திருமண தாமதத்திற்கு மற்றும் தடைக்கு என்ன காரணம்?


வாசகர்கள் அனைவரையும் மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்சி,

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம் ஒன்று திருமணத்திற்கு முன் வாழ்ந்த வாழ்க்கை திருமணத்திற்கு பின்பு வாழும் வாழ்க்கை. ஆக இங்கு திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது என்று சொன்னால் அதை மறுக்க முடியாது. மனைவி என்பவள் மற்றொரு தாய் என்பதை முதலில் அனைவரும் மனதில் நிறுத்த வேண்டும். தாயிக்குப் பிறகு தாரம் தான் நம்முடைய அசைக்கமுடியாத அன்பு சொத்து.


ஒருவர் திருமணத்திற்கு முன்பு தன்னுடைய தொழிலில் கொடிகட்டி பறந்திருப்பார் திருமணத்திற்கு பிறகு அந்தக் கோடி பாதி கம்பத்தில் பறக்கும். அதற்கு மாறாக ஒருவர் திருமணத்திற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கையை எப்படி வாழப்போகிறோம் என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருப்பார் ஆனால் திருமணம் ஆன ஒரு மாதத்தில் அவரின் அதிஷ்ட வாழ்க்கை ஆரம்பம் ஆகும். எனவே தான் ஒரு மனிதனுக்கு தன்னுடைய சந்ததிகளை விருத்தி செய்யவும், தன்னுடைய வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளவும், முடிவெடுக்க முடியாத நிலைகளில் மந்திரியை போல் பலவித நுணுக்கமான யுக்திகளை சொல்லிக்கொடுத்து சமுதாயத்தில் தலைசிறந்த மனிதனாக மற்றும் வல்லமை மனைவிமார்களுக்கு (பெண்களுக்கு) உண்டு.
சரி இனி நம்முடைய ஆய்வுக்கு வருவும். திருமணம் என்கிற ஒரு இனிமையான நன்னாள் எதர்க்காக ஒருசிலருக்கு காலம் கடந்து நடக்கிறது. மேலும் நடக்காமலே போவதற்கு என்ன காரணம். செவ்வாய் தோஷம் காரணமா. அஸ்ட்ரோ ராஜ் ஒன்றை மிகத் தெளிவாக பதிவுசெய்கிறது தோஷம் என்கிற ஒன்று கிடையவே கிடையது. பல ஜோதிடர்கள் இந்த தோஷம் இருக்கிறது அந்த தோஷம் இருக்கிறது, இந்தப் பெண்ணை திருமணம் செய்தால் மாமியாருக்கும் மாமனாருக்கும் ஆகாது மேலும் குடும்பம் செலுமையடையது என்று சொல்லி பல ஆண் மற்றும் பெண்களின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறார்கள். அதற்கான பலனையும் அவர்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.

ஏன் திருமணத்தில் இவ்வளவும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. நிச்சயமாக அவர்களின் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு களத்திரத்தை குறிக்கும் பாவாகம் மற்றும் குடும்ப வாழ்க்கையை குறிக்கும் பாவாகம் இவைகள் மற்றும் இறையருளின் கணக்கிற்கு இதே இரண்டு பாவகங்கள் கடுமையா பாதிக்கும் போது திருமணம் நடக்காமலேயே போகிறது மற்றும் இவைகளில் எதாவது ஒன்று அல்லது இரண்டு பாதிக்கப்படும் போது திருமணம் காலதாமதம் ஆகிறது என்பதே எதார்த்தமான உண்மை.

30 வயதாகியும் திருமணம் ஏன் நடக்கவில்லை கீழ்காணும் இந்த ஜாதகத்தை ஆராய்வோம் வாருங்கள்: 


லக்கினம்: மேஷம்
நட்சத்திரம்: ரோகிணி 1-ம் பாதம்


இந்த ஜாதகரின் லக்கினம் பதிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் களத்திர பாவாகம் உபயத்துடன் சம்மந்தம் பெற்றுள்ளது எனவே தன்னுடைய திருமணம் தாமதமாக தானே காரணமாகும் சூழலை ஏற்படுத்திவிட்டது.

ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்கினம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் எனவே இந்த லக்கினம் பாதிக்கப்படும் போது அதை தலைமையாக வைத்து இயங்குகின்ற மற்ற பாவகங்கள் எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதன் பயனை அந்த ஜாதகர் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை மற்றும் காலம் கடந்து பயன்படுத்திக் கொள்ளும் நிலையை ஒவ்வொருவரின் சுய ஜாதக லக்கினம் இறையருளின் கணக்கிற்கு எந்த பவாகாத் தன்மையுடன் சம்மந்தம் பெறுகிறது என்பதை வைத்து சரியாக கணிதம் செய்து சொல்லிவிட முடியும் என்பதை அஸ்ட்ரோ ராஜ் பதிவுசெய்கிறது.

