாதகஸ்தானம் 07 ஆகும். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

திருமணப் பொருத்தம் பார்க்கலாம் வாங்க


மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. எம்மிடம் ஜோதிட ஆலோசைனைக்கு ஒரு மகனின் தாய் வந்திருந்தார்கள். அவர்கள் தன்னுடைய மகன் மற்றும் மருமகளின் ஜாதகத்தை கொடுத்து “அய்யா என்னுடைய மகனுக்கு திருமணம் முடிந்தது முதல் குடும்ப வாழ்க்கையை இருவரும் சரியான முறையில் வாழவில்லை முதலில் ஒரு பெண்குழந்தை பிறந்தவுடனே இறந்து விட்டது. என்னுடைய மகனை மருமகள் சரியாக புரிந்து கொள்ளாமல் சண்டை வந்து இறுதியில் என்னுடைய மகன் ஜெயிலில் இருந்து கடுமையான மனவேதனைக்கு தள்ளப்பட்டார். இதற்கு என்ன காரணம். இருவருக்கும் திருமணம் செய்யும்போது பல ஜோதிடர்களிடம் பொருத்தம் பார்த்து அனைத்து பொருத்தமும் இருக்கிறது என்று தெரிந்த பிறகே திருமணம் முடித்து வைத்தோம். தற்போது இருவருக்கும் விவாகரத்து செய்யலாம் என்று முடிவுசெய்துள்ளோம். இதற்கு எல்லாம் என்ன காரணம் திருமணத்திற்கு முன்பு என்னுடைய மகன் நல்ல நிலையில் வெளிநாட்டில் இருந்தார் திருமணம் முடிந்தவுடன் அவரின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விட்டது என்ன செய்வதென்றே புரியவில்லை.” அந்த தாயாருக்கு ஜாதகத்தின் உண்மை நிலையை புரிய வைத்து அனுப்பி வைத்தேன். 

ஜோதிடர்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். மருத்துவர்களிடன் எப்படி தன்னுடைய உடல் பிரச்சனைகளை மறைக்காமல் சொல்லுகிறார்களோ அதைபோன்றே ஜோதிடர்களிடமும் தன்னுடைய குடும்ப விசயங்களையும் சொல்லி சரியான வழிகாட்டுதலை எதிர்பார்க்கின்றனர் ஆகவே சரியான முறையில் கணித்து நன்மை தீமைகளை எடுத்துரைப்பது நம்முடைய கடமை என்று உணர்ந்து செயல்படுவது நல்லது. 

தற்போது அந்த தம்பதியரின் ஜாதகத்தைப் பார்போம் நண்பர்களே. முதலில் இரு ஜாதகத்திற்கும் பொருத்தம் இருக்கிறதா என்று பார்போம். 

மணமகனின் ஜாதகம்: 

இவருடைய ஜாதகத்தில் 2,8 ஆகிய பாவகங்கள் விராய ஸ்த்தானத்துடன் சம்மதம் பெற்று 100% பலம் இழந்த நிலையில் இருக்கிறது. 

கவனிக்க வேண்டியவை:
நண்பர்களே எந்தஒரு ஜாதகத்திலும் பாவக வலிமை என்பதே மிகவும் முக்கியம் பாவகத்தின் வலிமையை வைத்தே பலனை நிர்ணயம் செய்யவேண்டும். பலன் காணும் பாவகம் நல்ல நிலையில் இருக்குமேயானால் அந்த பாவகத்திற்கு அதிபதியான கிரகமும் நண்மைகளை வாரிவழங்கும். 

திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது இருவரின் ஜாதகத்திலும் மிகமுக்கியமாக 5ந்து பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது சிறந்தது ஆகும். 
அது குடும்பம் மற்றும் வருமானத்தை குறிக்கும் 2, புத்திர ஸ்த்தானம் என்னும் 5, களத்திர ஸ்த்தானம் என்னும் 7, ஆயுளை குறிக்கும் 8, கௌரவத்தை குறிக்கும் 10 ஆகிய பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது சிறந்தது ஆகும். 

