திருமண தாமதத்திற்கு மற்றும் தடைக்கு என்ன காரணம்?


வாசகர்கள் அனைவரையும் மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்சி,

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம் ஒன்று திருமணத்திற்கு முன் வாழ்ந்த வாழ்க்கை திருமணத்திற்கு பின்பு வாழும் வாழ்க்கை. ஆக இங்கு திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதை மறுக்க முடியாது. மனைவி என்பவள் மற்றொரு தாய் என்பதை முதலில் அனைவரும் மனதில் நிறுத்த வேண்டும். தாயிக்குப் பிறகு தாரம் தான் நம்முடைய அசைக்கமுடியாத அன்பு சொத்து.


ஒருவர் திருமணத்திற்கு முன்பு தன்னுடைய தொழிலில் கொடிகட்டி பறந்திருப்பார் திருமணத்திற்கு பிறகு அந்தக் கோடி பாதி கம்பத்தில் பறக்கும். அதற்கு மாறாக ஒருவர் திருமணத்திற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம் என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார் ஆனால் திருமணம் ஆன ஒரு மாதத்தில் அவரின் அதிஷ்ட வாழ்க்கை ஆரம்பம் ஆகும். எனவே தான் ஒரு மனிதனுக்கு தன்னுடைய சந்ததிகளை விருத்தி செய்யவும், தன்னுடைய வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளவும், முடிவெடுக்க முடியாத நிலைகளில் மந்திரியை போல் பலவித நுணுக்கமான யுக்திகளை சொல்லிக்கொடுத்து சமுதாயத்தில் தலைசிறந்த மனிதனாக மற்றும் வல்லமை மனைவிமார்களுக்கு (பெண்களுக்கு) உண்டு.
சரி இனி நம்முடைய ஆய்வுக்கு வருவும். திருமணம் என்கிற ஒரு இனிமையான நன்னாள் எதர்க்காக ஒருசிலருக்கு காலம் கடந்து நடக்கிறது. மேலும் நடக்காமலே போவதற்கு என்ன காரணம். செவ்வாய் தோஷம் காரணமா. அஸ்ட்ரோ ராஜ் ஒன்றை மிகத் தெளிவாக பதிவுசெய்கிறது தோஷம் என்கிற ஒன்று கிடையவே கிடையது. பல ஜோதிடர்கள் இந்த தோஷம் இருக்கிறது அந்த தோஷம் இருக்கிறது, இந்தப் பெண்ணை திருமணம் செய்தால் மாமியாருக்கும் மாமனாருக்கும் ஆகாது மேலும் குடும்பம் செலுமையடையது என்று சொல்லி பல ஆண் மற்றும் பெண்களின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள். அதற்கான பலனையும் அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.

ஏன் திருமணத்தில் இவ்வளவும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. நிச்சயமாக அவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு களத்திரத்தை குறிக்கும் பாவாகம் மற்றும் குடும்ப வாழ்க்கையை குறிக்கும் பாவாகம் இவைகள் மற்றும் இறையருளின் கணக்கிற்கு இதே இரண்டு பாவகங்கள் கடுமையா பாதிக்கும் போது திருமணம் நடக்காமலேயே போகிறது மற்றும் இவைகளில் எதாவது ஒன்று அல்லது இரண்டு பாதிக்கப்படும் போது திருமணம் காலதாமதம் ஆகிறது என்பதே எதார்த்தமான உண்மை.

30 வயதாகியும் திருமணம் ஏன் நடக்கவில்லை கீழ்காணும் இந்த ஜாதகத்தை ஆராய்வோம் வாருங்கள்: 


லக்கினம்: மேஷம்
நட்சத்திரம்: ரோகிணி 1-ம் பாதம்


இந்த ஜாதகரின் லக்கினம் பதிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் களத்திர பாவாகம் உபயத்துடன் சம்மந்தம் பெற்றுள்ளது எனவே தன்னுடைய திருமணம் தாமதமாக தானே காரணமாகும் சூழலை ஏற்படுத்திவிட்டது.

ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் எனவே இந்த லக்கினம் பாதிக்கப்படும் போது அதை தலைமையாக வைத்து இயங்குகின்ற மற்ற பாவகங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதன் பயனை அந்த ஜாதகர் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை மற்றும் காலம் கடந்து பயன்படுத்திக் கொள்ளும் நிலையை ஒவ்வொருவரின் சுய ஜாதக லக்கினம் இறையருளின் கணக்கிற்கு எந்த பவாகாத் தன்மையுடன் சம்மந்தம் பெறுகிறது என்பதை வைத்து சரியாக கணிதம் செய்து சொல்லிவிட முடியும் என்பதை அஸ்ட்ரோ ராஜ் பதிவுசெய்கிறது.