இந்த ஜாதகம் இறையருளின் கணக்கிற்கு உரிய ஜாதக அமைப்பை பெற்றுள்ளதால் இவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த ஜாதகரின் லக்கினம் மறைவு ஸ்தானத்துடன் சம்மந்தம் பெறுவதால் இவரின் சிந்தனையைக் கொண்டு எடுக்கும் முடிவுகளே இவருக்கு பாதகமாக மாறும் நிலை மற்றும் அந்த செயல்பாட்டின் முடிவுகள் காலதாமத்ததிற்கு பிறகே பலனைக் கொடுக்கும் அதற்குள் ஜாதகரின் மனதை படுத்தி எடுத்துவிடும். இந்த ஜாதகரின் களத்திர பாவாகம் உபயத்துடன் சம்மந்தம் பெறுகிறது இதன் காரணமாக திருமணம் தாமதமாக இவரின் அணுகுமுறையே காரணம் என்பது தெரிய வருகிறது.

மேலும் இவரின் குடும்ப பாவகம் நல்ல நிலையில் இருப்பது இவருக்கு “போனஸ் பாய்ண்ட்” எனவே இவரின் வாழ்வில் திருமணம் உறுதி என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த பாவகம் குடும்ப உறுப்பினரையும் குறிப்பதால் ஜாதகர் தன்னுடைய திருமண விஷயத்தில் குடும்பதில் உள்ள பெரியோர்களின் முடிவுகளுக்கு மதிப்பளித்தல் மிக முக்கியம் ஆகும். இவரின் களத்திர பாவகம் இளைய சகோதர் சகோதரிகளின் தன்மையுடன் சம்மந்தம் பெறுவதால் தன் தம்பி தங்கையின் திருமண ஆலோசனைப்படி நடந்தாலோ அல்லது அவர்களால் ஒரு திருமண சம்மந்தங்கள் வந்தாலோ அதனை பயன்படுத்துவது சிறந்தது ஆகும்.

இது எல்லாம் ஒருபுறம் இருக்க தன்னுடய குழவிருத்தியை பெற்றுத்தரும் என்றென்றும் தன்னுடைய குழத்தைக் காக்கும் குழதெய்வ ஸ்தானம் ஸ்திரத்தன்மையான பாதகத்தில் சம்மந்தம் பெற்று 200% சதவீதன் கெடுபலனையே செய்கிறது என்பதுதான் இந்த ஜாதகாரின் திருமண தாமதத்திற்கு காரணம் மேலும் அதனுடன் ஆயுள் பாவகமும் சம்மந்தம் பெறுவது அவயோக பலனையே நடத்திவிடும் எனவே இந்த ஜாதகர் முதலில் தன்னுடைய குழதேவதையை முறையாக வணங்குவதும் தன்னுடைய எண்ணங்களை பக்குவப் படுத்துதல் திருமணவாழ்விற்கு சரியான படிக்கட்டை அமைத்துதரும்.

தற்போது இவருக்கு நடக்கும் ராகுமகா திசையும் மேற்சொன்ன பாவாகத்துடனேயே சம்மந்தம் பெறுவது திருமணத்தை தாமதமாக்குகிறது என்பது தெரிய வருகிறது இந்த ராகு திசை குழதேவதையின் ஸ்தானதுடன் சம்மந்தம் பெறவில்லை எனவே இந்த ஜாதகர் திருமணவிசயத்தில் தன்னுடைய குடும்ப பெரியோர்களில் கருத்தையும் மூத்த சகோதரத்தின் கருத்தைவிட இளைய சகோதரத்தின் கருத்துக்களை கேட்டு நடத்தலும் தன்னுடைய நல்ல நண்பர்களின் வழிகாட்டுதலை பயன்படுத்திக்கொள்வது சிறந்தது ஆகும்.   

கவனிக்க வேண்டிய விஷயம்:
ஒருவருக்கு திருமணம் தாமதமாகிறது என்றால் நிச்சயமாக அவரின் சுய ஜாதகத்தில் லக்கினத்திற்கு குடும்பம் களத்திரம் தொழில் மற்றும் குழதேவதையை குறிக்கும் ஸ்தானங்கள் பாதிக்கப்பட்டு இதே நிலை இறையருளின் பாவகதிலும் இருப்பின் கண்டிப்பாக தாமதம் மற்றும் தடை ஏற்படும் என்பதை அஸ்ட்ரோ ராஜ் பதிவு செய்கிறது. இங்கு தோசங்களுக்கு எல்லாம் இடம் இல்லை. “முயல் பிடிக்கும் மூஞ்சியை பார்த்தால் தெரியும்” என்பதைப் போல் சுய ஜாதகத்தில் பாவகம் பெரும் வலிமையையும் சம்மந்தம் பெரும் தன்மையையும் கணிதம் செய்தால் தெரிந்துவிடும் என்பது தான் உண்மை.

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

நவக்கிரகங்கள் பாவகத்திற்கு பெற்றுத்தரும் வலிமை மற்றும் வலிமையற்ற நிலை.