அனைத்து ஜோதிடர்களும் களத்திர ஸ்த்தானம் நல்லநிலையில் இருந்தாலே போதும் என்று நினைப்பது தவறாகும். 7ம்‌ பாவகம் என்பது கணவன் மனைவியின் அன்யோனியத்தை குறிக்கும் ஆனால் 2ம் பாவகமே மிகவும் முக்கியம் கணவன் மனைவி குடும்பம் நடத்தும் விதத்தை எடுத்து காட்டுவது இந்த 2ம் பாவகம் ஆகும். 

இந்த 5ந்து பாவகத்திலும் மிக முக்கியம் 2,5,8 ஆகிய பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பது மிகவும் முக்கியம் ஆகும். 

இந்த மணமகனின் ஜாதகத்தில் 2,8 ஆகிய பாவகங்கள் 100% பலம் இழந்து விட்டது. எனவே மணமகளின் ஜாதகத்திலாவது இந்த பாவகங்கள் 100% நல்ல நிலையில் இருப்பது மிகவும் முக்கியம். 

மணமகளின் ஜாதகத்தை பார்போம்: 

இவருடைய ஜாதகத்தில் 2,5,8 ஆகிய மூன்று பாவகங்களும் 100% பலம் இழந்தநிலையில் உள்ளது கவனிக்கத் தக்கது. 

இரண்டாம் பாவகம் 100% பாதிக்கப்பட்டதன் காரணமாக தன்னுடைய உடமைகளை பாதுகாக்கும் தன்மை குடும்பம் நடத்தும் விதம் அன்பாக பேசும் தன்மை இவை அனைத்தும் இருவருக்கும் பாதிக்கப் பட்டுள்ளது. 

இவருடைய ஜாதகத்தில் 5ந்தாம் பாவகம் பாதிக்கப்பட்டு குழந்தைக்கு தடையை ஏற்படுத்தியது. 

8ம் பாவகம் பாதிக்கப்பட்டு திடீர் அதிஷ்ட வாய்ப்புக்கு வழியில்லாமலும் நீண்ட ஆயுளையும் கேள்விக்குறியாக்கியது. 

2ம் பாவகம் இருவருடைய ஜாதகத்திலும் 100% பதிக்கப்பட்டுள்ளது மிகவும் தவறாகும் எனவே இருவரின் ஜாதகமும் பொருத்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவதே நல்லது

இருவரின் ஜாதகத்திலும் லக்கினம் நல்லநிலையில் இருப்பது ஒருவகையில் நல்லது இல்லை என்றால் ஒரு உயிர் இழப்பு நிகல்ந்திருக்கும்.

இவற்றையெல்லாம் எடுத்துரைத்து என்னசெய்ய வேண்டும் என்பதையும் அந்த தாயாரிடம் எடுத்துச் சொல்லி அனுப்பிவைத்தேன். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

எனக்கு எப்போது குழந்தை பிறக்கும்?

மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி நண்பர்களே. வேலூரை சேர்ந்த ஒரு நண்பர் “அய்யா எனக்கு திருமணம் முடிந்து இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை என்னுடைய அமைப்பை பார்த்து எனக்கு குழந்த பாக்கியம் இருக்குமா என்று கணித்து சொல்லுங்கள்” என்று அவருடைய ஜாதகத்தை அனுப்பினார். அவரின் மனைவியின் ஜாதகம் மிகவும் சிறப்பாகவே இருந்தது எனவே அவருடைய மனைவியிடம் எந்த குறையும் இல்லை என்பது தான் உண்மை. 

சரி நண்பரின் ஜாதகத்தை பார்ப்போம்: 
லக்கினம்: மிதுனம் 
நட்ச்சத்திரம்: உத்திரட்டாதி-4 

முதலில் நண்பரின் பாவகத்தை அலசுவோம். நண்பரின் லக்கினம்,3,5,6,7,11,12 ஆகிய பாவகங்கள் திரத் தன்மையோடு 60% பலம் இழந்தநிலையில் உள்ளது 8ம் பாவகம் 30% பலம் இழந்தநிலையில் உள்ளது. 

2,4 ஆகிய பாவகங்கள் 100% நல்ல நிலையில் உள்ளது. 9,10 ஆகிய பாவகங்கள் 60% திரத் தன்மையில் நல்ல நிலையில் இருப்பது மிகவும் சிறப்பு. 
5,7,12 ஆகிய பாவகங்கள் பலம் இழந்ததன் காரணமாக திருமணத்தை தாமதம் செய்தது. இருப்பினும் 2ம் பாவகம் 100% நல்லநிலையில் இருந்து திருமணம் என்னும் சுப நிகல்வை ஏற்படுத்தி கொடுத்தது.  