இந்த ஜாதகம் இறையருளின் கணக்கிற்கு உரிய ஜாதக அமைப்பை பெற்றுள்ளதால் இவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த ஜாதகரின் லக்கினம் மறைவு ஸ்தானத்துடன் சம்மந்தம் பெறுவதால் இவரின் சிந்தனையைக் கொண்டு எடுக்கும் முடிவுகளே இவருக்கு பாதகமாக மாறும் நிலை மற்றும் அந்த செயல்பாட்டின் முடிவுகள் காலதாமத்ததிற்கு பிறகே பலனைக் கொடுக்கும் அதற்குள் ஜாதகரின் மனதை படுத்தி எடுத்துவிடும். இந்த ஜாதகரின் களத்திர பாவாகம் உபயத்துடன் சம்மந்தம் பெறுகிறது இதன் காரணமாக திருமணம் தாமதமாக இவரின் அணுகுமுறையே காரணம் என்பது தெரிய வருகிறது.

மேலும் இவரின் குடும்ப பாவகம் நல்ல நிலையில் இருப்பது இவருக்கு “போனஸ் பாய்ண்ட்” எனவே இவரின் வாழ்வில் திருமணம் உறுதி என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த பாவகம் குடும்ப உறுப்பினரையும் குறிப்பதால் ஜாதகர் தன்னுடைய திருமண விஷயத்தில் குடும்பதில் உள்ள பெரியோர்களின் முடிவுகளுக்கு மதிப்பளித்தல் மிக முக்கியம் ஆகும். இவரின் களத்திர பாவகம் இளைய சகோதர் சகோதரிகளின் தன்மையுடன் சம்மந்தம் பெறுவதால் தன் தம்பி தங்கையின் திருமண ஆலோசனைப்படி நடந்தாலோ அல்லது அவர்களால் ஒரு திருமண சம்மந்தங்கள் வந்தாலோ அதனை பயன்படுத்துவது சிறந்தது ஆகும்.

இது எல்லாம் ஒருபுறம் இருக்க தன்னுடய குழவிருத்தியை பெற்றுத்தரும் என்றென்றும் தன்னுடைய குழத்தைக் காக்கும் குழதெய்வ ஸ்தானம் ஸ்திரத்தன்மையான பாதகத்தில் சம்மந்தம் பெற்று 200% சதவீதன் கெடுபலனையே செய்கிறது என்பதுதான் இந்த ஜாதகாரின் திருமண தாமதத்திற்கு காரணம் மேலும் அதனுடன் ஆயுள் பாவகமும் சம்மந்தம் பெறுவது அவயோக பலனையே நடத்திவிடும் எனவே இந்த ஜாதகர் முதலில் தன்னுடைய குழதேவதையை முறையாக வணங்குவதும் தன்னுடைய எண்ணங்களை பக்குவப் படுத்துதல் திருமணவாழ்விற்கு சரியான படிக்கட்டை அமைத்துதரும்.

தற்போது இவருக்கு நடக்கும் ராகுமகா திசையும் மேற்சொன்ன பாவாகத்துடனேயே சம்மந்தம் பெறுவது திருமணத்தை தாமதமாக்குகிறது என்பது தெரிய வருகிறது இந்த ராகு திசை குழதேவதையின் ஸ்தானதுடன் சம்மந்தம் பெறவில்லை எனவே இந்த ஜாதகர் திருமணவிசயத்தில் தன்னுடைய குடும்ப பெரியோர்களில் கருத்தையும் மூத்த சகோதரத்தின் கருத்தைவிட இளைய சகோதரத்தின் கருத்துக்களை கேட்டு நடத்தலும் தன்னுடைய நல்ல நண்பர்களின் வழிகாட்டுதலை பயன்படுத்திக்கொள்வது சிறந்தது ஆகும்.   

கவனிக்க வேண்டிய விஷயம்:
ஒருவருக்கு திருமணம் தாமதமாகிறது என்றால் நிச்சயமாக அவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு குடும்பம் களத்திரம் தொழில் மற்றும் குழதேவதையை குறிக்கும் ஸ்தானங்கள் பாதிக்கப்பட்டு இதே நிலை இறையருளின் பாவகதிலும் இருப்பின் கண்டிப்பாக தாமதம் மற்றும் தடை ஏற்படும் என்பதை அஸ்ட்ரோ ராஜ் பதிவு செய்கிறது. இங்கு தோசங்களுக்கு எல்லாம் இடம் இல்லை. “முயல் பிடிக்கும் மூஞ்சியை பார்த்தால் தெரியும்” என்பதைப் போல் சுய ஜாதகத்தில் பாவகம் பெரும் வலிமையையும் சம்மந்தம் பெரும் தன்மையையும் கணிதம் செய்தால் தெரிந்துவிடும் என்பது தான் உண்மை.

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!