வாசகர்கள் அனைவரையும் மற்றுமொரு பதிவில் சந்திப்பதில் மகிழ்சி, 
              நவக்கிரகங்கள் 12 பாவகத்திற்கு பெற்றுத்தரும் வலிமை என்ன? மற்றும் வலிமையற்ற நிலை என்ன? அதாவது ஒவ்வொரு ஜாதகருக்கும் 360 பாகைதான் இது இறையருளின் கணக்கிற்கு 12 பாவகங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாவகத்திற்கும் நவக்கிரகங்கள் பெற்றுத்தரும் வலிமை மற்றும் வலிமையற்ற நிலை என்ன? என்பதை ஆராய்ச்சி செய்யும் பதிவுதான் இது என்பதை AstroRaj தெரிவித்துக் கொள்கிறது. 

ஆராய்ச்சிக்குள் போவதற்கு முன்பாக ஒருசில வார்த்தைகள்: ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டு கணிதம் செய்யும் முறை என்பது அந்த ஜாதகத்தின் உடல்,உயிராக்கிய லக்கினத்தை முதல் பாவகமாக நாம் பாவித்தோம் என்றால் அதன் புலங்களாகிய மீதி 11 பாவகத்தையும் சறியாக கணிதம் செய்துவிட முடியும். மேலும் ஒரு கிரகம் ஒரு பாவகத்தில் உச்சம் பெற்றுள்ளதா, நீசம் பெற்றுள்ளதா அல்லது பகைத்தன்மையை பெற்றுள்ளதா என்பதல்ல முக்கியம். அந்த பாவகத்திற்கு ஒரு கிரகம் எந்த வகையான வலிமையை பெற்றுத்தருகிறது என்பது தான் மிக முக்கியம். மற்றொன்று முதல் பாவகமாகிய லக்கினம் மற்றும் அதை அடுத்துள்ள பாவகங்கள் இறையருள் வழங்கிய 360 பாகையில் எந்த பாகையில் ஆரம்பம் ஆகிறது என்பதும் முக்கியம். 

இவற்றை கருத்தில் கொண்டு நாம் ஒரு உதாரண ஜாதகத்தை கையில் எடுப்போம் வாருங்கள்:


முதல் பாவகம்: 
இந்த நண்பரின் லக்கினம் சிம்ம லக்கினம். இந்த லக்கினாதிபதியான சூரியன் 5-ம் ஸ்தானத்தில் பள்ளிகொண்டு நண்பரின் லக்கினத்தை வலுவிளக்க செய்ததன் விளைவாக நண்பர் தாய்,தந்தையின் அரவணைப்பில் வளரும் பாக்கியத்தை இளக்கச்செய்து அவரின் இளம்வயது தன்னம்பிக்கையையும் கேள்விக்குறியாகுக்கிறார். எனவே லக்கினம் வலிமை இலக்கிறது.

இரண்டாம் பாவகம்: 
இரண்டாம் பாவகத்தின் அதிபதி புதன் ( இறையருளின் கணக்கிற்கு நான்காம் பாவகம் 240 பாகையில்  முடிகிறது இதில் புதன் 239.85 பாகையில் இருப்பதால் இவர் நான்காம் பாவகத்தில் இருப்பது உறுதியாகிறது ) நான்காம் ஸ்தானத்தில் பள்ளிகொண்டு நண்பரின் இரண்டாம் பாவகத்திற்கு சமமான பலம் பெற்று அதன் விளைவாக நண்பரின் பேச்சாற்றலையும், குடும்பத்திற்கு நல்ல வருமானத்தையும் பெற்றுத்தருகிறார். எனவே இரண்டாம் பாவகம் வலிமை பெறுகிறது.

மூன்றாம் பாவகம்: 
மூன்றாம் பாவகத்தின் அதிபதி சுக்கிரன் ( இறையருளின் கணக்கிற்கு ஐந்தாம் பாவகம் 270 பாகையில்  முடிகிறது இதில் சுக்கிரன் 263.49 பாகையில் இருப்பதால் இவர் ஐந்தாம் பாவகத்தில் இருப்பது உறுதியாகிறது ) ஐந்தாம் ஸ்தானத்தில் பள்ளிகொண்டு நண்பரின் மூன்றாம் பாவகத்திற்கு சமமான பலம் பெற்று அதன் விளைவாக நண்பருக்கு துணிச்சலான தைரியத்தையும், இளைய சகோதர சகோதரிகளை வளிநடத்தும் பக்குவத்தையும், சம்பாதிக்கும் பணத்தை கையாளும் திறனையும் பெற்றுத்தருகிறார். எனவே மூன்றாம் பாவகம் வலிமை பெறுகிறது.

நான்காம் பாவகம்:
நான்காம் பாவகத்தின் அதிபதி செவ்வாய் ( இறையருளின் கணக்கிற்கு ஒன்பதாம் பாவகம் 30 பாகையில்  முடிகிறது இதில் செவ்வாய் 025.02 பாகையில் இருப்பதால் இவர் ஒன்பதாம் பாவகத்தில் இருப்பது உறுதியாகிறது ) ஒன்பதாம் ஸ்தானத்தில் பள்ளிகொண்டு நண்பரின் நான்காம் பாவகத்திற்கு மறைந்துபோய் தாயின் கருத்துக்களை கேட்கமுடியாத நிலையையும், வண்டி, வாகனம் என சுகபோக வாழ்வை கேள்விக்குறியாக்குகிறார். எனவே நான்காம் பாவகம் வலிமையை இலக்கிறது.