நண்பர் கடந்து வந்த திசைகளைப் பார்ப்போம் நண்பர் 2 வயது வரை சனி திசையில் பயனித்துள்ளார். சனி 9ம் வீட்டு பலனை மட்டுமே செய்திருக்கிறது. 9ம் பாவகம் 60% நல்ல நிலையில் உள்ளது. எனவே 2வயது வரை சிறப்பான வளச்சியை கொடுத்திருக்கும். 

புதன் திசை 19 வயது வரை 9ம் பாவகப் பலனை மட்டுமே செய்திருக்கிறது. எனவே புதன் திசையில் நல்ல படிப்பை கொடுத்திருக்கிறது. 

கேது திசை 26 வயது வரை 2,4 ஆகிய பாவகத்தின் பலனை மட்டுமே செய்திருக்கிறது 2,4ம் பாவகம் 100% நல்ல நிலையில் உள்ளது. எனவே கேது திசையும் நல்ல மேற்படிப்பு மற்றும் சுகபோக வாழ்வை அனுபவிக்கும் நிலையை கொடுத்திருக்கும். இந்த திசையில் இறுதி காலகட்டத்தில் திருமணப் பேச்சை குடும்பத்தில் ஏற்படுத்தி இருக்கும். 

சுக்கிர திசையும் 2,4 பாவாகப் பலனை மட்டுமே செய்வதால் சுக்கிர திசையில் திருமணம் நடைபெற்றது. 

கவனிக்க தக்கது சந்திரன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களின் திசை புத்தி அந்தரம் சூச்சம காலங்களில் ஜாதகருக்கு கடினமாகவே இருக்கும். 

தற்போது சுக்கிர திசை நடக்கிறது 2,4ம் வீட்டுப் பலன் நடந்தாலும் செவ்வாய் புத்தி 3,6,12 மற்றும் 1,5,7,11 ஆகிய பாவகத்தின் பலனை செய்கிறது எனவே செவ்வாய் புத்தி சரியில்லை என்பது  தெரிகிறது. மேலும் 5ம் பாவகம் பலம் இழந்த நிலையில் இருப்பதும் அந்த வீட்டுப் பலனை செவ்வாய் எடுத்து செய்வதும் குழந்தை பாக்கியம் இந்த காலகட்டத்தில் இல்லை என்பது தெரியவருகிறது. செவ்வாய் புத்தி 24.11.2015 வரை நடக்கிறது. 

அடுத்து ராகு புத்தியில் 9ம் வீட்டு பலன் நடக்கவிருக்கிறது 9ம் வீடு 60% நல்ல நிலையில் இருந்து அதன் அதிபதி சூரியனாக இருக்கிறது எனவே ராகு புத்தியில் குழந்தை பிறக்கும் இதுவே உண்மை நிலை. 

நண்பர்களே இவருடைய ஜாதகத்தில் குரு, சந்திரன் நல்ல நிலையில் இருக்கின்றனர் எனவே குழந்த பாக்கியம் உண்டு இருப்பினும் 5 மற்றும் 3ம் பாவகம் பலம் இழந்து 5க்கு சனி ஆதிபதியாகவும் 3க்கு செவ்வாய் அதிபதியாகவும் இருப்பதே குழந்தை தாமதத்திற்கு காரணம் எனவே இந்த ஜாதகத்தின் உண்மைநிலையை புரிந்து கொண்டு மனதை பக்குவப் படுத்திக்கொள்வது நல்லது. 

பரிகாரம்: 
பொதுவாக நான் பரிகாரத்தை பரிந்துரை செய்வது இல்லை. இருப்பினும் நான் பார்த்து வியந்து போன ஒரு தெய்வம் கீழாத்தூர் நாடியம்மன். இந்த அம்மன் சக்கி என்பது ஜாதகத்தின் நிலையையே தலைகீலாக புரட்டிவிடும். எனவே நண்பர் இந்த கோவிலுக்கு சென்று மனதில் உள்ள குறைகளை அம்மன் இடத்தில் சொல்லி விட்டு சென்றால் ஒரு மாத காலத்திற்குள் பலன் கண்கூடாகத் தெரியும். 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!