ஐந்தாம் பாவகம்:
ஐந்தாம் பாவகத்தின் அதிபதி குரு இவர் பன்னிரெண்டாம் ஸ்தானத்தில் பள்ளிகொண்டு நண்பரின் ஐந்தாம் பாவகத்திற்கு மறைந்துபோய்கிறார் ( இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் குரு உச்சத்தில் இருக்கிறார் இருந்தும் என்ன பயன் என்பதைதான் ) இதன் விளைவாக நண்பரின் குழதெய்வ வழிபாடு பாதிக்கப்பட்டு இருக்கிறது அதன் காரணமாக ஏற்படும் அவயோக பலன்களையும் இவர் சந்திக்க வேண்டிய சூல்நிலையையும் ஏற்படுத்துகிறார். எனவே ஐந்தாம் பாவகம் வலிமையை இலக்கிறது.

ஆறாம் பாவகம்: 
ஆறாம் பாவகத்தின் அதிபதி சனி பகவான் ( இறையருளின் கணக்கிற்கு ஐந்தாம் பாவகம் 270 பாகையில்  முடிகிறது இதில் சனி பகவான் 267.71 பாகையில் இருப்பதால் இவர் ஐந்தாம் பாவகத்தில் இருப்பது உறுதியாகிறது ) ஐந்தாம் ஸ்தானத்தில் பள்ளிகொண்டு நண்பரின் ஆறாம் பாவகத்திற்கு மறைந்துபோய்கிறார் அதன் விளைவாக நண்பரின் உடல்நிலையில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் என்ற நிலையையும் மற்றும் மனதில் ஒருவிதமான பயநிலையையும் ஏற்படுத்துகிறார். எனவே ஆறாம் பாவகம் வலிமையை இலக்கிறது.

ஏழாம் பாவகம்:
ஏழாம் பாவகத்திற்கு அதிபர் சனி பகவான் இவர் ஐந்தாம் ஸ்தானத்தில் பள்ளிகொண்டு நண்பரின் ஏழாம் பாவகத்திற்கு சமமான பலத்தை பெற்றுத்தந்து அதன் விளைவாக நல்ல மனைவி, நண்பர்கள் மற்றும் தொலைதூர பயணங்களில் லாபம் இவையனைத்தையும் 100% பெற்றுத்தருகிறார். எனவே ஏழாம் பாவகம் வலிமை பெறுகிறது.

எட்டாம் பாவகம்:
எட்டாம் பாவகத்தின் அதிபதி குரு இவர் பன்னிரெண்டாம் ஸ்தானத்தில் பள்ளிகொண்டு நண்பரின் எட்டாம் பாவகத்திற்கு கோணபலத்தை பெற்றுத்தந்து 200% மடங்கு எட்டாம் பாவகத்தின் மூலமாக அவயோக பலன்களை அனுபவிக்க செய்துவிடுகிறார். இதன் விளைவாக நண்பருக்கு திடீர் இளப்புகளை தாவிக்க முடியாத சூல்நிலையையும் ஏற்படுத்திவிடுகிறது. எனவே எட்டாம் பாவகம் வலிமையை இலக்கிறது.

ஒன்பதாம் பாவகம்:
ஒன்பதாம் பாவகத்தின் அதிபதி செவ்வாய் இவர் ஒன்பதாம் ஸ்தானத்தில் பள்ளிகொண்டு நண்பரின் ஒன்பதாம் பாவகத்திற்கு கோணபலத்தை ஏற்படுத்தி 100% மடங்கு ஒன்பதாம் பாவகத்தில் இருந்து அவயோகப் பலனை பெற்றுத்தருகிறார். இதன் விளைவாக பெரியோர்களிடம் அவப்பெயரை சம்பாதிக்கும் நிலையையும், பாக்கியம் என்பதையும் இழக்கும் நிலை மேலும் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்காதா நிலை ஏற்படுகிறது. எனவே ஒன்பதாம் பாவகம் வலிமையை இலக்கிறது.

பத்தாம் பாவகம்:
பத்தாம் பாவகத்தின் அதிபதி சுக்கிரன் இவர் ஐந்தாம் ஸ்தானத்தில் பள்ளிகொண்டு நண்பரின் பத்தாம் பாவகத்திற்கு மறைவுபலத்தை பெற்றுதந்து அதன் விளைவாக நண்பருக்கு அவர் பெற்ற கல்வியில் இருந்து நல்ல வருமானத்தையும், நண்பர் கூட்டுதொழில் செய்தோ அல்லது தன்னுடைய அறிவை பயன்படுத்தி செய்யும் தொழிலில் நல்ல வருமானத்தையும் மேலும் நண்பருக்கு நல்ல கௌரவத்தையும் சமூதாயத்தில் பெற்றுத்தருகிறார். எனவே பத்தாம் பாவகம் வலிமை பெறுகிறது.

பதினொன்றாம் பாவகம்:
பதினொன்றாம் பாவகத்தின் அதிபதி புதன் இவர் நான்காம் ஸ்தானத்தில் பள்ளிகொண்டு நண்பரின் பதினொன்றாம் பாவகத்திற்கு மறைவுபலம் பெற்று அதன் விளைவாக நண்பருக்கு  ஏற்படும் அதிஷ்டத்தையும் மேலும் இலாபத்தையும் மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவை இலக்கும் சூலலையும் ஏற்படுத்துகிறார் மேலும் தன்னுடய மனைவியிடம் இருந்து அதிஷ்டத்தை எதிர்பார்க முடியாத நிலை மற்றும் கால்நடைகள் மூலமாக இலாபத்தை எதிர்பார்க முடியாத நிலை தன்னுடைய ஜீவனத்தில் அபரிவிதமான இலாபத்தை எதிர்பார்க்க முடியாத நிலையையும் ஏற்படுத்துகிறார். எனவே பதினொன்றாம் பாவகம் வலிமை இலக்கிறது.

பன்னிரெண்டாம் பாவகம்:
பன்னிரெண்டாம் பாவகத்திற்கு அதிபர் சந்திரன் இவர் தேய்பிறை சந்திரனாக வருகிறார். இவர் லக்கினத்தில் பள்ளிகொண்டு பன்னிரெண்டாம் பாவகத்திற்கு மறைவுபலத்தை தந்து அதன் விளைவாக ஜாதகருக்கு எதிலும் திருப்தி ஏற்படாத மனநிலையையும், மனதை ஒருநிலைபடுத்த முடியாமால் வாய்க்கு வந்தபடி பேசி குடும்பத்தார் மற்றும் மனைவியிடையே கருத்து வேறுபடை ஏற்படுத்தி மேலும் பெரிய அளவிளான முதலீடுகள் எதுவும் செய்யமுடியாத நிலையையும் ஏற்படுத்தி அழகுபார்த்துவிடுவார்.

முக்கியமாக கவனிக்க வேண்டியவைகள்: இதில் நிழல் கிரகம் என்று சொல்லக்கூடிய ராகு, கேது இவற்றையும் மேலும் கடுமையாக பதிக்கப்பட்டுள்ள பாவகத்திற்கு எந்தெந்த கிரகங்களின் பார்வை படுகிறது என்பதையும் அந்த இடத்தில் எந்த கிரகம் இருக்கிறது என்பதையும் பார்த்துவிட்டு தற்போது நடக்கின்ற திசை, புத்தி, அந்தர, சுச்சமங்கள் எந்த பாவகத்தின் பலனை எடுத்து நடத்துகிறது என்பதையும் அந்த பாவகங்களுக்கு கொட்சார கிரகங்களின் சஞ்சாரம் எப்படிபட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற விசயத்தையும் AstroRaj பதிவு செய்கிறது. 

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

10-ம் (ஜீவனம், தொழில்) பாவகம் பற்றி ஒரு பார்வை

அனைவருக்கும் வணக்கம்,
10-ம் பாவகம் பற்றி ஒரு சிறிய விளக்கம் அனைவருக்குமே புரியாத புதிராக இருப்பது இந்த 10-ம் பாவகம் தான் ஏன் புதிராக இருக்கிறது ஒரு சிறிய விளக்கம் ஒரு பெரிய குடும்பம் இருந்தது அந்த குடும்பத்தில் உள்ள தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பணம் அதிக அளவில் இருந்ததால் அவர்களின் மகனைக்கு நல்ல கல்வி அதன் பயனாக நுட்பமான அறிவுத்திரன் அனைத்தும் கிடைத்தது. அவன் வளர்ந்து பெரியவனான பிறகு நாம் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதன் காரணமாக தன் தாய், தந்தையிடம் சொல்லுகிறார் உடனே அந்த பெற்றோர் மகனுக்குப்  பொறுப்பு வந்துவிட்டதை நினைத்து மனதிற்குள் மகிழ்சி அடைந்தனர்.

பிறகு தன் மகனிடம் “தம்பி நம்முடைய குடும்பத்திற்கு அதிக அளவில் விவசாய நிலங்கள் உள்ளன அதை நீ கவனித்துக்கொள் என்றனர் சரி என்று ஒத்துக்கொள்கிறார்” ஆனால் அவரால் அதில் ஏற்பட்ட நஷ்டத்தையும் அவர் மனம் அடைந்த வேதனையையும் வெளியே சொல்ல முடியவில்லை. பிறகு தன் தன் தந்தையிடம் சென்று சொல்கிறார் உடனே தந்தை நம்முடைய பூர்வீகத்தில் வேறு தொழில் செய்கிறாயா என்று கேட்கிறார் மகன் சரி என்கிறார் உடனே தன்னுடைய பூர்வீகத்தில் ஒரு பெரிய கடையை கட்டினர் தன்னுடைய நுணுக்கமான அறிவை பயன்படுத்தி உழைக்கிறார் அதிலும் அவருக்கு ஏற்படும் இழப்புகளையும் மனவிரயத்தையும் தவிர்க்க முடியவில்லை. பிறகு தன் தந்தையிடம் சென்று மறுபடியும் சொல்கிறார் தந்தை மகனின் வேதனை கண்டு வருந்துகிறார்.

தன் தந்தை படும் வேதனையை உணர்ந்த மகன் அப்பா நீங்கள் வருந்த வேண்டாம் நான் ஒரு பெரிய நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்ல போகிறேன் என்கிறார் உடனே தந்தை நம்மிடம் நிலங்கள், பணம் இருந்தும் நீ வேலைக்கு போகவேண்டுமா என்கிறார் இல்லை அப்பா நான் போகிறேன் என்று ஒரு பெரிய நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று தன்னுடைய நுட்பமான அறிவையும் உடல் உழைப்பையும் அந்த நிறுவனத்திற்கு செலவு செய்கிறார் விளைவு அவர் எதிர்பார்க்கா வண்ணம் அதிகப்படியான வருமானம் வருவதை எண்ணி அவரும் அவருடைய பெற்றோரும் மகிழ்சி அடைந்தனர்.

கவனிக்க: நல்ல அறிவு, நல்ல குடும்பம், அதிகப்படியான பணம் இவை அனைத்தும் இருந்தும் வேறு ஒருவருக்கு உழைத்து கொடுத்துதான் லாபம் அடைய முடியும் என்று அவருடைய ஜீவன ஸ்தானமான 10-ம் பாவகத்தில் இருந்தால் அதை ஒன்றுமே செய்ய முடியாது அது காட்டும் ஜீவன வழியில் இறங்கிவிடுவதே சிறந்தது ஆகும். வேறுவழியில் இறங்கினால் பொருள் நஷ்டமும், மனவிராயமும் தான் மிஞ்சும்.

இது தெரியாமல் 10-ம் இடத்தில் இந்த கிரகம் இருக்கிறது அந்த கிரகம் இருக்கிறது எனவே அந்த கிரகத்திற்கு உரிய தொழிலை செய்தால் நல்லது என்று சொல்வது தவறான கணிதம் ஆகும். ஒரு பாவகம் கிரகத்தின் கதிர்களை எந்த அளவு கிரகித்துக் கொண்டு அந்த ஜாதகனுக்கு தன்னுடை திசா, புக்தி, அந்தர, சூட்சம காலங்களில் பலனை வழங்குகிறது என்பது தான் இங்கு முக்கியம் என்பதை இத்தளம் பதிவுசெய்கிறது. 

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொள்வோம்: 


இவருடைய எதிர்கால அறிக்கையில் (ஜாதகம்) நாம் எடுத்துக்கொள்வது ஜீவனஸ்த்தானம் எனப்படும் 10-ம் பாவகத்தை மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. முதலில் ஜீவனஸ்த்தானம் எந்த பாவகத்தோடு தொடர்பை ஏற்படுத்தி உள்ளது, ஜீவனஸ்த்தானத்தோடு எந்தெந்த பாவகம் தொடர்பு வைத்துள்ளது என்பதை பார்ப்போம். தன, வாக்குஸ்த்தானம்(2) ஜீவனஸ்த்தானத்துடன்(10) தொடர்பை பெற்றுள்ளது. புத்திரம் மற்றும் நுட்பமான அறிவுஸ்த்தானம்(5) ஜீவனஸ்த்தானதுடன்(10) தொடர்பை பெற்றுள்ளது. ஜீவனஸ்த்தானம்(10) விரயஸ்த்தானதுடன்(12) தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.

தன, வாக்குஸ்த்தானம்(2) ஜீவனஸ்த்தானத்துடன்(10) தொடர்பை ஏற்படுத்தி ஸ்த்திரமான நன்மைகளை வாழ்நாள் முழுவதும் நிலைத்து செய்கிறது. ஆனால் இறையருளின் கணக்கிற்கு இந்த ஜீவனஸ்த்தானம் மர்மஸ்த்தானமாக வருகிறது. எனவே இந்த ஜாதகர் தன்னுடய குடும்பத்தின் வழியாக தொழில் தொடங்கினாலோ அல்லது தன்னுடை பேச்சாற்றளை வைத்து தொழில் தொடங்கினாலோ, கல்வி அறிவை வைத்து தொழில் தொடங்கினாலோ திடீர் இழப்பை ஏற்படுத்தி மனதை வேதனைக்கு தள்ளிவிடும் என்பது தெரிய வருகிறது.

புத்திரம் மற்றும் நுட்பமான அறிவுஸ்த்தானம்(5) ஜீவனஸ்த்தானதுடன்(10) தொடர்பை ஏற்படுத்தி பூர்வீகத்தில் இருந்து கிடைக்கும் நன்மைகளை நிலைத்து நின்று செய்கிறது. தன்னுடை தாய் வீட்டாரின் வழிகாட்டுதலும் தன்னுடைய குழதெய்வத்தின் அருளும் பரிபூரணமாக கிடைக்கிறது. இது ஒருபுறம் இருக்க தொழில் விஷயத்திற்கு வரும்போது இறையருளின் கணக்கிற்கு இந்த ஜீவனஸ்த்தானம் மர்மஸ்த்தானமாக வருகிறது திடீர் இலப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இவரின் ஜீவன லாபம் அனைத்தும் இவருக்கு பிறக்கப் போகும் குழந்தை மொத்தமாக அழிக்கும் என்பதை மறைமுகமாக காடுகிறது. இது எதனால் பூர்வீகத்தில் இவர் தொழில் தொடங்கினால் மட்டுமே நிகளும். பிறகு இவர் பூர்வீகத்தில் ஒன்றும் செய்யவே முடியாதா கண்டிப்பாக முடியும் திருமணத்திற்கு பிறகு.

ஜீவனஸ்த்தானம்(10) விரயஸ்த்தானதுடன்(12) தொடர்பை ஏற்படுத்தி இருக்கிறது. இறையருளின் கணக்கிற்கு இந்த விரையஸ்த்தானம் ஜீவனஸ்த்தானமாக வருகிறது. எனவே இவரின் நுட்பமான அறிவு மற்றும் உடல் உழைப்பு அனைத்தையும் விரயம் செய்தால் அதிகமான ஜீவனம் கிடைக்கும் என்பது தெரிய வருகிறது. மேலும் இவர் பணிபுரியும் இடத்தில் பலவகையான சகசச்செயல்களை செய்து பலரின் பாராட்டை பெருவதுடன் பலரிடம் இருந்து இவர் நுணுக்கமான விசயங்களையும் பெறமுடியும் என்பது தெரிகிறது. மொத்தத்தில் இவர் தன்னுடைய அறிவை ஒரு பெரிய நிறுவனத்திற்கோ அல்லது மத்திய மாநில அரசாங்கத்தின் துறைகளுக்கோ விரயம் செய்து சம்பாதிக்க வேண்டும் அரசாங்க வேலை என்று நான் சொல்ல காரணம் இவரின் ஜீவனஸ்த்தான அதிபர் சூரியாபகவன் வருவதால். இது போன்று பல நுணுக்கமான விஷயங்கள் இருக்கின்றன அதை தெளிவாக கணிதம் செய்து சொல்ல வேண்டும். 

இந்த ஜாதகர் இந்தியன் மிளிட்டரியில் தகவல் மரிமாற்றம் மற்றும் துப்பறியும் பிறிவில் சிறப்பாக பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

ஜோதிடம் பற்றி ஒருசில வார்த்தைகள்


ஜோதிடத்தை நோக்கும் விதம்:
நாம் வசிக்கும் இந்த பூமி சூரியனை மையமாக வைத்து இயங்குகிறது அதன் இயக்கமும் பூமியில் பல மாறுதல்களை செய்கிறது என்பதை நாம் அறிவோம். மேலும் புவிஈர்ப்பு சக்தி கதிரியக்க சக்தி இவை இரண்டும் பூமிக்கு மட்டுமல்ல அனைத்து கிரகங்களுக்கும் மிக அவசியம் என்பதையும் நாம் அறிவோம். நம்முடைய பூமியில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் புவிஈர்ப்பு சக்தியும் பூமியை சுற்றிலும் உள்ள கிரகங்களின் கதிரியக்க சக்தியும் மிக முக்கியத்துவம் வகுக்கிறது. மேலும் இதன் விளைவாக பூமியில் நெருப்பு, நிலம், காற்று, நீர் என்ற நான்கு வேதிவினைகளும் பூமியில் வாழும் மனிதனுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது. எனவே மனிதன் நெருப்பு , நிலம் , காற்று , நீர் , புவிஈர்ப்புவிசை மற்றும் கிரகங்களின் கதிரியக்கம் இவை அனைத்தும் சேர்ந்து தான் பூமியின் 360 டிகிரி கோளத்தை 30 , 30 டிகிரியாக மொத்தம் 12 பாவகமாகப் பிரித்து இந்த 12 பாவகத்திற்குள்ளேயே மனிதன் இயங்குகிறான் என்பது தான் எதார்த்தமான உண்மை.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மேலே சொல்லப்பட்ட அனைத்து காரணிகளும் பூமியில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் பொருந்துமா என்றால் அதில் தான் ஒரு வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் இந்த 12 பாவகத்திற்கு ஆளாகியே ஆக வேண்டும் இதை எவாராலும்  மாற்ற இயலாது இது இயற்கையின் கணிதத் தத்துவம். இதில் மிக முக்கியமான கவனிக்க வேண்டிய  விஷயம் பூமியை சுற்றியுள்ள கிரகங்கள் அனைத்தும் சமமாகத்தான் தன்னுடைய கதிர்களை பூமிக்கு அனுப்புகிறது. எனவே இதில் நல்ல கதிர் என்றோ கெட்ட கதிர் என்றோ அதைபோல் நல்ல கிரகம் கெட்ட கிரகம் என்று எதுவுமே கிடையாது. ஆனால் மனிதன் சுற்றி வரக்கூடிய இந்த 12 பாவகங்களில் ஒவ்வொரு பாவகமும் எப்படி அந்த கதிர்களை கிரகித்து கொள்கிறது - கதிர்களை வாங்கி கொண்டு மனிதனை இயக்குகிறது என்பது தான் இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறது. நம்முடை மூதாதையர்கள் இந்த 12 பாவகங்களின்  வலிமையை கண்டுபிடிக்க மட்டுமே வலிமையை கண்டுபிடிக்க மட்டுமே பல சூத்திரங்க்களை கையாண்டுள்ளனரே தவிர கிரகங்களை அல்ல என்பதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். 

இந்த 12 பாவகங்களுக்கும் பெயர் உண்டு சித்திரையில் ஆரம்பித்து பங்குனியில் முடிக்கின்ற தமிழ் மாதம்தான் அது. சித்திரை என்னும் முதல் பாவகம் சூரியனின் கதிரியக்க சக்தியை அதிகமாக வாங்கிக்கொள்ளும் ஐப்பசி என்னும் 7-ம் பாவகம் சூரியனின் கதிரியக்க சக்தியை குறைவாக  வாங்கிக்கொள்ளும். இதே போல் பூமியை சுற்றியுள்ள அனைத்து கிரங்களின் கதிரியக்க சக்தியை வாங்கிக்கொண்டு மனிதனை இயக்கும் மாபெரும் மனிதனின் சமுகநிலை இயக்க ஆற்றல் இந்த 12- பாவகங்களே என்பதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். 


இங்கு மிக முக்கியமாக மற்றொரு விஷயம் நட்சத்திரம். நட்சத்திரம் என்றால் என்ன? அது ஒரு சூரிய குடும்பம் அவ்வளவு தான். நம்முடைய சூரிய குடும்பம் போல் பல சூரிய குடும்பங்கள் இருக்கிறது. இது போல் இருக்கக்கூடிய நட்சத்திர கூட்டங்களில் பூமியை சுற்றியுள்ள கிரகங்கள் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறது என்பதை வைத்தும் இந்த 12 பாவகம் நம்மை இயக்கும் என்பதே இயற்கையின் துல்லியம் நிறைந்த எதார்த்த உண்மை.


எனவே நாம் ஜோதிடம் என்னும் இறந்த கால எதிர்கால அறிக்கையை கணித்து எழுதும் பொது 12 பாவகம் 9 கிரகம் 27 நட்சத்திரம் என்பதை எடுத்துக்கொள்கிறோம். இதில் 27 நட்சத்திரங்களின் உதவியுடன் அதாவது பல வண்ணம் கொண்ட கற்களின் உதவியுடன் நம்முடைய 12 பாவகம் என்னும் வீடு அமைந்து கிரகங்களின் கதிரிக்க சக்தியை வாங்கி வீட்டில் வாழும் நம்மை இயக்கி கொண்டு இருக்கிறது என்பதே எதார்தமான உண்மை. astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!

அனைவருக்கும் வணக்கம்அனைவருக்கும் வணக்கம் இந்த வலைப்பதிவின் மூலமாக ஒரு மனிதனின் எதிர்கால அறிக்கையை (ஜோதிடம்) கணித்தும் தெளிவான வழிகாட்டுதலும் செய்து தரப்படும்.

மேலும் இத்தளம் மற்ற ஜோதிட தளத்தை போன்று இருக்காது இது சமுதாயத்தில் ஒரு மனிதன் நான் என்ன செய்வது ஒன்றுமே புரியவில்லையே என்று தத்தலிக்கும் அனைத்து தரப்பினருக்கும் இது உதவி செய்யும் என்பதை இத்தளம் முதலில் பதிவு செய்கிறது.

ஜோதிடம் என்பதை மக்கள் தவறாக புரிந்துள்ளனர் எனவே இத்தளம் ஜோதிடம் என்பது மெய்யே ஒவ்வொரு மனிதனின் எதிர்கால அறிக்கை முற்றிலும் மாறுபட்டதே என்பதை இத்தளம் பதிவு செய்யும்.

பாகை கணிதம் செய்து கேள்விகளுக்கு  100% சரியான பதில்கள் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும்.


வாழ்க்கையில் துயரத்தை அனுபவிக்கும் நண்பர்கள் நாம் எடுக்கும் முடிவு சரியானதா? தவறானதா ? என்று குழப்பத்தில் இருக்கும் நண்பர்கள் இத்தளத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளாம் என்பதையும் இத்தளம் பதிவு செய்கிறது.

எனவே நண்பர்கள் தங்களின் 
பிறந்த இடம் : xxxxxxx 
பிறந்த நேரம் : --.--AM or PM 
பிறந்த தேதி.: --/--/----

இத்தளத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் தங்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தரப்படும் என்பதை சமுதாய நோக்கோடு இத்தளம் பதிவு செய்கிறது.

astrorj4@gmail.com
 +9-19698729894 
இறையருள் என்றும் நம்துனை நிற்கும்!